இவ்வளவு கம்மியான விலையில் எந்த பைக்கும் கிடைக்காது! புதிய பல்சரின் அறிமுகத்தை பற்றி தான் எல்லா பக்கமும் பேச்சு

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தில் இருந்து விலையுயர்ந்த பல்சர் பைக்காக பல்சர் என்.எஸ்400 இசட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய & விலையுயர்ந்த பல்சர் பைக்கிற்கு போட்டியாக டிரையம்ப் ஸ்பீடு 400, ஹீரோ மேவ்ரிக் 440, டோமினார் 400 மற்றும் கேடிஎம் 390 ட்யூக் உள்ளிட்ட பைக்குகள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன.

இவை மட்டுமின்றி, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்குகளும் ஒரு வகையில் புதிய பல்சர் என்.எக்ஸ்400 இசட் பைக்கிற்கு போட்டியாக உள்ளன. என்ஜினை பொறுத்தவரையில், புதிய பல்சர் என்.எஸ்400 இசட் பைக்கில் 373.3சிசி சிங்கிள்-சிலிண்டர், DOHC, 4-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.

pulsar ns400 z rival bikes

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,800 ஆர்பிஎம்-இல் 39.42 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 35 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. பல்சர் என்.எஸ்400 இசட் பைக்கிற்கு போட்டியாக உள்ள மற்ற பைக்குகளை ஒப்பிட்டு பார்த்தால், ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கை தவிர்த்து மற்றவை அனைத்திலும் லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஹீரோ மேவ்ரிக் 440 மற்றும் ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்குகளில் மட்டும் ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதேபோல், இந்த இரு பைக்குகளில் என்ஜின் சிஸ்டத்தில் 2 வால்வுகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. ஆனால், மற்றவை அனைத்திலும் 4 வால்வுகள் இடம்பெறுகின்றன. என்ஜினின் பவர் அவுட்-புட்டை பொறுத்தவரையில், கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் சுமார் 45.3 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது.

pulsar ns400 z rival bikes

அதேபோல், டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கிலும் 40 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். என்ஜின் வெளிப்படுத்தும் டார்க் திறனிலும் கேடிஎம் 390 ட்யூக் முன்னிலை வகிக்கிறது. புதிய பல்சர் என்.எஸ்400 இசட் உள்பட இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் அனைத்து பைக்குகளிலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் என்ஜினுடன் இணைக்கப்படுகிறது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், அனைத்து பைக்குகளிலும் ஸ்லிப்பர் க்ளட்ச்சை பெறலாம்.

புதிய பல்சர் என்.எஸ்400 இசட், ஸ்பீடு 400, அப்பாச்சி ஆர்டிஆர்310, 390 ட்யூக் பைக்குகளில் மட்டும் ரைடு-பை-வயர் தொழிற்நுட்பம் வழங்கப்படுகிறது. ஆனால், தொழிற்நுட்ப அம்சங்களில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310 ஆனது டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், பை-டைரக்‌ஷ்னல் குயிக் ஷிஃப்டர், ஹீட்டட் & கூல்டு சீட், டைனாமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் என பல்வேறு தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன.

pulsar ns400 z rival bikes

அதேபோல், அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கில் மட்டுமே ரைட் மோட்கள் கொடுக்கப்படுகின்றன. மற்ற பைக்குகளை காட்டிலும் பஜாஜ் டோமினார் 400 மற்றும் ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்குகள் நீளம் அதிகமானவைகளாக உள்ளன. ஆனால், மற்றவை அனைத்தை காட்டிலும் டோமினார் 400 பைக்கில் கிரவுண்ட் கிளியரென்ஸ் குறைவாக உள்ளது.

ஹீரோ மேவ்ரிக் 440 மற்றும் ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்குகள் மட்டும் வயர் ஸ்போக் ஆப்ஷனிலும் கிடைக்கின்றன. மற்றவை, அலாய் சக்கரங்களில் மட்டுமே கிடைக்கின்றன. அதேபோல், சஸ்பென்ஷனுக்கு இந்த இரு பைக்குகளில் மட்டும் பின்பக்கத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் கொடுக்கப்படுகின்றன. மற்றவைகளில் மோனோ-ஷாக் வழங்கப்படுகிறது. மேவ்ரிக் 440 பைக்கில் மட்டுமே முன்பக்க சஸ்பென்ஷனுக்கு வித்தியாசமாக ஆர்.எஸ்.யு டெலெஸ்கோபிக் கொடுக்கப்படுகிறது.

pulsar ns400 z rival bikes

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் டோமினார் 400 பைக்கை தவிர்த்து, இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் மாடர்ன் பைக்குகள் ஆகும். அதாவது, இவை சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. டோமினார் 400 பைக் கூட குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு விடுகிறது. இந்த பைக்குகளில் விலை குறைவானவை என்று பார்த்தால் புதிய பஜாஜ் பல்சர் என்.எஸ்400 இசட் ஆகும். ஏனெனில் இதன் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.85 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, May 3, 2024, 22:42 [IST]
English summary
Bajaj pulsar ns400 z and its rival bikes check full comparison here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X