இதுதான் பஜாஜின் கம்மி விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! கேமிரா கண்கள்ல சிக்கிருச்சு! ஓலா காணாம போறது கன்ஃபார்ம்போல!
பஜாஜ் (Bajaj) நிறுவனம் சீக்கிரமே இந்தியாவில் சில புதிய இரண்டு சக்கர வாகன மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. நிறுவனம் 6 புதிய பல்சர் பைக் மாடல்களையும், ஓர் விலை குறைவான பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் சிஎன்ஜி பைக் மாடல் ஒன்றையும் நாட்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இதில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை சிஎன்ஜி பைக்கும், மலிவு விலை சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புகைப் படங்கள் (Bajaj Chetak Spy Pictures) வெளியாகி இருக்கின்றன.

Source: Autocar India டீலர்களுக்காக எடுத்து வரப்பட்ட அந்த வாகனம் சாலையில் தோன்றியபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களே தற்போது வெளியாகி இருக்கின்றன. இந்தியாவில் சமீபத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் எஸ்1 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை மிகப் பெரிய அளவில் குறைத்தது. ரூ. 69,999க்கு இது தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதன் விளைவாக இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக ஓலா எஸ்1 எக்ஸ் மாறியது. இதற்கு போட்டியளிக்கும் நோக்கிலேயே பஜாஜ் அதன் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் புதிய மலிவு விலை தேர்வை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இதன் வருகை இன்னும் ஒரு சில தினங்களில் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே அதன் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. விலை குறைவாக இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருந்தாலும், பிரீமியம் லுக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேவேளையில், விலைக் குறைப்பதற்கான பல வேலைகளை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பஜாஜ் பார்த்திருப்பது உறுதியாகி உள்ளது.
அந்தவகையில், அலாய் வீல்கள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் நீக்கப்பட்டு இருக்கின்றன. அலாய் வீல்களுக்கு பதிலாக ஸ்டீல் வீல்களும், டிஸ்க் பிரக்குகளுக்கு பதிலாக டிரம் பிரேக்குகளே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, முழு டிஜிட்டல் டிஎஃப்டி திரைக்கு பதிலாக வட்டவடிவ எல்சிடி திரையே இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதேபோல் குறைவான ரேஞ்ஜை வழங்கக் கூடிய சிறிய பேட்டரி பேக்கையே இதில் பஜாஜ் வழங்கி இருக்கும் என்பதும் யூகிக்க முடிகின்றது. இதனால்தான் இந்த பஜாஜ் சேத்தக் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் அலாய் வீல், பேட்டரி பேக் மற்றும் திரை மட்டுமல்ல இன்னும் பல டிஜிட்டல் அம்சங்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன.
ஸ்மார்ட் சாவிக்கு பதிலாக வழக்கமான சாவியே இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல இழப்புகளை சேத்தக் விலை குறைப்பிற்காக சந்தித்து இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது விற்பனையில் இருக்கும் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு விதமான தேர்வுகளில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

பிரீமியம் மற்றும் அர்பேன் ஆகியவையே அவை ஆகும். இதில் பிரீமியமே சற்று காஸ்ட்லியான தேர்வாக உள்ளது. அதன் விலை ரூ. 1.47 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு ரூ. 20 ஆயிரம் வரை சிறப்பு சலுகையை பஜாஜ் வழங்கி இருக்கின்றது.
இதில் ஓர் முழு சார்ஜில் 126 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக 3.2 kWh பேட்டரி பேக்கே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 73 கிமீ ஆகும். அர்பேன் ரூ. 1.23 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இதற்கு ரூ. 8,300க்கான சிறப்பு சலுகை வழங்கப்படுகின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 113 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 73 கிமீ ஆகும். இதைவிட விலை குறைவாகவே புதிய தேர்வு விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பஜாஜ் அதன் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









