பல்சருலேயே இது தனி ரகமா இருக்க போகுது.. கேடிஎம் ஆர்சி 390, யமஹா ஆர்15 எல்லாம் இனி விற்பனையான மாதிரிதான்..

பல்சர் (Pulsar), இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்களின் பிரியமான பைக் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பெயரின்கீழ் பல்வேறு தேர்வுகளை பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், 125 சிசி தொடங்கி 400 சிசி வரையிலான திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பல்சர் பைக் மாடலில் புதிய தேர்வு ஒன்றை பஜாஜ் நிறுவனம் விரைவிலேயே விற்பனைக்கு இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் அந்த புதுமுக பைக் மாடலின் டீசர் (Teaser) படத்தை வெளியிட்டு இருக்கின்றது. டீசர் படம் முழுமையாக பைக்கை வெளிக்காட்டும் வகையில் இல்லாததால் அது என்ன மாடல் என்பதை உறுதியாக கூற முடியவில்லை. அதேவேளையில், இப்போ விற்பனையில் இருக்கும் மற்ற பல்சர் பைக்குகளைக் காட்டிலும் இது தனி ரகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Bajaj teases new pulsar motorcycle

இது சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்ட பல்சர் என்எஸ் 400இசட் (NS 400Z) மாடலின் புதிய வெர்ஷனாக இருக்கும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பல்சர் ஆர்எஸ் 400இசட் (RS 400Z) என்கிற பெயரில் அது சந்தையில் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. மேலும், முழுமையாக அழகான பேனல்களால் அலங்கரிக்கப்பட்ட மாடலாகவே இது இருக்கப்போகின்றது.

இப்போதைய நிலவரப்படி பல்சர் ஆர்எஸ் வரிசையில் பல்சர் ஆர்எஸ் 200 மாடல் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் 200 சிசி திறன் கொண்ட பைக் மாடல் ஆகும். இதைவிட சற்று அதிக சிசி திறன் கொண்ட ஓர் பைக்காகவே ஆர்எஸ் 400இசட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் கேடிஎம் ஆர்சி 390 (KTM RC 390) மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 (TVS Apache RR310) உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

இவற்றிற்கு மட்டுமல்ல யமஹா ஆர்3 (Yamaha R3) மற்றும் ஆர்15 (R15) ஆகிய பைக் மாடல்களுக்கும் சவால்விடுக்கும் வகையிலேயே பஜாஜ் நிறுவனம் ஆர்எஸ் 400இசட் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. சந்தையின் தேவைக்கு ஏற்ப மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பலதரப்பட்ட சிறப்பம்சங்களை இந்த பைக்கில் பஜாஜ் ஆட்டோ வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, ரைடை மிகுந்த சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு இந்த பைக்கில் 43 மிமீ அளவுள்ள அப்சைடு-டவுன் ஃபோர்க், கோல்டன் நிறத்தில் வழங்கும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், பைக்கின் பின் பக்க வீலில் ப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எஞ்சினைப் பொருத்த வரை என்எஸ் 400இசட் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே மோட்டாரே இடம் பெற்றிருக்கும். 373.2 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு எஞ்சினே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 40 பிஎஸ் மற்றும் 35 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

தொடர்ந்து, இந்த பைக்கில் திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் திரை, ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத் தொடர்ந்து, எல்இடி ஹெட்லைட், ரைடு-பை வயர் த்ரோட்டில், சுவிட்சபிள் டிராக்சன் கன்ட்ரோல், அட்ஜெஸ்டபிள் கிளட்ச் மற்றும் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உள்ளிட்ட அம்சங்களும் இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பஜாஜ் பல்சர் பைக் மாடலுக்கு இளைஞர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே பல்சர் வரிசையில் புதிய மிகுந்த கவர்ச்சியான தோற்றம் கொண்ட பைக்கை அது விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிபார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, December 30, 2024, 22:17 [IST]
English summary
Bajaj set to launch new pulsar rs 400z teaser reveal potential advanced features
மேலும்... #bajaj auto #bajaj pulsar #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+