பல்சர் பைக்கில் பெட்ரோலுக்கு பதிலாக இந்த எரிபொருளையும் பயன்படுத்தலாம்! மைலேஜ் அதிகரிக்கும் விலையும் கம்மி!
பஜாஜ் நிறுவனம் இருப்பதிலேயே பெரிய மற்றும் பவர்ஃபுல்லான பல்சர் பைக் தனது NS400Z என்ற பைக்கை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ரூபாய் 1.85 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டிற்கு அறிமுகமாகியுள்ள இந்த பைக் மக்களை கவர்ந்துள்ள நிலையில், இந்த பைக்கிற்க்கு பெட்ரோலுக்கு பதிலாக மற்றொரு எரிபொருளையும் பயன்படுத்த முடியும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பல்சர் பைக் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற பைக்காக இருக்கிறது. இந்த பைக்கை இளைஞர்கள் பலர் விரும்பி வாங்கி வருகிறார்கள். சுமார் 20 ஆண்டுகளாக இந்த பைக் மார்க்கெட்டில் சிறப்பான விற்பனையில் இருந்து வருகிறது. இந்த பல்சர் என்ற பெயரை கேட்டாலே இளசுகள் எல்லாம் சிறகடிக்கும் அளவிற்கு சிறந்த பைக்காக நீண்ட ஆண்டுகளாக விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் இந்த பல்சர் பைக்கின் அடுத்த புதிய பரிணாமமாக மிகப்பெரிய மற்றும் அதிக பவர்ஃபுல்லான பல்சர் பைக்காக NS400Z என்ற நேக்கட் ஸ்ட்ரீட் பைட்டர் பைக்கை பஜாஜ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. இந்த செக்மெண்டில் பல்சர் பைக் வர வேண்டும் என்ற ஆவல் பல்சர் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்த நிலையில், இந்த செக்மென்டில் தனது பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
பைக்கின் விலையும் ரூபாய் 1.85 லட்சம் தான் என்பதால் பலர் இந்த பைக்கை வாங்க வரிசையில் காத்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த பைக்கிற்கான புக்கிங் துவங்கிய நிலையில் ஏகப்பட்ட பேர் இந்த பைக்கை புக் செய்ய துவங்கி விட்டனர். இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் இந்த பல்சர் பைக் இன்ஜினில் சில முக்கிய அம்சங்களை புகுத்தி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த புதிய பல்சர் பைக்கில் நாம் இப்பொழுது பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தும் சாதாரண பெட்ரோலுக்கு பதிலாக இ-20 ரக பெட்ரோலையும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோலை பயன்படுத்தும் போது இன்னும் அதிகமான மைலேஜ் தரும் எனவும், அதே நேரம் இ-20 பெட்ரோலின் விலை தற்போது உள்ள பெட்ரோல் விட குறைவான விலையில் விற்பனையாகும் என்பதால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் என்றால் என்ன அதை எப்படி பெறுவது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். பொதுவாக பெட்ரோல் என்றால் அதில் எத்தனால் கலப்படம் என்பது செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் விற்பனையாகும் பெட்ரோல்களில் 10% வரை எத்தனால் கலப்படம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசு 20% எத்தனாலை கலந்து பெட்ரோலை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்த வேண்டும் என்றால் வாகனங்களின் இன்ஜின் தன்மை அதற்கு தகுந்தார் போல் இருக்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட வாகனங்கள் இந்த இ-20 பெட்ரோல் மூலம் இயங்கும் வகையில் தங்கள் இன்ஜினை வடிவமைத்துள்ளனர். அப்படியாக தான் இந்த புதிய பல்சர் NS400Z பைக்கின் இன்ஜினும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எத்தனால் கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோல் குறைவான அளவிலேயே தயாரிக்கப்படுகிறது. தற்போது இந்தியா முழுவதும் உள்ள ஜியோ பிபி பெட்ரோல் பங்குகளில் இந்த பெட்ரோல் விற்பனையாகி வருகிறது. அதுவும் குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளில் மட்டுமே இது விற்பனையாகிறது. இதில் 20 சதவீதம் எத்தனால் கலந்துள்ளதால் இது பெட்ரோல் விலையை விட குறைவான விலையில் விற்பனையாகிறது அதே நேரம் எத்தனால் கலப்படம் செய்யப்பட்டுள்ளதால் இந்த பெட்ரோலை பயன்படுத்தும்போது வாகனத்தின் மைலேஜ் அதிகரிக்கும்.
பஜாஜ் பல்சர் NS400Z பைக் இன்ஜினை பொறுத்தவரை 373 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 40பிஎஸ் பவரையும் 35என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 6ஸ்பீடு கியர் பாக்ஸ், ஸ்லீப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக 154 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் லிட்டருக்கு 27கிமீ வரை மைலேஜ் தரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல் தற்போது மற்ற பங்குகளில் விற்பனையாகவும் விலையை விட இ-20 பெட்ரோல் விலை குறைவாக இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை இ-20 பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 87 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. மேலும் இந்த ரக எரிபொருளை பயன்படுத்துவதன் மூலம் வாகனத்தின் மைலேஜ் அதிகரிக்கும் இது பலருக்கும் தெரியாத ரகசியமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









