இந்த விலையில் எஸ்யூவி காரை வாங்கிவிடலாம் - பிஎம்டபிள்யூ உருவாக்கி உள்ள புது பைக்!! வாங்க எத்தனை பேர் ரெடி?

பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனம் இந்தியாவில் விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ளது. இந்தியர்களுக்கு ஏற்ப ரூ.3- 4 லட்சத்தில் விலை குறைவான பைக்குகளையும் இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்த நிலையில், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் அதன் புதிய மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இந்த நிறுவனம் விற்பனை செய்வதிலேயே விலையுயர்ந்த பைக்காக இது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பிஎம்டபிள்யூ பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் புதிய ஆர்1300 ஜிஎஸ் (R1300 GS) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய அட்வென்ச்சர் ரக பைக்கான இதனை இந்தியாவில் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் உற்பத்தி செய்ய போவதில்லை. முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

bmw motorrad r1300 gs launched

இதன் காரணமாக இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்கின் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.20 லட்சத்து 95 ஆயிரத்தை இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையாக நிர்ணயித்துள்ளனர். ஆர்1300 ஜி.எஸ் பைக்கிற்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. புக் செய்தவர்களுக்கு பைக்கை டெலிவிரி கொடுக்கும் பணிகள் இந்த ஜூன் மாதத்தில் இருந்து துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜிஎஸ் பைக்குகள் என்றாலே அட்வென்ச்சர் ரகத்திலானவை ஆகும். 310சிசி என்ஜின் உடனும் கூட பிஎம்டபிள்யூ ஜிஎஸ் பைக்குகள் கிடைக்கின்றன. தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆர்1300 ஜிஎஸ் ஆனது பிஎம்டபிள்யூ ஜிஎஸ் பைக்குகளிலேயே ஆற்றல்மிக்கது மற்றும் விலைமிக்கது ஆகும். 1000சிசி-க்கு மேற்பட்ட பைக்குகள் என்றாலே அளவில் பெரியதாக இருக்கும். ஆனால், இந்த பைக்கை முடிந்தவரையில் சிறியதாக பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் உருவாக்கியுள்ளது.

bmw motorrad r1300 gs launched

இதனால், இந்த பைக்கின் எடையும் குறைவாகவே உள்ளது. புதிய பிஎம்டபிள்யூ ஆர்1300 ஜிஎஸ் பைக்கில் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 2-சிலிண்டர் பாக்ஸர் என்ஜின் இந்த பைக்கில் பொருத்தப்படுகிறது. பிஎம்டபிள்யூ ஷிஃப்ட்காம் டெக்னாலஜி உடன் உள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,750 ஆர்பிஎம்-இல் 107 கிலோவாட்ஸ் மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 149 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஹேண்டில்பாரில் 6.5 இன்ச்சில் முழு-வண்ண டிஎஃப்டி திரை கொடுக்கப்படுகிறது. ஸ்டைல் டிரிபிள் பிளாக், ஸ்டைல் ஜி.எஸ் டிராபி மற்றும் 719 ட்ராமுண்டானா என்கிற ஸ்டைல் ஆப்ஷன்கள் கூடுதலாக இந்த பைக்கை வாங்கும்போது கிடைக்கும். இதில் ஒவ்வொரு ஆப்ஷனிலும் ஒவ்வொரு விதமான ஆக்ஸஸரீகள் உடன் பைக் அலங்கரித்து தரப்படும். ஆனால், இதற்கு பைக்கின் விலையுடன் சேர்த்து நீங்கள் கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

bmw motorrad r1300 gs launched

இந்த 3 ஸ்டைல் ஆப்ஷன்களையும் தேர்வு செய்யாமல் அப்படியே வாங்கினால், வெள்ளை நிறத்தில் இந்த பைக் கிடைக்கும். அதுவே, ஸ்டைல் டிரிபிள் பிளாக் ஆப்ஷன் உடன் பிளாக்ஸ்டோர்ம் மெட்டாலிக் பெயிண்ட்டிலும், ஸ்டைல் ஜிஎஸ் டிராஃபி ஆப்ஷன் உடன் ரேசிங் ப்ளூ மெட்டாலிக் பெயிண்ட்டிலும், 719 டிராமுண்டானா ஆப்ஷன் உடன் அவுரேலியஸ் க்ரீன் மெட்டாலிக் பெயிண்ட்டிலும் கிடைக்கும்.

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் அதன் மோட்டார்சைக்கிளுக்கு 3-வருட/ முடிவில்லா உத்தரவாதத்தை வழங்குகிறது. இதனை தேவைப்படுவோர் 4 மற்றும் 5 வருடங்களாக கூட அதிகரித்துக் கொள்ள முடியும். சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்போது பைக் சம்பந்தமாக ஏதேனும் உதவுகள் தேவைப்படும் பட்சத்தில், அதற்காக 24X7-இல் 365 நாட்களுக்கு ரோடு-சைடு அசிஸ்டன்ஸை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்குகள் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். புதிய ஆர்1300 ஜிஎஸ் ஆனது அதில் உச்சப்பட்சமாக உள்ளது. இந்த பைக்கை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் பார்த்து, பார்த்து உருவாக்கியுள்ளது. இந்த பைக்கின் விலையாக இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆன்-ரோடு விலைகள் இன்னும் அதிகமாக வரக்கூடும். அதேபோல், பைக்கின் ஆன்-ரோடு விலை ஆனது மாநிலத்திற்கு மாநிலம் மாறக்கூடும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 13, 2024, 16:38 [IST]
English summary
Bmw motorrad r1300 gs adventure motorcycle introduced in india price features engine
மேலும்... #bmw motorrad #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X