ஓலாவ வச்சு செய்றதுக்குனே வந்திருக்காங்க! இந்த தனித்துவமான ஸ்கூட்டரோட விலை இவ்ளோதானா!!

ஆர்ஆர் குளோபல் (RR Global)இன் துணை நிறுவனமான பிகாஸ் (BGauss), இந்தியாவில் ஓர் தனித்துவமான ஸ்டைலிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஆர்யூவி 350 (RUV350) எனும் மாடலையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு உகந்த தயாரிப்பாக தங்கள் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயார் செய்திருப்பதாக பிகாஸ் தெரிவித்து இருக்கின்றது. தனித்துவான தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மட்டுமல்ல அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களைத் தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் பிகாஸ் ஆர்யூவி350-யை உருவாக்கி இருக்கின்றது. எனவே ரைடின்போதும் தனித்துவமான ரைடு அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆடுத்த மாதத் (ஜூலை) தொடக்கத்தில் இருந்து இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நாடு முழுவதும் உள்ள பிகாஸ் விற்பனையகங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிறுவனத்தின்கீழ் 120 விற்பனையகங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. அறிமுகத்தைத் தொடர்ந்து இதற்கு ரூ. 1,09,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Bgauss ruv350 electric scooter

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். நகர்ப்புற பயணத்தை மெருகேற்றும் விதமாக மேம்பட்ட பொறியியல் யுக்தியை பயன்படுத்தி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிகாஸ் தயார் செய்திருக்கின்றது. அந்தவகையில், உயர் செயல்திறன் கொண்ட இன்வீல் ஹைப்பர் டிரைவ் மோட்டார் ஸ்கூட்டரின் இயக்கத்திற்காக வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், மற்ற ஸ்கூட்டர்களைப் போல மோட்டாருடன் வீலை இணைக்க பெல்ட் வழங்கப்படவில்லை. நேரடியாக மோட்டாரே வீலுக்கு இயக்க ஆற்றலை வழங்கும் வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் விளைவாக மேம்பட்ட மற்றும் சிறந்த செயல்திறன் கிடைக்கும். குறிப்பாக சக்திவாய்ந்த மற்றும் மென்மையான பிக்-அப்பை இது வழங்கும்.

இதுதவிர, செங்குத்தான மற்றும் சாய்வான பாதைகளைக்கூட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிரமமின்றி சமாளிக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. எனவே மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களாலும் இதை வாங்கிக் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிக உறுதியான உலோகங்களைக் கொண்டு கட்டமைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

எனவே இதன் நீடித்துழைக்கும் தன்மை மிக சிறப்பானதாக இருக்கும் என தெரிகின்றது. அதேவேளையில், ரைடர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு இதன் வாயிலாகக் கிடைக்கும். சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக 16 அங்குல சக்கரங்கள் ஆர்யூவி 350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளன.

இது சற்று பெரியது என்பதால் பெரிய அளவு குழிகள் மற்றும் சீரற்ற சாலைகளைகூட இது அசால்டாக சமாளித்துவிடும். மேலும், மேம்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு, குண்டு மற்றும் குழியுமான சாலைகளில் சமாளிக்க ஏதுவாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. நவீன கால அம்சங்களான ஸ்மார்ட்போன் இணைப்பு போன்றவையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதன் மூலம் செல்போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அறிய முடியும். அதுதவிர, திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி, நேரடி வாகன கண்காணிப்பு, ஜியோ ஃபென்சிங், பகல் மற்றும் இரவு நேரங்களுக்கு தன்மையை மாற்றிக் கொள்ளும் திரை, ஆவணங்களை சேகரித்து வைத்துக் கொள்ளவும் முடியும்.

மேலும், புளூடூத் மற்றும் டெலிமாடிக்ஸ் போன்ற ஸ்மார்ட் இணைப்பு அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆர்யூவி 350 இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஆர்யூவி 350ஐ இஎக்ஸ் (RUV 350i EX), ஆர்யூவி 350 இஎக்ஸ் (RUV 350 EX) மற்றும் ஆர்யூவி 350 மேக்ஸ் (RUV 350 Max) ஆகியவையே அவை ஆகும்.

மூன்றிலுமே ஒரே மாதிரியான எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 75 கிமீ ஆகும். ஆனால், ரேஞ்ஜ் தருவதில் இவை மாறுபட்டுக் காட்சியளிக்கன்றன. அந்தவகையில், ஐ இஎக்ஸ் மற்றும் இஎக்ஸ் ஆகியவை ஓர் முழு சார்ஜில் 90 கிமீ ரேஞ்ஜையும், மேக்ஸ் அதிகபட்சமாக ஓர் முழு சாரஜில் 120 கிமீ ரேஞ்ஜையும் தரும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அறிமுக சிறப்பு சலுகையாக 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இன்சூரன்ஸ், ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரிக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி ஆகியவற்றை இலவசமாக வழங்க இருப்பதாக பிகாஸ் அறிவித்து இருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வான ஐ இஎக்ஸ்-க்கே பொருந்தும். மற்ற இரண்டு வேரியண்டுகளுக்கும் இந்த இரண்டு சிறப்பு சலுகைகளுடன் சேர்த்து ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள பிஜி இணைப்பு வசதியும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே பிகாஸ் அதன் தனித்துவமான தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் வருகை ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தர் எனெர்ஜி ஆகியவற்றிற்கு போட்டியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 25, 2024, 21:15 [IST]
English summary
Bgauss launches ruv350 electric scooter in india with advanced technology
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+