மத்த வண்டி மாதிரி கிடையாது! இந்த ஆர்யூவி 350-ல் என்ன இருக்குதுன்னு வீடியோவை முழுசா பாருங்க!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் மிகப்பெரிய அளவில் விரிவுவடைந்து வரும் நிலையில் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்த துவங்கிவிட்டன. அதன்படி பிகாஸ் என்ற நிறுவனமும் முதன்முறையாக ஆர்யூவி 350 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது. அதன்படி எங்கள் குழுவினர் புனேவில் உள்ள அந்நிறுவனத்தில் தயாரிப்பு ஆலைக்கு சென்று இந்த ஸ்கூட்டரை ஓட்டி பார்த்தோம். அப்பொழுது எங்களுக்கு கிடைத்த அனுபவத்தை வீடியோவாக ஆங்கில மொழியில் உங்களுக்காக வழங்கியுள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காண முடியும்.
இந்த ஆர்யூவி 350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை வழக்கமாக இந்தியாவில் பயன்படுத்தப்படும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போல இல்லாமல் இது அதிக பிராக்டிகல் அம்சங்கள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டருக்கு ஆர்யூவி அதாவது ரைடர் யூட்டிலிட்டி வாகனம் என பெயர் வைத்துள்ளார்கள். இதில் ஏகப்பட்ட வித்தியாசமான மற்றும் சிறப்பான அம்சங்கள் இருக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 135 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என ஏஆர்ஏஐ சான்று வழங்கியுள்ளது. ரியல் வேல்டில் இந்த ஸ்கூட்டரை ஓட்டும் போது 120 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கூட்டரின் விலையைப் பொறுத்தவரை ரூ 1.09 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








