சொத்தை விற்றால்தான் வாங்க முடியும்... புக் பண்ண யார் யார் ரெடி? புது பிஎம்டபிள்யூ பைக்!!
பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனம் அதன் விலையுயர்ந்த ஆர்12 நைன் டி (R12 Nine T) மற்றும் ஆர்12 (R12) மோட்டார்சைக்கிள்களை புதியதாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இவை விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்குகளாக, அதேநேரம் பவர்ஃபுல்லான பைக்குகளாக இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், புதிய பிஎம்டபிள்யூ ஆர்12 நைன் டி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20 லட்சத்து 90 ஆயிரம் ஆகவும், ஆர்12 பைக்கின் விலை ரூ.19 லட்சத்து 90 ஆயிரம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த புத்தம் புதிய பிஎம்டபிள்யூ பைக்குகளை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பிஎம்டபிள்யூ கார்களுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு காரணம், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான பிஎம்டபிள்யூ பைக்குகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகும். ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆர்12 நைன் டி மற்றும் ஆர்12 பைக்குகள் சிபியூ முறையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளன.

அதாவது, இந்த பைக்குகள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட உள்ளன. இதன் காரணமாகவே, இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்குகளின் விலைகள் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த பைக்குகளுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. புக் செய்தவர்களுக்கு பைக் டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற செப்டம்பர் மாதத்தில் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு பிஎம்டபிள்யூ பைக்குகளும் கிளாசிக் தோற்றத்தை கொண்டவை மற்றும் 2-சிலிண்டர் பாக்ஸர் என்ஜினை கொண்டவை. இதில், பிஎம்டபிள்யூ ஆர்12 நைன் டி பைக் ஆனது ரெட்ரோ ரோட்ஸ்டர் தோற்றத்தையும், ஆர்12 பைக் க்ரூஸர் தோற்றத்தையும் கொண்டவையாக காட்சியளிக்கின்றன. கிளாசிக்கான ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்குகளில் பின்பக்க சஸ்பென்ஷனுக்கான ஷாக் அப்சார்பர் சமமானதாக பொருத்தப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ ஆர்12 நைன் டி பைக்கை பொறுத்தவரையில், பிளாக்ஸ்டோர்ம் மெட்டாலிக் என்கிற பெயிண்ட்டில் கிடைக்கும். அதேநேரம், விருப்பப்படுவோர் பிரஷ்டு அலுமினியம்/ நைட் பிளாக் சாலிட் பெயிண்ட் அல்லது சான் ரெமோ க்ரீன் மெட்டாலிக் பெயிண்ட் ஆப்ஷனில் இந்த பைக்கை வாங்கலாம். மறுப்பக்கம், பிஎம்டபிள்யூ ஆர்12 பைக்கும் பிளாக்ஸ்டோர்ம் மெட்டாலிக் பெயிண்ட்டில் கிடைக்கும்.
மேலும், அவுஸ் சில்வர் மெட்டாலிக் அல்லது அவெண்டுரேனே ரெட் மெட்டாலிக் பெயிண்ட் ஆப்ஷனிலும் இந்த பைக்கை விருப்பப்படுவோர் வாங்கலாம். இந்த இரு பைக்குகளிலும் ஹெட்லைட் புரோ, கீலெஸ் ரைடு மற்றும் ரைடிங் மோட்கள் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும். சவுகரியமான பயணத்திற்காக, இந்த பைக்குகளில் இருக்கைக்கு அடியில் ஏர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ ஆர்12 நைன் டி பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 1,170சிசி 2-சிலிண்டர் ஏர்/ ஆயில்-கூல்டு பாக்ஸர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-இல் 109 எச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 115 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதேநேரம், ஆர்12 பைக்கில் இதே என்ஜின் 6,500 ஆர்பிஎம்-இல் 95 எச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 110 என்.எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தும்.
பாதுகாப்பிற்கு, இந்த இரு பைக்குகளிலும் டைனாமிக் டிராக்ஷன் கண்ட்ரோல், என்ஜின் டிராக் டார்க் கண்ட்ரோல், டயர் பிரஷர் கண்ட்ரோல் மற்றும் தேவைக்கேற்ப அட்ஜெஸ் செய்துக் கொள்ளக்கூடிய ஹெட்லைட் புரோ லைட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்குகளில் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன், ஏபிஎஸ் புரோ வசதியும் இந்த பைக்குகளில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பிஎம்டபிள்யூ பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் இன்னும் நிறைய ஆக்ஸஸரீஸ் ஆப்ஷன்களை பெறலாம். அவற்றின் மூலமாக, தங்களுக்கு பிடித்தது போல் இந்த பைக்குகளை மாற்றிக் கொள்ளலாம். இந்த பிஎம்டபிள்யூ பைக்குகள் கிளாசிக் தோற்றத்தில் இருப்பினும், மாடர்னான வசதிகளை கொண்டுள்ளன. இதனால், இவை பழமை மற்றும் புதுமை கலந்தவையாக உள்ளன.


Click it and Unblock the Notifications









