இவ்ளோ கம்மி விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா!.. ஓலாவிற்கு நேரடியாக சவால்விடும் பஜாஜ்.. இனிதான் ஆட்டமே ஆரம்பம்!
இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் (Bajaj), அதன் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலில் கிடைக்கம் தேர்வுகளை விரிவாக்கம் செய்திருக்கின்றது. புதிதாக சேத்தக் 2901 (Chetak 2901) எனும் தேர்வை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. முன்னதாக, சேத்தக் பிரீமியம் (Chetak Premium) மற்றும் சேத்தக் அர்பன் (Chetak Urbane) என்கிற இரண்டு தேர்வுகளில் மட்டுமே சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைத்து வந்தது. இந்த நிலையிலேயே சர்ப்ரைஸாக புதிய தேர்வு சேத்தக் 2901 இணைக்கப்பட்டு இருக்கின்றது.
இந்திய மின்சார இரண்டுசக்கர வாகன காதலர்களை கவரும் நோக்கில் மிகவும் குறைவான விலையில் இதை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அறிமுகமாக சேத்தக் 2901-க்கு 95 ஆயிரத்து 998 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 63 கிமீ ஆகும்.

அதேவேளையில் இதில் ஓர் முழு சார்ஜில் 123 கிமீ தூரம் வரை டிராவல் பண்ண முடியும். இதற்காக 2.88 kWh பேட்டரி பேக்கை பஜாஜ் வழங்கி இருக்கின்றது. சற்று சிறப்பம்சங்கள் குறைவாகே இதில் காணப்படுகின்றது. அதாவது, பிரீமியம் மற்றும் அர்பன் ஆகிய இரண்டு தேர்வுகளைக் காட்டிலும் குறைவான தொழில்நுட்ப வசதிகளையே சேத்தக் 2901 கொண்டிருக்கின்றது.
இதற்கு உதாரணமாக ஈகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் எனும் இரண்டு விதமான ரைடிங் மோட்கள் மட்டுமே அதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதுவும், டெக்பேக் (TecPac) எனும் பிரத்யேக பேக்கின் வாயிலாகவே இதனை பஜாஜ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. டெக்பேக் இல்லாத சேத்தக் 2901 இல் எகனாமி மோட் மட்டுமே இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மூன்றாவதாக ரைடிங் மோடாக ரிவர்ஸ் மோட்டும் சேத்தக் 2901 இல் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, வண்ண டிஜிட்டல் கன்சோல் இந்த தேர்வில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட திரையாகும். ரைடருக்கு தேவையான அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த திரை வழங்கும்.
இத்துடன், கூடுதல் சிறப்பான ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக டெக்பேக் எனும் பிரத்யேக வசதி வழங்கப்படுகிகின்றது. இதன் டெக்பக் வாயிலாக ஹில் ஹோல்டு, ரிவர்ஸ், ஸ்போர்ட் மற்றும் எக்கனாமி மோட் ஆகியவற்றை பஜாஜ் வழங்குகின்றது. இதுதவிர, செல்போனுக்கு வரும் தவல்களை அறிதல், மியூசிக்கை கன்ட்ரோல் செய்தல் மற்றும் ஃபாலோ மீ லைட் பயன்பாடு உள்ளிட்டவற்றையும் இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாகவே பஜாஜ் வழங்குகின்றது.
தினசரி பயன்பாட்டிற்கு உகந்த தேர்வே சேத்தக் 2901 ஆகும். இந்த தேர்வை ஒட்டுமொத்தமாக ஐந்த விதமான வண்ண ஆப்ஷன்களில் வாங்கிக் கொள்ள முடியும். இபோனி பிளாக் மெட் (Ebony Black Met), ரேசிங் ரெட் (Racing Red), சைபர் ஒயிட் (Cyber White), அசுரே ப்ளூ (Azure Blue) மற்றும் லைம் யெல்லோ (Lime Yellow) ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும்.
இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவே பஜாஜ் நிறுவனம் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதில் அதிகம் சிறப்பம்சங்களைத் தாங்கிய தேர்வாக பிரீமியம் இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 126 கிமீ ரேஞ்ஜை வழங்கும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 73 கிமீ ஆகும். ஹில் ஹோல்டு, ரிவர்ஸ் மோட், செயலி, ஃபாப் கீ போன்ற ஏகப்பட்ட சிறப்புகளை அது தாங்கி இருக்கும்.
இதற்கு அடுத்தபடியாக அர்பேன் உள்ளது. ஆனால், புதிய மலிவு விலை தேர்வான 2901 மற்றும் பிரீமியம் இரண்டைக் காட்டிலும் குறைவான ரேஞ்ஜை வழங்கும். இது ஓர் முழு சார்ஜில் 113 கிமீ ரேஞ்ஜையே வழங்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 73 கிமீ ஆகும்.
இதில் அர்பேன் ரூ. 1.23 லட்சத்திற்கும், பிரீமியம் ரூ. 1.47 லட்சத்திற்கும் விற்கப்படுகின்றது. இங்கு பார்த்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்லைன் மற்றும் ஷோரூம் இரண்டின் வாயிலாகவும் புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. விரைவில் இதன் டெலிவரி பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்திருப்பதை உணர்ந்தே பஜாஜ் நிறுவனம் இந்த மலிவு விலை தேர்வை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் வாயிலாக அது ஓலா எஸ்1 வரிசையில் விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








