1ரூபா, 2ரூபா இல்ல 24,000 ரூபாவ குறைச்சிட்டாங்க! சொப்பு கார், சைக்கிள்போல இந்த இ-ஸ்கூட்டர மக்கள் வாங்க போறாங்க!
பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பவுன்ஸ் இன்ஃபினிட்டி (Bounce Infinity) நிறுவனம். இது ஓர் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தர் எனெர்ஜி போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையிலேயே தன்னுடைய போட்டியை கூடுதல் கடுமையானதாக மாற்றும் பொருட்டு பவுன்ஸ் நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் விலையை பெருமளவில் குறைத்திருக்கின்றது. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் நிறுவனம் சுமார் 21 சதவீதம் விலையை அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை குறைத்திருப்பதாக அறிவித்து இருக்கின்றது.

ரூ. 1.13 லட்சம் என்கிற விலையில் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதிலேயே தற்போது ரூ. 24 ஆயிரம் விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த விலை குறைப்பு சில நாட்களுக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நிறுவனத்தின் அறிவிப்பின்படி, மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே இந்த சலுகைக் கிடைக்கும். விலை குறைப்பால் நிறுவனத்தின் இ1 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தற்போது ரூ. 89,999ஆக குறைந்திருக்கின்றது. இவை வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 பிளஸ் மாடலும் ஒன்றாகும். இதற்கு, ஏகப்பட்ட சிறப்பம்சங்களைத் தாங்கியதாக அந்த வாகனம் இருப்பதே காரணமாக உள்ளது. உதாரணமாக 15 ஆம்ப் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதிக் கொண்ட ரிமூவபிள் பேட்டரி பேக், வேகமாக சார்ஜிங் வசதியுடன் வழங்கப்பட்டு இருப்பது இருக்கின்றது.
இது ஓர் லிக்யூடு கூல்டு வசதிக் கொண்ட பேட்டரி பேக் என்பதும் இங்கு குறிப்பிடத்தகுந்தது. எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வரை 2.2 kW திறன் கொண்ட மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிலோ மீட்டர் ஆகும்.
பேட்டரி பேக்கைப் பொருத்த வரை 2 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே என்எம்சி செல்களுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக் ஐஏஎஸ் 156 தர சான்று பெற்றது என கூறப்படுகின்றது. சிங்கிள் சார்ஜில் 85 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் திறன் கொண்டதாகவும் இந்த பேட்டரி பேக் காட்சியளிக்கின்றது.
பவுன்ஸ் இன்ஃபினிட்டி நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்குகின்றது. பேட்டரி உள்ள நிலை மற்றும் பேட்டரி இல்லா நிலை ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். இதுதவிர, இ1 பிளஸ், இ1 எல்இ மற்றும் இ1 ஆகிய தேர்வுகளிலும் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதில், இ1 பிளஸ் தேர்வு ஓர் முழு சார்ஜில் 70 கிமீ ரேஞ்ஜை வழங்கும், இதன் டாப் ஸ்பீடு 65 கிமீ மற்றும் 1.9 kWh பேட்டரி ஆகிய வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டாவது தேர்வான இ1 எல்இ-யும் இதே வசதிகளுடனேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஆனால், மூன்றாவது தேர்வான இ1 இவை இரண்டில் இருந்து சற்று மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. ஓர் முழு சார்ஜில் 100க்கும் அதிகமான ரேஞ்ஜை வழங்கும். டாப் ஸ்பூடும் மணிக்கை 55 கிமீட்டரைக் கொண்டிருக்கின்றது. இதில் 2.5 kWh பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஈகோ, பவர், ரிவர்ஸ் , க்ரூஸ் மற்றும் டிராக் என பன்முக ரைடிங் மோட்களையும் ஸ்கூட்டரில் பவுன்ஸ் இன்ஃபினிட்டி வழங்கி இருக்கின்றது. பவுன்ஸ் நிறுவனம் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியை அதன் ராஜஸ்தான் பிவாடி உற்பத்தி ஆலையில் வைத்தே மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆலை ஆண்டுக்கு 2 லட்சம் யூனிட்டுகள் மின் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிக்கப்பட்டது ஆகும். இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த வரவேற்பை அசைத்து பார்க்கும் நோக்கிலேயே தற்போது பவுன்ஸ் விலை குறைப்பை அறிவித்து இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








