இந்த புதிய நிற தேர்வு இன்னும் எடுப்பா இருக்கு! இவ்ளோ அழகா தெரியுதா! இதுக்கே இந்த பைக்கை வாங்கலாம்!

பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad) நிறுவனம், வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு புதிய நிற தேர்வை அதன் முக்கிய பைக் மாடல்களில் ஒன்றான ஜி 310 ஆர்ஆர் (G 310 RR) மாடலில் அறிமுகம் செய்திருக்கின்றது. ரேசிங் ப்ளூ மெட்டாலிக் (Racing Blue Metallic) எனும் நிற தேர்வை அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நிறுவனத்தின் ஆரம்ப நிலை மோட்டார்சைக்கிளாக இருந்தாலும், மிகவும் கவர்ச்சியான வாகனமாக அது காட்சியளிக்கின்றது. இதற்கே கூடுதல் கவர்ச்சியை இந்த புதிய வண்ண தேர்வின் வாயிலாக பிஎம்டபிள்யூ மோட்டாராட் சேர்த்திருக்கின்றது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் கூடுதல் ஸ்போர்ட்டினஸ்ஸை இந்த வண்ண வேலைப்பாட்டின் வாயிலாக ஜி 310 ஆர்ஆர்-க்கு பிஎம்டபிள்யூ மோட்டாராட் சேர்த்துள்ளது. இந்த புதிய வண்ண தேர்வில் முதன்மை வண்ணமாக நீல நிறமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய நிறங்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

Bmw 310 rr

இதுவே அந்த பைக்கிற்கு மனம் கவரும் ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்கி இருக்கின்றது. ஏற்கனவே இந்த பைக் மாடலில் இரண்டு விதமான வண்ண தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அவற்றிலேயே இந்த புதிய நிற தேர்வும் கூடுதலாக இணைக்கப்பட்டு இருக்கின்றது. வாடிக்கையாளர்களின் கவனத்தை வரும் பண்டிகை நாட்களில் கவரும் பொருட்டே இந்த அறிமுகத்தை அது செய்திருக்கின்றது.

எம் ஸ்போர்ட் கிராஃபிக் (M Sport) மற்றும் காஸ்மிக் பிளாக் 2 (Cosmic Black 2) ஆகியவையே அவை ஆகும். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த பைக் ரூ. 3.05 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த புதிய வண்ண சேர்ப்பை தவிர வேறு எந்த மாற்றத்தையும் பிஎம்டபிள்யூ இந்த பைக்கில் செய்யவில்லை. அதேவேளையில், தொழில்நுட்ப அம்சங்கள் விஷயத்தில் இந்த பைக்கில் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. எல்இடி லைட், டிஎஃப்டி வகை திரை, ரைடு பை ஒயர் சிஸ்டம், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்சினைப் பொருத்த வரை ஜி 310 ஆர்ஆர் பைக்கில் சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 33.5 பிஎச்பி மற்றும் 27.3 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது.

இது ஓர் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் அம்சம் கொண்ட கியர்பாக்ஸ் ஆகும். மேலும், இந்த பைக்கின் ரைடை சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமாக நான்கு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, 17 அங்குல அலாய் வீல், முன் பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின் பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பர் ஆகியவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும் பொருட்டு பைக்கின் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இரண்டு வெவ்வேறு அளவுக் கொண்டவை ஆகும். பிஎம்டபிள்யூ-வின் இந்த பைக்கை தழுவி உருவாக்கப்பட்டதே டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் வகை பைக்குகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை தங்கள் பைக்கின் திருப்பும் பொருட்டே பிஎம்டபிள்யூ மோட்டாராட் அதன் ஆரம்ப நிலை பைக் மாடலான ஜி 310 ஆர்ஆர் மாடலில் புதிய நிற தேர்வை அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு இந்திய ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்கள் மத்தியில் கணிசமான நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, August 2, 2024, 23:45 [IST]
English summary
Bmw g 310 rr launches new racing blue metallic colour option
மேலும்... #bmw motorrad #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+