பிஎம்டபிள்யூ பைக்கில் இனி கியர் மாத்த தேவையில்லை! இந்த ஒரு பட்டனை அழுத்தினாலே போதும்
பிஎம்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனம் தனது பைக்குகளுக்கான ஆட்டோமேட்டிக் கியர் தொழில்நுட்பம் ஒன்றை புதிதாக உருவாக்கியுள்ளது. இதன்படி டிரைவரின் இன்புட் இல்லாமலேயே தாராளமாக கியர் மற்றும் வசதி பிஎம்டபிள்யூ பைக்குகளில் இனி கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்ற விரிவான விபரத்தை தான் நாம் இங்கே காணப் போகிறோம்.
கார்களில் இன்று பெரும்பாலும் ஆட்டோமேட்டிக் கியர் வசதி கொண்ட கார்கள் அறிமுகமாகிவிட்டன. இருந்தாலும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனிற்கு மார்க்கெட்டில் ஓரளவு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. புதிதாக வாகனம் ஓட்டுபவர்கள் பெண்கள் உள்ளிட்ட சிலர் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கொண்ட கார்களை விரும்பி தேர்வு செய்கிறார்கள்.

இந்நிலையில் பைக்குகளிலும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் வேண்டும் என்ற பேச்சு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இன்று ஸ்கூட்டர்களில் ஆட்டோமேட்டிக் கியர் இருக்கிறது. அது சிவிடி இயர் பாக்ஸுடன் இணைக்கப்படுகிறது. ஆனால் அப்படி இல்லாமல் கார்களில் மேனுவல் கியர்பாக்ஸில் எப்படி ஏஎம்டி கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸாக மாற்றப்படுகிறதோ அதேபோல பைக்குகளிலும் இப்படியான தொழில்நுட்பம் தேவை என்ற பேச்சு நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இந்நிலையில் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் ஆட்டோமேட்டிக் ஷிப்ட் அசிஸ்ட் என்ற புதிய தொழில்நுட்பத்தை பைக்குகளுக்காக தயாரித்துள்ளது. இதை வழக்கமான கியர் பைக்கில் பொருத்துவதன் மூலம் அந்த பைக் ஆட்டோமேட்டிக் கியர் பைக்காக மாறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்ஜின்களுக்காக இந்த தொழில்நுட்ப தனித்துவமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்டோமேட்டிக் ஷிஃப்ட் அசிஸ்ட் என்ற தொழில்நுட்பம் ஏஎஸ்ஏ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில் தானியங்கியாக கிளட்ச் மற்றும் கியர் மாற்றம் என்பது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பைக்குகளில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என்றால் அது மேனுவல் கியர் அம்சங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். பிஎம்டபிள்யூ நிறுவனம் மேனுவல் கியர் மாற்றத்தில் எந்தவித அனுபவம் மாற்றங்களும் இல்லாமல் அது தானியங்கியாக செயல்படுவதற்கான தொழில்நுட்பமாக ஏஎஸ்ஏ தொழில்நுட்பமாக கண்டுபிடித்துள்ளது.
இந்த ஏஎஸ்ஏ தொழில்நுட்பதற்காக இரண்டு எலெக்ட்ரோ மெக்கானிக்கல் ஆக்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று கிளட்ச்சை ஆட்டோமேட் செய்வதற்காகவும் மற்றொன்று கியரை ஆட்டோமேட்டிக் செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது நேரடியாக 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட பைக்கில் கிளட்ச் என்பது தேவையில்லை. கிளட்ச் இல்லாமலேயே பைக் இயங்கும்.

இந்த பைக்கில் கிளட்ச் இல்லாத தான் பைக்கை ஸ்டார்ட் செய்து ஆட்டோமேட்டிக் கியரில் போட்டு விட்டால் நேரடியாக ஆக்சிலேட்டரை திருகினால் போதும் பைக் தானாக பயணிக்கும். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி உள்ள சாலைகளில் பயணிக்கும் போது சுலபமான ரைடிங் அனுபவம் கிடைக்கும். அதே நேரம் மலைப் பகுதிகளில் பயணிக்கும் போதும் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் பயணிக்க முடியும்.
இந்த தொழில்நுட்பம் நீங்கள் பயணிக்கும் ரைடிங் கண்டிஷனுக்கு ஏற்ப தன்னைத்தானே தயார் செய்து கொண்டு சொகுசான அதே நேரம் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட பயணத்தை தரும் என எதிர்பார்க்கலாம். இந்த தொழில்நுட்பத்தில் மொத்தம் இரண்டு விதமான மோடுகள் இருக்கிறது. M என்ற மோடை பயன்படுத்தும் போது முற்றிலுமாக மேனுவல் கியராக செயல்படும். இதில் எந்த விதமான தானியங்கி செயல்பாடும் இருக்காது. கிளட்ச் மட்டுமே தானியங்கியாக செயல்படும்.
D என்ற மோடிற்க்கு இது மாற்றப்பட்டால் இது முற்றிலுமாக ஆட்டோமேட்டிக் கியர் மாற்றம் செய்யும் தொழில்நுட்பத்தில் இயங்கி விடும். டிரைவர் எந்த ஒரு இன்புட்டும் கொடுக்காமல் பைக்கில் உள்ள எலெக்ட்ரானிக் பாகங்களே வைக்கின் ரைடிங் கண்டிஷனை பொருத்து எந்த கியர் தற்போது தேவை என அந்த கியருக்கு தகுந்தார் போல் வாகனத்தை மாற்றி விடும்.
நாம் ஏற்கனவே சொன்னது படி இதில் இரண்டு எலெக்ட்ரோ மெக்கானிக்கல் ஆக்டிவேட்டர் இருக்கிறது. இதில் ஒன்று கிளட்சை தானியங்கியாக செயல்படும் செயல்பாடுகளை பார்த்துக் கொள்கிறது. மற்றொன்று கியர் மாற்றுவதற்கான செயல்பாடுகளை பார்த்துக் கொள்கிறது. மேலும் இன்ஜின் கண்ட்ரோல் யூனிட் டிரைவர் வழங்கும் இன்புட்களை பொருத்து ரைடிங் கண்டிஷனை உணர்ந்து அதற்கு எப்படி செயல்பட வேண்டும் என்ற உத்தரவுகளை எலெக்ட்ரோ மெக்கானிக்கல் அக்யூட்டர்களுக்கு அனுப்புகிறது. இப்படியாக இந்த தொழில்நுட்பம் வேலை செய்கிறது.
இந்த தொழில்நுட்பம் பொருத்தப்படுவதால் வாகனங்களில் இதை நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் மலைப்பகுதியில் ஆஃப் ரோடு பயணம் செய்பவர்கள் இனி ஒவ்வொரு முறையும் ஏமாற்றிக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய தேவை இல்லை. நீங்கள் கைடு செய்யும் கண்டிஷனுக்கு தற்போது தானியங்கியாக கியர் மாறிக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பம் என்பது இன்று பரவலாக மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்த தொழில்நுட்பத்திற்கான தேவையும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதை புரிந்து கொண்ட பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த தேவையை பூர்த்தி செய்வதற்கான புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் முதலில் பிஎம்டபிள்யூ பைக்கில் எதில் பொருத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் பிஎம்டபிள்யூ ஆர் 1300 ஜிஎஸ் பைக்கில் பொருத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications









