இந்தியாவே இந்த பைக்கிற்காக தான் வெயிட்டிங்! நாளை வெளியாகும் இந்த பைக்கில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் பைக்கின் என்250 வெர்ஷன் பைக்கை அப்டேட் செய்து நாளை பொதுவெளியில் விற்பனைக்காக அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பைக்கில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட அப்டேட்கள் வர உள்ளன. இப்படியாக நாளை அறிமுகமாகும் இந்த பஜாஜ் பல்சர் என்250 பைக்கில் என்னென்ன விஷயங்களை எல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் என்250 பைக்கை ஏப்ரல் 10ம் தேதி அதாவது நாளை அப்டேட் செய்து வெளியிடப் போகிறது. இதற்காக பஜாஜ் நிறுவனம் பல்வேறு ஊடகங்களுக்கு அழைப்பிதழ்களை அனுப்பி உள்ளது. இதனால் இந்த பைக்கின் அறிமுகம் என்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இந்த பைக்கில் என்னென்ன அப்டேட்களை எதிர்பார்க்கலாம் என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

இந்த பைக்கின் ஒட்டுமொத்த டிசைன் மற்றும் அளவுகள் எல்லாம் பழைய பைக் மாதிரி தான் இருக்கும் என தெரிகிறது. முக்கியமாக இந்த பைக்கின் டிசைனில் ஸ்லீக்கான சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்டு வரப்பட உள்ளது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன் உடன் இந்த டிஸ்ப்ளேவில் நேவிகேஷன், கால் நோட்டிபிகேஷன் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற உள்ளன.
இந்த பைக்கின் முன்பக்க சஸ்பென்ஷனை பொருத்தவரை தலைகீழாக பொருத்தப்பட்ட யூஎஸ்டி ஃபோர்க் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பைக்கிற்க்கு நல்ல ஸ்டெபிலிட்டியையும் ஸ்போர்ட்டியரான ஃபீலையும் கொடுக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. இதேபோல் தான் என்எஸ்200 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்க சஸ்பென்ஷனை பொருத்தவரை மோனோஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய மாடல் பைக்கில் இரண்டு வீல்களிலும் பீட்டல் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பைக்கின் பிரேக் திறனை அதிகரிக்க வழங்கப்படுகிறது. மேலும் முக்கியமாக இதில் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்படுகிறது. இது அனைத்து வேரியன்ட்களிலும் இருக்கும் படி அந்நிறுவனம் இந்த பைக்கை வடிவமைத்துள்ளது. மேலும் இந்த பைக்கில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
இந்த பைக்கின் இன்ஜினை பொறுத்தவரை 249.07 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 24.5 எச்பி பவரையும் 21.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. நாளை இந்த பைக்கின் அறிமுகத்தின் போது தான் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எல்லாம் நிச்சயம் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
இன்று இளைஞர்கள் மத்தியில் பல்சர் பைக் மீது அதிக மோகம் இருப்பதால் இந்த பல்சர் 250 பைக் இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறைந்த பவர் கொண்ட பைக்குகளை இன்றைய இளைஞர்கள் தவிர்த்து வருகின்றனர். புல்லட் போன்ற அதிக பவர் கொண்ட பைக்குகளை விரும்பி வரும் நிலையில், இந்த 250சிசி பைக் நிச்சயம் இளைஞர்களை கவர வாய்ப்புள்ளது.
400 சிசி கொண்ட பைக்குகளை வாங்கினால் அதை இந்திய சாலைகளில் ஓட்டுவது சவாலான காரியமாக இருக்கிறது. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே இந்த பைக்கில் முழு திறனை கொண்டு ஓட்ட முடிகிற சூழ்நிலை இருப்பதால், அதிக திறனும் இல்லாமல் அதே நேரம் குறைந்த திறனும் இல்லாமல் இது போன்ற 250சிசி இன்ஜின் திறன் இந்தியாவிற்கு ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பைக் நாளை அறிமுகமாகும் போது தான் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை எல்லாம் வெளியாகும். முக்கியமாக இந்த பைக்கின் விலை குறித்த விபரங்கள் எல்லாம் வெளியாகும். பெரிய அளவில் விற்பனை இருக்கும் பைக்கை விட விலையில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள பைக் ரூபாய் 1.5 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இளைஞர்களை ஈர்க்கும் வகையிலாக இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த பைக்கில் அறிமுகத்திற்கு பிறகு இந்தியாவில் இளைஞர்கள் பலர் கவனத்தை ஈர்த்து இந்த பைக் அதிக எண்ணிக்கையில் விற்பனையாக வாய்ப்புகள் உள்ளன. இளைஞர்களை கவரும் விதமான பல்வேறு அப்டேட்களும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









