இருக்கும் சொத்தை விற்றால் தான் இந்த பைக்கை வாங்க முடியும்... விலையை கேட்டால் மயக்கமே வருது!! புக்கிங் ஸ்டார்ட்
பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனம் இந்தியாவில் புதியதாக எஃப்900 ஜிஎஸ் (F900 GS) மற்றும் எஃப்900 ஜிஎஸ் அட்வென்ச்சர் (F900 GS Adventure) என இரு பைக்குகளை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், அறிமுகத்திற்கு முன்னதாக இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்குகளின் சிறப்பம்சங்களையும், இந்த பைக்குகள் எப்போது மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விலையுயர்ந்த பைக்குகளை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் ஆகும். இந்த நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விரைவில் எஃப்900 ஜிஎஸ் மற்றும் எஃப்900 ஜிஎஸ் அட்வென்ச்சர் என்கிற இரு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவை இரண்டும் அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள்கள் ஆகும்.

அதாவது, பள்ளம் மேடான பகுதிகளுக்கும் இந்த பைக்குகளை தைரியமாக கொண்டு செல்லலாம். இதில், பெயரின் இறுதியில் 'அட்வென்ச்சர்' என முடியும் பைக் இன்னும் கூடுதல் செயல்திறன்மிக்கது ஆகும். இந்த பைக்குகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட போவதில்லை. முழுவதுமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் டெலிவிரி செய்யப்பட உள்ளன.
இதனால், இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்குகளின் விலைகளை சற்று அதிகமாக எதிர்பார்க்கிறோம். இந்த நிலையில், புதிய பிஎம்டபிள்யூ எஃப்900 ஜிஎஸ் மற்றும் எஃப்900 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்குகளுக்கு இந்தியாவில் முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. விருப்பப்படுவோர் அருகில் உள்ள பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம் மையத்தில் இந்த பைக்குகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
புதிய எஃப்900 ஜிஎஸ் மற்றும் எஃப்900 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்குகள் பவர்ஃபுல்லான பைக்குகள் என்றாலும், இதனை காட்டிலும் பவர்ஃபுல்லான பைக்குகளை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் உற்பத்தி செய்கிறது. இதனால், இந்த புதிய பைக்குகள் மிட்-ரேஞ்ச் பைக்குகளாக கருதப்படுகின்றன. இந்த புதிய 900சிசி அட்வென்ச்சர் பைக்குகள் தொலைத்தூர பயணங்களுக்கு கொண்டு செல்ல ஏற்றவை ஆகும்.

இந்த பைக்குகள் இரண்டிலும் 895சிசி ட்வின்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 105 பிஎச்பி மற்றும் 93 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இது முன்பை விட 10 பிஎச்பி மற்றும் 1 என்.எம் டார்க் திறன் அதிகமாகும். ரைடிங் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் மற்றும் பை-டைரக்ஷ்னல் குயிக்-ஷிஃப்டர் உள்ளிட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் இந்த பைக்குகளில் இடம்பெற்றுள்ளன.
இவற்றுடன், 6.5-இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே, எல்இடி விளக்குகள், கீலெஸ் இக்னிஷன் போன்றவற்றையும் இந்த பிஎம்டபிள்யூ பைக்குகளில் பெறலாம். இந்த பைக்குகளில் முன் சக்கரம் 21 இன்ச்சிலும், பின் சக்கரம் 18 இன்ச்சிலும் வழங்கப்படுகின்றன. புதிய பிஎம்டபிள்யூ எஃப்900 ஜிஎஸ் பைக்கின் எடை 219 கிலோ ஆகும். 14.5 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் இந்த பைக்கில் கொடுக்கப்படுகிறது.
புதிய எஃப்900 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்கின் எடை 246 கிலோ ஆகும். புதிய எஃப்900 ஜிஎஸ் மற்றும் எஃப்900 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.13 லட்சத்தில் இருந்து எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த ஆகஸ்ட் மாதத்திற்கு உள்ளாக இந்த பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிக தொலைத்தூர பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இந்த பைக்குகள் ஏற்றவை ஆகும். ஏனெனில், இந்த பைக்குகளில் ஏற்றம், இறக்கமான சாலைகளிலும் இயங்க முடியும். இந்தியாவில் இந்த பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கு டிரையம்ப் டைகர் 900, ஹோண்டா எக்ஸ்.எல்750 டிரான்சால்ப் மற்றும் கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் உள்ளிட்ட பைக்குகள் விற்பனையில் போட்டியாக உள்ளன.


Click it and Unblock the Notifications








