பஜாஜ் பல்சர் பைக்கில் உள்ள Z என்ற எழுத்திற்கு என்ன அர்த்தம் தெரியுமா? இதுல இவ்வளவு இருக்குதா?

பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய பெரிய மற்றும் பவர்ஃபுல் பல்சர் பைக்கிற்க்கு அந்நிறுவனம் பஜாஜ் பல்சர் என்எஸ் 200 Z என பெயர் வைத்துள்ளது. இதில் Z என்ற பெயர் பஜாஜ் நிறுவனத்தின் புதிய பெயராக இருக்கிறது. இந்த புதிய பல்சர் பைக்கில் மட்டும் இது இடம்பெறுவதற்கான காரணம் என்ன? இந்த இசட் என்பதற்கு என்ன அர்த்தம்? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த பைக்காக இருக்கிறது. இந்திய மக்கள் பலர் இந்த பைக்கை வாங்க வேண்டும் என்பதை பெரும் கனவாக வைத்திருக்கிறார்கள். சிறுவயது முதலை கனவில் இருந்தவர்கள் எல்லாம் தற்போது வளர்ந்து சம்பாதிக்க துவங்கி இந்த பைக்கை வாங்கி தங்கள் கனவை நிறைவேற்றி வருகிறார்கள்.

Bajaj Pulsar NS400Z

இதனால் நிறுவனத்தின் பல்சர் பைக் தொடர்ந்து சிறப்பான விற்பனையில் இருக்கிறது. இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கை அப்டேட் செய்து இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய மற்றும் பவர்ஃபுல்லான பைக்காக பஜாஜ் பல்சர் என்எஸ் 200 Z என்ற பைக்கை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இது பல்சர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இந்த பைக்கை அறிமுகப்படுத்தும்போது அறிமுக நிகழ்ச்சியில் இந்த பைக்குக்கு ஏன் Z என்ற பெயரை வைத்துள்ளார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. பஜாஜ் நிறுவனத்தில் என்எஸ் சீரியஸ் பைக்குகள் ஏற்கனவே விற்பனையாகி வருகின்றன. இந்த பைக் 400 சிசி செக்மென்ட் பைக் என்பதால் என்எஸ் 400 என்ற பெயரை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் Z என்ற எழுத்து எதற்காக வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக புரியவில்லை.

Bajaj Pulsar NS400Z

இதன் காரணமாக அறிமுக விழாவின் போது இந்த கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு அந்நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதன்படி பஜாஜ் நிறுவனம் இந்த Z என்ற எழுத்து தனது புதிய ரக மோட்டார் பைக்குகளையும் துவக்கமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரிசையாக பஜாஜ் நிறுவனம் வெளியிடும் பல்வேறு பைக்குகளில் இந்த Z என்ற பெயர் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த Z என்ற பெயருக்கு பின்னால் எந்த அர்த்தம் இருக்கிறது என்று என்பதை பஜாஜ் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. Z என்பது குறிப்பிட்ட எதையாவது குறிக்கும் விஷயமா அல்லது இது சாதாரண பெயர்தானா என்ற விரிவான விபரத்தை அந்நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால் வருங்காலங்களில் வரும் பைக்குகளில் இது இடம் பெறலாம் என தெரிவித்துள்ளது.

Bajaj Pulsar NS400Z

பஜாஜ் நிறுவனத்தின் இந்த என்எஸ் 200 Z பைக்கை பொறுத்தவரை ரூபாய் 1.85 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது 373.27 சிசி திறன் கொண்ட இன்ஜினை கொண்டதாக இருக்கிறது. இது 40 பிஎஸ் பவரையும் 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளன. மேலும் டூயல் சேனல் எபிஎஸ்-ம் வழங்கப்பட்டுள்ளது. ரைட் மோடுகளாக ரெயின், ரோடு, ஆஃப் ரோடு, ஸ்போர்ட்ஸ் ஆகிய ரைட் மோடுகள் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விதமான கால சூழ்நிலைகளிலும் இந்த பைக் சிறப்பாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன் இருக்கிறது. இதன் மூலம் உங்கள் செல்போனை இந்த பைக்கின் டிஸ்பிளேவில் கனெக்ட் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பைக் குறித்த பல்வேறு தகவல்களை உங்கள் செல்போன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் உங்கள் செல்போனுக்கு வரும் கால், மெசேஜ் போன்ற விஷயங்கள் எல்லாம் பைக்கின் முன்பக்க டிஸ்ப்ளேயில் தெரிவிக்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் மக்கள் பலரின் கவனத்தை ஈர்க்கும் பைக்காக இருக்கிறது. இந்த பைக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Z என்ற எழுத்து பலருக்கும் குழப்பத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. இதற்கான காரணம் தெரியாமல் முழித்து கொண்டு இருந்தார்கள். உண்மையான காரணம் பஜாஜ் நிறுவனத்தால் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 7, 2024, 12:07 [IST]
English summary
Bajaj pulsar ns400z code z reveal details and meaning
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X