பஜாஜ் உருவாக்கியதிலேயே பவர்ஃபுல்லான பல்சர் பைக்!! நெருக்கமாக பார்க்க பைக் எப்படி இருக்கு? வீடியோ!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் ஆற்றல்மிக்க பல்சர் பைக்காக புதிய என்.எஸ்400 இசட் பைக்கை மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய பல்சர் பைக்கின் முக்கிய சிறப்பம்சம் அதன் குறைவான விலை ஆகும்.
ஏனெனில், புதிய பல்சர் என்.எஸ்400 இசட் பைக்கின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.85 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பல்சர் பைக்கை ஓர் சிறிய நிகழ்ச்சி மூலமாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நமது டிரைவ்ஸ்பார்க் குழுவும் கலந்து கொண்டோம். அப்போது நாங்கள் காட்சிப்படுத்தியவற்றை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.
இந்த வீடியோவில் புதிய பல்சர் என்.எஸ்400 இசட் பைக்கை மிக நெருக்கமாக காணலாம். மேலும், இந்த வீடியோவில் பைக்கை பற்றிய விபரங்களையும் குறிப்பிட்டுள்ளோம். பல்சர் என்.எஸ்400 இசட் பைக்கில் 373.3சிசி சிங்கிள்-சிலிண்டர், DOHC, லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 39.42 பிஎச்பி மற்றும் 35 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது.

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ரைடு-பை-ஒயர் எலக்ட்ரானிக் த்ரோட்டில் மற்றும் 4 விதமான ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன. புதிய பல்சர் என்.எஸ்400 இசட் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் ரூ.5 ஆயிரத்தை செலுத்தி பைக்கை புக் செய்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








