ஓலா, பஜாஜ் எல்லாம் ஆட்டம் காண போகுது! தரமான ஸ்கூட்டரை இன்னும் ஒரே மாதத்தில் பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்ய போகுது
இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, இந்தியாவின் இந்த மின்சார வாகன தாகத்தை தீர்க்கும் விதமாக ஓலா எலெக்ட்ரிக் எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், பஜாஜ் அதன் சேத்தக் இ-ஸ்கூட்டரையும், டிவிஎஸ் அதன் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் மற்றும் ஏத்தர் எனெர்ஜி 450 மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவர்களைப் போல இன்னும் பல நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே இவர்கள் அனைவருக்கும் சவால் விடும் விதமாக, இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவை சூடிபிடிக்கச் செய்யும் வகையிலும் பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad) நிறுவனம் அதன் தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தன்னுடைய உலக புகழ்பெற்ற சிஇ 04 (CE 04) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அது விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஜூலை 24 ஆம் தேதியையே அது தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. பிஎம்டபிள்யூ சிஇ 04 ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும்.
இந்த வாகனம் இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டே காட்சிப்படுத்தப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இப்போது அதனை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் பிஎம்டபிள்யூ மிக தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் மிக சிறப்பான வரவேற்பே காரணம் ஆகும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 10.25 அங்குல டிஎஃப்டி வகை திரை, இணைப்பு மற்றும் நேவிகேஷன் தகவலை வழங்கும் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ஸ்மார்ட்போன்களை வைத்துக் கொள்வதற்காக ஓர் அறையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும். அது காற்றோட்டம் மற்றும் நீர் புகாத ஓர் பாதுகாப்பு பெட்டகத்தைப் போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர, ஓர் 'சி' வகை யுஎஸ்பி சார்ஜரும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும். மேலும், மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும். ஈகோ, ரெயின் மற்றும் ரோடு ஆகியவையே அவை ஆகும். இத்துடன் டைனமிக் டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் ப்ரோ போன்ற கூடுதல் அம்சங்களும் விருப்பத்தின் கீழ் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.
இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளை தனக்குள் தாங்கி இருக்கின்றது, இந்த பிஎம்டபிள்யூ சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். குறிப்பாக, தானியங்கி ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டைனமிக் டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் செய்யும் வசதி உள்ளிட்டவையும் இந்த இ-ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.10 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவேளையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிஎம்டபிள்யூ நிறுவனம், இதுவரை எந்தவொரு நிறுவனமும் தயாரித்திராத தனித்துவமான தோற்றத்தில் உருவாக்கி இருக்கின்றது. ஸ்கேட் போர்டு-இன் ஸ்டைலிலேயே அது உருவாக்கப்பட்டு உள்ளது.
மிகவும் கட்டுமஸ்தான பேனல்களாலும் அது அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 130 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என கூறப்படுகின்றது. மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 121 கிமீ என்றும் கூறப்படுகின்றது. இத்தகைய அதீத வேகத்திற்காக சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 15 kW மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது ஓர் நிரந்த காந்தகத்தைக் கொண்ட லிக்யூடு கூல்டு எலெக்ட்ரிக் மோட்டார் ஆகும். இதனால் 41 பிஎச்பி மற்றும் 61 என்எம் டார்க் வரையிலான ஆற்றலை உருவாக்க முடியும். இதேபோல், வெறும் 2.6 செகண்டுகளிலேயே அது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 50 கிமீ வேகத்தை எட்டிவிடும்.
இதேபோல், இதன் அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 8.9 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை வெறும் 4 மணி நேரத்திலேயே 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே இந்தியாவில் அடுத்த மாதம் 24 ஆம் தேதி பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஸ்கூட்டரின் வருகை எப்படி ஓலாவிற்கும் மற்ற நிறுவனங்களுக்கும் போட்டியாக மாறும் என நீங்கள் கேட்கலாம். லுக்கிலும், அதிக பிரீமியம் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களிலேயே பிஎம்டபிள்யூ சிஇ 04 மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது. இது இந்திய பணக்காரர்களையே வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








