ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! பிகாஸ் புது ஸ்கூட்டரை கொண்டுவர தேதி குறிச்சிட்டாங்க!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறிப்பாக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. இந்திய மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தனி சந்தை உருவாகியுள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க முன் வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி பிகாஸ் நிறுவனம் தனது ஆர்யூவி 350 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் முதன்முறையாக வெளியிட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் ஆர்யூவி ஸ்கூட்டர் ஆகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகன சந்தையை பிடிப்பதற்காக டூவீலர் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு விதமான தயாரிப்புகளை கொண்டு வரும் நிலையில், பிகாஸ் என்ற நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த பல்வேறு வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிதாக ஆர்யூவி 350 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது.

BGauss RUV350

பிகாஸ் நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டு வரப்போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அந்நிறுவனம் இந்த ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ பெயரை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்கூட்டருக்கு ஆர்யூவி 350 என நிறுவனம் பெயர் வைத்துள்ளது. முதல் முறையாக இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. வரும் 25ஆம் தேதி இந்த ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாஸ் நிறுவனத்தின் இந்த ஆர்யூவி 350 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டில் புதிய நிலையை எட்டி பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிகாஸ் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சில புகைப்படங்களையும் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதை பார்க்கும் போது அந்நிறுவனத்தின் டி-15 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போல இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிகாஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரை தான் இந்தியாவின் முதல் ஆர்யூவி ஸ்கூட்டர் என ஏற்கனவே கூறியிருந்தது. தற்போது இந்த ஸ்கூட்டரின் லுக்கை பார்க்கும் போது இது ஒக்கினவா ஒக்கி-90 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக களமிறங்கும் என தெரிகிறது. பிகாஸ் நிறுவனத்தின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பிகாஸ் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் போது முக்கியமாக பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் தரம் ஆகியவற்றை கருத்தில் வைத்து தயாரித்தது. அதனால் இந்த மூன்று விஷயங்களும் இந்த ஆர்யூவி 350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நிச்சயம் மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட வடிவமைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பிகாஸ் நிறுவனத்தின் இந்த ஆர்யூவி 350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போல 16 இன்ச் அலாய் வீலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் ரைடு குவாலிட்டியில் சிறப்பாக இருக்கும் முக்கியமாக மோசமான சாலைகளிலும் இந்த ஸ்கூட்டர் சிறப்பாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இதனால் இந்த ஸ்கூட்டரில் செல்லும் பயணிகள் எந்தவித ஸ்டிரஸையும் அனுபவிக்காமல் சுலபமாக பயணிக்க முடியும்.

இந்த பிகாஸ் ஆர்யூவி 350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிகப்பெரிய ஃப்ளோர் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிக பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். அதே போல இதன் சீட்டும் நீளமாக வழங்கப்பட்டுள்ளது. சீட்டுக்கு கீழே உள்ள ஸ்டோரேஜ் அதிக பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் வழங்கப்பட்டுள்ளது என எதிர்பார்க்கலாம்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பு டி-15 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதால் அதில் உள்ள அதே 3.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் இதிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரேஞ்ச் மற்றும் மற்ற விபரங்கள் எல்லாம் இதன் அறிமுகத்தின் போது தான் தெரியவரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான மார்க்கெட் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த முயன்று வருகிறார்கள். அதில் பிகாஸ் நிறுவனமும் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. ஏற்கனவே நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனையாகி வரும் நிலையில், இந்த ஸ்கூட்டர் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 3, 2024, 19:29 [IST]
English summary
Bgauss ruv350 electric scooter revealed launch date announced
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+