டிவிஎஸ்-இன் தமிழக ஆலையில் தயார் செய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் இ-பைக்.. புக்கிங் ஸ்டார்ட்டாகிருச்சா!

இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கான வரவேற்பு முன்பைக் காட்டிலும் இப்போது பலமடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே ஓர் தனித்துவமான தோற்றம் கொண்ட டூ-வீலருக்கு நாட்டில் புக்கிங் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஸ்பெஷல் என்னவென்றால் அந்த விநோதமான லுக் கொண்ட எலெக்ட்ரிக் டூ-வீலர் டிவிஎஸ்க்கு சொந்தமான தமிழக ஆலையில் வைத்து தயாரிக்கப்பட்டது என்பதுதான். ஆனால், இந்த வாகனம் டிவிஎஸ் உடையது அல்ல என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் தயாரிப்பாகும்.

பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad)-தான் அந்த வெளிநாட்டு நிறுவனம் ஆகும். இந்திய சந்தைக்காக பிஎம்டபிள்யூ மோட்டாராட், டிவிஎஸ் உடன் இணைந்து பணியாற்றி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்த இணைவின் அடிப்படையிலேயே டிவிஎஸ்-க்கு சொந்தமான ஓசூர் அலையில் வைத்து பிஎம்டபிள்யூ மோட்டாராடின் இரண்டு சக்கர வாகனங்கள் சில தயாரிக்கப்பட்டு, விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு வருகின்றன.

Bmw opens bookings for ce 02

அந்தவகையிலேயே, இந்த தனித்துவமான எலெக்ட்ரிக் டூ-வீலரும் டிவிஎஸ்-இன் ஓசூர் ஆலையில் வைத்து தயார் செய்யப்பட்டு வருகின்றது. சிஇ 02 (BMW CE 02) எனும் பெயரிலேயே இந்த தனித்துவமான தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் டூ-வீலர் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதற்கான புக்கிங் பணிகளே இன்று தொடங்க இருக்கின்றது.

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 12.30 மணி அளவிலேயே புக்கிங் பணிகள் தொடங்க இருக்கின்றன. மேலும், இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் டூ-வீலர் ஆகும். இந்தியாவிற்கு மட்டுமல்ல இங்கு உற்பத்தி செய்யப்படும் பிஎம்டபிள்யூ சிஇ 02 உலக சந்தைக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னரே அதன் உலக புகழ்பெற்ற சிஇ 04 (BMW CE 04) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்தே இந்தியாவிற்கான தன்னுடைய இரண்டாவது எலெக்ட்ரிக் டூ-வீலராக சிஇ 02-வையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இந்த வாகனம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆகையால், இதில் இடம் பெற இருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் ரேஞ்ச் பற்றிய விபரங்களை துள்ளியமாக அறிவிக்க முடியவில்லை. அதேசமயம், சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள சிறப்பம்சங்கள் சில இதிலும் வழங்கப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் அதிக பிரீமியம் அம்சங்கள் தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே சிஇ 04 மாடலை தயார் செய்திருக்கின்றது. இதில், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட 10.25 அங்குல டிஎஃப்டி கலர் ஸ்பிளிட் வகை திரை, 'சி' டைப் யுஎஸ்பி சார்ஜர், தானியங்கி ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டைனமிக் டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் செய்யும் வசதி ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக 8.5 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக்கே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதை சார்ஜ் செய்துக் கொள்ள ஏதுவாக 2.3 கிலோவாட் ஹோம் சார்ஜர் வழங்கப்படுகிறது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ ஆகும். இந்த திறனுக்காக திரவ-குளிரூட்டப்பட்ட 42 எச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்ற சிறப்பு வசதிகளே சிஇ 02 எலெக்ட்ரிக் மொபட்டிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்திய தகவல்: பிஎம்டபிள்யூ சிஇ 02 எலெக்ட்ரிக் மொபட்டிற்கான அறிமுகத்திற்கு முந்தைய புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய சிஇ 02 எலெக்ட்ரிக் மொபட் விலையிலும், சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்டிலும் சற்று குறைவானதாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. இதன் அறிமுக தேதி பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த மாத இறுதிக்குள் இந்த வாகனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 7, 2024, 5:00 [IST]
English summary
Bmw opens bookings for ce 02 electric moped in india
மேலும்... #bmw motorrad #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+