எஸ்யூவி காரின் விலையில் புதிய பிஎம்டபிள்யூ பைக்!! மொத்த சொத்தையும் எழுதி வைத்தால் வாங்கி விடலாம்!

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அதன் புதிய எஸ்1000 எக்ஸ்.ஆர் (S1000 XR) பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.22.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் ஆகும். இந்த நிறுவனம் எஸ்1000 எக்ஸ்.ஆர் என்கிற பெயரில் புதிய விலையுயர்ந்த & ஆற்றல்மிக்க அட்வென்ச்சர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக் சிபியூ முறையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

bmw s1000 xr launched

அதாவது, இந்த பைக் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட போவதில்லை. வெளிநாட்டில் இருந்து பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. விருப்பப்படும் இந்திய வாடிக்கையாளர்கள் புதிய பிஎம்டபிள்யூ எஸ்1000 எக்ஸ்.ஆர் பைக்கை இன்று முதல் பைக்கை புக் செய்யலாம்.

பிளாக்ஸ்டோர்ம் மெட்டாலிக், கிராவிட்டி ப்ளூ மெட்டாலிக் மற்றும் இளம் வெள்ளை சாலிட் பெயிண்ட்/ மோட்டார்ஸ்போர்ட் (எம் பேக்கேஜ் உடன் கிடைக்கும்) என 3 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் புதிய பிஎம்டபிள்யூ எஸ்1000 எக்ஸ்.ஆர் பைக் கிடைக்கும். இந்த அட்வென்ச்சர் பைக்கின் இருக்கை ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளது.

bmw s1000 xr launched

பைக்கின் முன்பக்க ஃபேயரிங்கும், ஹெட்லைட் சிஸ்டமும் ஷார்ப்பான டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளது. பின் இருக்கை சற்று சிறியதாக வழங்கப்பட்டுள்ளது போல் தெரிந்தாலும், உண்மையில் போதுமான நீளத்திற்கு உள்ளது. ஹேண்டில்பார்ஸ் நன்கு சவுகரியமானதாக வழங்கப்பட்டுள்ளதால், இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்கை தொலைத்தூர பயணங்களுக்கு தாராளமாக கொண்டு செல்லலாம்.

புதிய பிஎம்டபிள்யூ எஸ்1000 எக்ஸ்.ஆர் பைக்கில் வழங்கப்பட்டுள்ள 4-சிலிண்டர் என்ஜினில் சில வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அதிகமான செயல்படுதிறனை எதிர்பார்க்கலாம் என பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர்.ஆர் பைக்கில் பொருத்தப்படுகின்ற அதே 1000சிசி என்ஜின் தான் புதிய எஸ்1000 எக்ஸ்.ஆர் பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது.

bmw s1000 xr launched

இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 11,000 ஆர்பிஎம்-இல் 170 எச்பி மற்றும் 9,250 ஆர்பிஎம்-இல் 114 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பைக்கில் பெறலாம். 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.25 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்கின் டாப்-ஸ்பீடு 253kmph ஆகும்.

அட்வென்ச்சர் பைக்குகளில் இருக்கையின் உயரம் முக்கியமானது ஆகும். இந்த புதிய பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்கில் ரைடர் இருக்கை தரையில் இருந்து 850மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதனை விருப்பப்படுவோர் தாழ்வான சஸ்பென்ஷன், தாழ்வான இருக்கையின் மூலமாக தாழ்வானதாக குறைத்துக் கொள்ள முடியும். புதிய பிஎம்டபிள்யூ எஸ்1000 எக்ஸ்.ஆர் பைக்கிற்கு ஏகப்பட்ட ஆக்ஸஸரீகளும் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ பைக்குகள் பொதுவாகவே மிகவும் கவனத்துடன் வடிவமைக்கப்படுபவை ஆக விளங்குகின்றன. அதிலிலும், புதிய எஸ்1000 எக்ஸ்.ஆர் பைக் இன்னும் மாடர்ன் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு விலையில் யார் இந்த பைக்கை வாங்க போகிறார்கள்? என நீங்கள் கேட்கலாம். ஆனால், இவ்வளவு விலைமிக்க பைக்கையும் வாங்குவதற்கு நம் இந்தியாவில் ஆட்கள் உள்ளனர் என்பதுதான் இதில் ஆச்சிரியமான விஷயமே.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 21, 2024, 22:52 [IST]
English summary
Bmw s1000 xr motorcycle launched in india price features engine all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X