இதுக்கு காசு வாங்காம சும்மாவே குடுத்தர்லாம்! நம்ப முடியாத அளவுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை குறைத்த ஓலா!

தீபாவளி (Diwali) பண்டிகையை கோலாகலமாக கொண்டாட இந்தியா தயாராகி வருகிறது. பொதுவாக தீபாவளி பண்டிகை காலத்தில், வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும். இதற்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளும் (Offers) ஒரு காரணம் ஆகும். நடப்பு 2024ம் ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், வாகன உற்பத்தி நிறுவனங்கள் பலவும் போட்டி போட்டு கொண்டு, சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை (Discounts) அறிவித்து வருகின்றன. இதில், ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனமும் ஒன்றாகும்.

இந்தியாவின் எலெக்ட்ரிக் டூவீலர் (Electric Two Wheeler) சந்தையில் முன்னணி இடத்தில் உள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்போது 'பாஸ்' (BOSS - Biggest Ola Season Sale) என்ற பெயரில், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது.

Ola S1 BOSS Offer

இதன்படி ஓலா எஸ்1 எக்ஸ் (Ola S1 X) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, வெறும் 49,999 ரூபாயில் வாங்க முடியும். இது ஓலா எஸ்1 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின், 2 kWh பேட்டரி (2 kWh Battery) பொருத்தப்பட்ட மாடலுக்கு மட்டுமே பொருந்தும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஓலா எஸ்1 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2 kWh பேட்டரி பொருத்தப்பட்ட மாடல், 74,999 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே 'பாஸ்' சலுகையின் மூலம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால், 25 ஆயிரம் ரூபாயை சேமிக்க முடியும்.

Ola S1 X

ஆனால் 'ஸ்டாக்' உள்ள வரை மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். இதுதவிர இன்னும் பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளையும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில், ஓலா எஸ்1 வரிசையில் விற்பனை செய்யப்படும் அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான தள்ளுபடி மிகவும் முக்கியமானதாகும்.

இதுதவிர மேலும் 21 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நன்மைகளையும் வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ள முடியும். இதன்படி 5 ஆயிரம் ரூபாய் வரையிலான எக்ஸ்சேன்ச் போனஸ், 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 140க்கும் மேற்பட்ட மூவ்ஓஸ் வசதிகள், 7 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 8 ஆண்டுகளுக்கான பேட்டரி வாரண்டி, 3 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஹைப்பர்சார்ஜிங் க்ரெடிட்ஸ் என 21 ஆயிரம் மதிப்பிலான நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இவை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் கம்யூனிட்டி உறுப்பினர்களுக்காக (Ola Community Members) பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன என்பதுதான். இந்த சலுகைகள் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் டூவீலர்களின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதற்கு உதவி செய்யும் என கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் சமீப காலமாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை சற்று மந்தமாக உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள், அந்த மந்த நிலையை போக்கி, விற்பனை எண்ணிக்கையை உயர்த்த உதவி செய்யும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 2, 2024, 18:33 [IST]
English summary
Boss biggest ola season sale read full details here
மேலும்... #ola #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+