இந்த மாதிரியான இ-ஸ்கூட்டரை சத்தியமா எதிர்பார்க்கல... விலை வெறும் ரூ.4.5 லட்சம் மட்டும் தானா?
பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தில் இருந்து புதியதாக சிஇ 02 (CE 02) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ சிஇ வரிசை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் விலை குறைவானதாக புதிய சிஇ 02 விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.4.5 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டாரின் தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்பட உள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், புதுமையான ஸ்டைலை கொண்டதாக புதிய சிஇ 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விளங்குகிறது.
அறிவிக்கப்பட்டது போல் இன்று (அக்டோபர் 1) அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிஇ 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். இதற்காக டெல்லிக்கு சென்று அங்குள்ள நகர்புற சாலைகளில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டிப் பார்த்தோம். அதுகுறித்த விரிவான தமிழ் ரிவியூவை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.
புதிய பிஎம்டபிள்யூ சிஇ 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் செவ்வக வடிவில் ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இருக்கை ஆனது தரையில் இருந்து மிகவும் தாழ்வாக வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஸ்கூட்டரை மிகவும் உயரமானவர்களால் பயன்படுத்த இயலாது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், மற்ற அளவுகளில் சிஇ 02 ஆனது பிரம்மாண்டமான ஸ்கூட்டராக விளங்குகிறது.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.92kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 90கிமீ ஆகும். இந்த பேட்டரி ஆனது இயக்க ஆற்றலை ஸ்கூட்டரின் மத்தியில் வழங்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டாருக்கு வழங்கும். 0-இல் இருந்து 50kmph வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 95kmph ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிச்செலின் சிட்டி க்ரிப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








