பல்சர் என்எஸ்400இசட் ஓட்டி பார்க்க எப்படி இருந்துச்சு? பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்போர்ட்ஸ் பைக்கின் வீடியோ!
பஜாஜ் நிறுவனத்தின் புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன மாடல்களில் பல்சர்-ம் ஒன்றாகும். இந்த பைக் மாடலிலேயே, இருப்பதிலேயே மிக பெரிய எஞ்சின் கொண்ட புதிய பல்சர் பைக் மாடலாக என்எஸ்400இசட்-ஐ, பஜாஜ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ரூ. 1,85,000 என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்த பைக்கையே சமீபத்தில் ரைடு ரிவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இதன் வாயிலாக பைக் பற்றிய பல்வேறு முக்கிய தகவல்களை நாங்கள் அறிந்துக் கொண்டோம். அதையே இங்கே வீடியோவாக உங்களுக்காக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் பெரிய எஞ்சின் கொண்ட புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்400இசட் பைக் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
இந்த பைக்கில் 373 சிசி திறன் கொண்ட எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 40 பிஎஸ் மற்றும் 35 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதனால்தான் இருப்பதிலேயே அதிக பவர்ஃபுல்லான பைக் மாடலாக இது பார்க்கப்படுகின்றது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகளில் புதிய பல்சர் என்எஸ்400இசட் விற்பனைக்குக் கிடைக்கின்றது. குளாஸ்ஸி ரேசிங் ரெட் (Glossy Racing Red), ப்ரூக்ளின் பிளாக் (Brooklyn Black), பியர்ல் மெட்டாலிக் ஒயிட் (Pearl Metallic White) மற்றும் பியூடர் கிரே (Pewter Grey) ஆகிய நிற தேர்வுகளே அவை ஆகும்.


Click it and Unblock the Notifications








