இவ்ளோ தனித்துவமான தோற்றத்தில் எலெக்ட்ரிக் டூ-வீலரா! போட்டியாளர்கள் துண்ட காணோம் துணிய காணோம்னு ஓட போறாங்க!

பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad) நிறுவனம் இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன உலகை அதகளப்படுத்தும் விதமாக விரைவில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் டூ-வீலரை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. நிறுவனம் அதன் சிஇ 02 (CE 02) எனும் மாடலையே விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே சிஇ 04 (CE 04) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதுவே நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு சக்கர வாகனம் ஆகும்.

இதைத்தொடர்ந்தே இரண்டாவது தயாரிப்பாக நிறுவனம் சிஇ 02 எலெக்ட்ரிக் வாகனத்தையே விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த புதுமுக எலெக்ட்ரிக் டூ-வீலரின் வருகையை பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் ஓர் டீசர் படத்தை வெளியிட்டு உறுதி செய்திருக்கின்றது. நிறுவனம் இந்த வாகனத்தை ஓசூரில் உள்ள டிவிஎஸ்-இன் உற்பத்தி ஆலையில் வைத்தே தயார் செய்து வருகின்றது. ஏற்கனவே உற்பத்தி பணிகளும் தொடங்கிவிட்டன.

Bmw ce 02 set to launch soon

மேலும், இங்கிருந்து உலக சந்தைகள் சிலவற்றிற்கும் இந்த வாகனத்தை அந்நிறுவனம் ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. சிஇ 02 ஓர் மொபட் வகை எலெக்ட்ரிக் டூ-வீலர் ஆகும். பார்க்க மிகவும் எளிமையான தோற்றத்தில் அது காட்சியளித்தாலும், சிறப்பம்சங்களைத் தாங்கி இருப்பதில் அபரீதமானதாக இருக்கும் என கூறப்படுகின்றது. குறிப்பாக, சிஇ 04 மாடலை போலவே இதுவும் முற்றிலும் மாறுபட்ட மற்றும் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டிருக்கும்.

மேலும், சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் இதிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், எல்இடி மின் விளக்கு, இணைப்பு வசதி, நேவிகேஷன், டிஜிட்டல் திரை உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், தோற்றம் மற்றும் ஸ்டைல் உள்ளிட்டவற்றில் மிகப் பெரிய வித்தியாசத்தை இதுக் கொண்டிருக்கும்.

மேலும், இது ஓர் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட மொபட்டாக இருக்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. 2 kWh பேட்டரி பேக் தேர்விலேயே இந்த இ-வாகனம் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 90 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

மேலும், இதன் டாப் ஸ்பீடானது சற்றே குறைவானதாக இருக்கும் என கூறப்படுகின்றது. ஆனால், அது குறித்த துள்ளியமான விபரங்கள் வெளியாகவில்லை. இப்போதே, இந்த வாகனத்தை பற்றிய விபரங்கள் வெளியாகத் தொடங்கி இருக்கின்றன. ஆரம்பநிலை தகவல்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

இருப்பினும், சிஇ 04 மாடலில் காணப்படும் அம்சங்கள் பலவற்றை இதிலும் நிச்சயம் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பிஎம்டபிள்யூ மோட்டாராட், இந்தியாவில் சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையாக கட்டப்பட்ட யூனிட்டாக (CBU)-வே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு ரூ. 14 லட்சத்து 90 ஆயிரம் விலையே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ ஆகும். அதேவேளையில், வெறும் 2.6 வினாடிகளிலேயே பூஜ்ஜியம் கிமீ வேகத்தில் இருந்து 50 கிமீ வேகத்தை அது எட்டுவிடும். பேட்டரி பேக்கை பொருத்தவரை 8.5 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ஸ்கூட்டரில் சில தனித்துவமான வசதிகளையும் பிஎம்டபிள்யூ மோட்டாராட் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (Anti-lock Braking System) மற்றும் ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (Automatic Stability Control) ஆகியவற்றையே அது வழங்கி இருக்கின்றது.

இவற்றுடன் சேர்த்து ஹீட் ஆகும் வசதிக் கொண்ட ஹேண்ட் நகிரிப்ஸ், பேக்ரெஸ்ட், ஹெட்லைட், ஏபிஎஸ் மற்றும் அடாப்டிவ் ஹெட்லைட், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட 10.25 அங்குல டிஎஃப்டி வண்ண ஸ்பிளிட் திரை ஆகியவற்றையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிஎம்டபிள்யூ வழங்கி இருக்கின்றது. இதுமாதிரியான பிரீமியம் அம்சங்களைத் தாங்கியிருக்கின்ற காரணத்தினாலேயே இதன் விலை மிக மிக அதிகமாக இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதை அறிந்தே பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் அதன் பிரீமியம் தர இ-வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. வருகின்ற விழாக் காலத்தை முன்னிட்டு சீக்கிரமே இது விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதமே இது அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது. ஆகையால், இந்த நிகழ்வு போட்டியாளர்களுக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 4, 2024, 5:00 [IST]
English summary
Bmw motorrad ce 02 is set to launch in india soon
மேலும்... #bmw motorrad #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+