பைக் ஹெல்மெட்டில் இது இல்லைனா உங்களை பழைசுனு சொல்லிடுவாங்க!! லாங் ட்ரிப் போறவங்க கவனத்திற்கு...!
பைக்குகளில் குழுவாக செல்லும்போது, ஹெல்மெட்டிற்குள் ஒருவர் பேசுவது, வேறொரு ஹெல்மெட்டை அணிந்திருக்கும் ஒருவருக்கு கேட்கும் என சொன்னால் நம்ப முடிகிறதா... அதாவது, மொபைல் போனில் பேசிக் கொள்வதை போல் தெளிவாக 2 அல்லது அதற்கு மேற்பட்ட பைக் ஓட்டிகள் பேசிக் கொள்ள வழிவகை செய்யும் மென்பொருள் தொழிற்நுட்பங்கள் ஏற்கனவே மார்க்கெட்டிற்கு வந்துவிட்டன. அவ்வாறான ஒரு ஹெல்மெட் தகவல் தொடர்பு சிஸ்டம் தான் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை எவ்வளவு? சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
பைக் ஹெல்மெட்களுக்கான கூலர்கள் மற்றும் கம்யூனிகேஷன் கருவிகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் ப்ளூஆர்மர் (BluArmor) ஆகும். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ப்ளூஆர்மர் நிறுவனம் புதியதாக சி50 புரோ (C50 Pro) என்கிற ஹெல்மெட் இண்டர்காம் சிஸ்டத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ஹெல்மெட் இண்டர்காம் சிஸ்டத்தின் விலை ரூ.24,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பப்படுவோர் ப்ளூஆர்மர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள மூலமாக சி50 புரோ கருவியை வாங்கி தனது ஹெலெம்ட்டில் பொருத்திக் கொள்ளலாம். ஆனால், டெலிவிரிகள் செப்டம்பர் 28ஆம் தேதியில் இருந்துதான் துவங்கப்படும் என ப்ளூஆர்மர் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ப்ளூஆர்மர் நிறுவனம் சி30 என்கிற பெயரில் ஹெல்மெட் தகவல்தொடர்பு கருவியை முன்னதாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதில், சில குறைப்பாடுகள் இருந்தன. அளவில் பெரியதாக வடிவமைக்கப்பட்ட சி30 கருவியில் இடம்பெற்றிருந்த பொத்தான்களை பயன்படுத்துவது சற்று கடினமானதாக இருந்தது. அந்த குறைப்பாடுகள் அனைத்தையும் புதிய சி50 புரோ கருவியில் ப்ளூஆர்மர் நிறுவனம் சரி செய்துள்ளது.

ப்ளூஆர்மர் சி30 கருவியை காட்டிலும் புதிய சி50 நேர்த்தியானதாகவும், அளவில் சிறியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சி50 புரோவில் தொழிற்நுட்ப அம்சங்களும் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளன. பைக் ரைடர்கள் வழங்கிய கருத்துகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள சி50 புரோவில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 16 மணிநேரத்திற்கு இடைவிடாமல் இந்த கருவியை பயன்படுத்த முடியும்.
மேக்டக் சிஸ்டத்தை கொண்டிருப்பதால், இந்த கருவியை ஹெல்மெட்டில் பொருத்துவது எளியது என்றும், இந்த கருவியை பொருத்துவதால் ஹெல்மெட்டின் வடிவம் மாறாது என்றும் ப்ளூஆர்மர் தெரிவித்துள்ளது. இந்த கருவிக்கு ஐபி67 சான்றளிக்கப்பட்டு உள்ளது. சி50 புரோ கருவியில் இடம்பெற்றுள்ள மெஷ் இண்டர்காம் சிஸ்டத்தில் RIDERGRIDTM 2.0 என்கிற ஹார்ட்வேர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சி30 கருவியில் பயன்படுத்தப்பட்ட RIDERGRIDTM 1.0 ஹார்ட்வேரை காட்டிலும் பவர்ஃபுல்லானது ஆகும்.

இந்த ஹார்ட்வேர் அப்கிரேடினால் எச்டி தரத்திலான தெளிவான குரலை பெற முடியும். மேலும், இந்த கருவி பொருத்தப்பட்ட ஹெல்மெட்களை ஒன்றோடு ஒன்று தொடர்ந்து இணைப்பில் வைத்திருக்க ஆக்டிவ் லிங்க் டிராக்கிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஒரே மாதிரியான இசையை அனைத்து ஹெல்மெட்களிலும் ஒலிர செய்யும் ஆற்றலும் பி50 புரோ கருவியின் RIDERGRIDTM 2.0 ஹார்ட்வேருக்கு உள்ளது.
இந்த கருவி பொருத்தப்பட்ட ஹெல்மெட்டினுள் தேவையில்லாத இரைச்சல்கள் இருக்காது. சி50 புரோ கருவியின் PRTWEAVETM தொழிற்நுட்பம் மொபைல் போன், ஆக்ஷன் கேமராக்கள், ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் இதர இண்டர்காம்களை ஹெல்மெட் உடன் இணைக்க உதவும். ஒவ்வொரு ஹெல்மெட்டும் இணைக்கப்பட்டிருக்கும் என்பதால், யாராவாது ஒருவர் வழி தவறி சென்றாலோ அல்லது வெகுதூரமாக வந்தாலோ அதுகுறித்த எச்சரிக்கைகள் மற்ற ரைடர்களுக்கு செல்லும் வகையில் பி50 புரோ உருவாக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ப்ளூஆர்மர் பி50 புரோ கருவியின் சிறப்பம்சங்களாக இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ளவை எல்லாம் குறைவே. இன்னும் பல அம்சங்களை கொண்டதாக பி50 புரோ உள்ளது. ஆதலால், லடாக் போன்ற தொலைத்தூர பைக் பயணங்களுக்கு குழுவாக செல்ல திட்டமிடுபவர்கள் இந்த கருவியை ஹெல்மெட்டில் பொருத்திக் கொள்ளலாம். சலுகை விலையாக, வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி வரையில் இரு சி50 புரோ கருவிகளை ரூ.22,000 விலையில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









