மாசத்துக்கு ஒரு தடவை பெட்ரோல் போட்டா போதும்! இந்த பைக்கை வாங்குனா காசு செலவே ஆகாது!

இந்தியாவில் கணிசமான அளவுக்கு பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பலர் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் செலவு மிச்சப்படுத்துவது எப்படி என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். இதனால் புதிதாக வாகனம் ஆகும் போது அதிக மைலேஜ் தரும் பைக்குகளை தேர்வு செய்ய விரும்புகிறார்கள். புதிதாக பைக் வாங்கும் பலர் மைலேஜ் பிரதான விஷயமாக பார்க்கிறார்கள். இப்படியாக இந்தியாவில் விற்பனையாகவும் அதிக மைலேஜ் கொண்ட பைக் குறித்த விபரங்களை தான் காணப்போகிறோம்.

இந்திய மக்களுக்கு எரிபொருள் செலவு சிக்கனம் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களில் மைலேஜ் அதிகமாக இருக்கும் வாகனங்கள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. சமீப காலமாக பாதுகாப்பு விஷயத்திலும் இந்திய மக்கள் கவனமாக இருக்கிறார்கள் என்றாலும், மைலேஜ் மிக பிரதானமான விஷயமாக இருக்கிறது.

best mileage bikes in india

இந்நிலையில் புதிதாக பைக் வாங்கும் பலர் அதிக மைலேஜ் கொண்ட பைக்கை தான் வாங்க விரும்புகிறார்கள். பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதன் காரணமாக ஸ்கூட்டர் வாங்கும் பலர் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதேநேரம் பெட்ரோல் பைக்கை வாங்கும் பலர் அதிக மைலேஜ் தரும் பைக்கை தேடி வருகிறார்கள். இங்கே இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் இரண்டு பைக்குகள் குறித்த விபரங்களை வழங்கியுள்ளோம்.

பஜாஜ் பிளாட்டினா 100: பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா பைக் இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் பைக்குகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த பைக்கில் 102 சிசி சிங்கிள் சிலிண்டர் டிடிஎஸ்ஐ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 7.79 பிஎச்பி பவரையும் 8.34 என்னும் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

best mileage bikes in india

இந்த பைக்கின் மைலேஜ் கணக்கிடும்போது லிட்டருக்கு 72 கிலோமீட்டர் வரை மைலேஜ் வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது போக இந்த பைக்கின் பிரேக் அம்சத்தை பொருத்தவரை முன்பக்கமும், பின்பக்கமும் டிரம் பிரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பைக் ரூபாய் 61 ஆயிரம் முதல் ரூபாய் 66 ஆயிரம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

டிவிஎஸ் ஸ்போர்ட்: டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்போர்ட் பைக்கை பொறுத்தவரை பிஎஸ் 6 இன்ஜினுடன் தற்போது விற்பனையாகி வருகிறது. இந்த பைக்கில் 109.7 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் அதிக மைலேஜ் தரும் பைக்குகளில் ஒன்றாக இருக்கிறது. இதன் மூலம் இந்த பைக் 8.07 பிஎஸ் பவரையும் 8.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

best mileage bikes in india

இந்த இன்ஜின் மூலம் இந்த பைக் 70-80 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இன்ஜின் 4 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பிரேக்கை பொறுத்தவரை முன்பக்கமும், பின்பக்கமும் ட்ரம் பிரேக்குகள் தான் வழங்கப்பட்டுள்ளன. 10லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்கும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் ரூ59 ஆயிரம் முதல் ரூ 71 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது.

பெரும்பாலும் அதிக மைலேஜ் கொண்ட பைக்குகள் என்றால் அது எடை குறைவாக தான் இருக்கும். எடை குறைவாக இருந்தால் தான் பைக்குகளால் அதிக மைலேஜ் தர முடியும். அதே நேரம் இந்த பைக்குகளில் பொருத்தப்பட்டிருக்கும் டயர்களும் சிறியதாகவே இருக்கும். அதன் காரணமாக தான் இந்த பைக்கின் எரிபொருள் செலவு குறைவாக இருக்கிறது.

அதிக மைலேஜ் கொண்ட பைக்கை விரும்பும் மக்கள் பல்வேறு விதமான சமரசம் செய்து கொள்ள வேண்டிய தேவையும் இருக்கும். ஆனால் இந்த பைக்குகளில் எல்லாம் தினம் 35 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் நபர்கள் மாதம் ஒருமுறை முழு டேங்க் பெட்ரோல் போட்டால் போதும் அந்த பெட்ரோலை வைத்தே முழு மாதமும் ஓட்டிவிட முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக மைலேஜ் விரும்பும் பைக் விரும்பிகளுக்கு இந்த பைக்குகள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஆனால் இதில் அதிக நபர்களை ஏற்றி செல்லும் போதும் மிக மோசமான சாலைகளில் செல்லும்போதும் போதுமான டிரைவிங் அனுபவம் இல்லாமல் செல்லும் போதும் இதன் மைலேஜ் குறைய வாய்ப்பு இருக்கிறது. மற்ற போட்டி நிறுவனங்களின் பைக் தயாரிப்பை காட்டிலும் இந்த பைக்கில் தான் அதிக மைலேஜ் தருகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, July 20, 2024, 23:00 [IST]
English summary
Best mileage bikes india easy ride low cost
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X