சமையல் சிலிண்டரை மாற்றுகிற மாதிரி பேட்டரியை மாற்றி கொள்ளலாம்!! இப்படியொரு இ-ஸ்கூட்டருக்கு தானே வெயிட் பண்ணோம்!

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எக்ஸ் (Bounce Infinity E1 X) என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி ஸ்வாப்பிங் ஆப்ஷன் (Battery Swapping Option) உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த புதிய பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 ஸ்கூட்டரில் சார்ஜ் காலியான பேட்டரிக்கு பதிலாக சார்ஜ் நிரம்பிய பேட்டரியை சிறிய கட்டணத்துடன் பெற்றுக் கொள்ள முடியும்.

பெங்களூரை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமான பவுன்ஸ் இன்ஃபினிட்டி சில அற்புதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மார்க்கெட்டில் விற்பனை செய்கிறது. அதில் ஒன்றுதான், இன்ஃபினிட்டி இ1 ஆகும். இந்த நிலையில், இன்ஃபினிட்டி இ1 ஸ்கூட்டரின் புதிய அப்டேட் செய்யப்பட்ட மாடல் இன்ஃபினிட்டி இ1 எக்ஸ் என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

bounce infinity e1x electric scooter

புதிய பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நாடு முழுவதும் வருகிற ஜூன் மாதத்தில் இருந்து விற்பனைக்கு கிடைக்கும். இந்த புதிய இ-ஸ்கூட்டரின் விலைகள் ரூ.55,000இல் இருந்து ரூ.59,000 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய இன்ஃபினிட்டி இ1 ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சம், அதன் பேட்டரி ஸ்வாப்பிங் ஆப்ஷன் ஆகும்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு நம் நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் இன்னும் வரவில்லை. இதனால், நிறைய மக்கள் இப்போதும் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர்.

எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மற்றொரு வழியாக பேட்டரி ஸ்வாப்பிங் முறை பார்க்கப்படுகிறது. அதாவது, வீட்டில் நீண்ட நேரத்திற்கு சார்ஜ் செய்வதற்கு பதிலாக, சார்ஜ் காலியான பேட்டரியை குறிப்பிட்ட மையத்தில் கொடுத்து, அதற்கு பதிலாக சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக, பவுன்ஸ் இன்ஃபினிட்டி நிறுவனம் நாடு முழுவதும் நிறைய முக்கிய நகரங்களில் பேட்டரி ஸ்வாப்பிங் மையங்களை நிறுவியுள்ளது.

அதேநேரம் சில 3ஆம் தரப்பு நிறுவனங்களுடனும் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ளது. புதிய இன்ஃபினிட்டி இ1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள இந்த மையங்களுள் ஒன்றில் ஸ்கூட்டருக்கான பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், பேட்டரி ஸ்வாப்பிங் மையத்தை பொறுத்து ஸ்கூட்டரில் சில மாடிஃபிகேஷன்களை செய்ய வேண்டியிருக்கும்.

மொத்தம் 2 விதமான வேரியண்ட்களில் இ1 எக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்று அதிகப்பட்சமாக 55kmph வேகத்திலும், மற்றொன்று 65kmph வேகத்திலும் செல்லும். இவை இல்லாமல், அதிகப்பட்சமாக 92kmph வேகத்தில் செல்லக்கூடிய இன்ஃபினிட்டி இ1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைக்கும் பணிகளிலும் பவுன்ஸ் இன்ஃபினிட்டி நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இது முக்கியமாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உருவாக்கப்படுகிறது.

பவுன்ஸ் இன்ஃபினிட்டி நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தனி நபர்கள் வாங்குவது மட்டுமின்றி, மொத்தமாக சில கார்ப்பிரேட் நிறுவனங்களும் வாங்குகின்றன. இந்த வகையில் சமீபத்தில், 30,000க்கும் அதிகமான எலக்ட்ரிக் வாகனங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை சன் மொபைலிட்டி நிறுவனத்துடன் பவுன்ஸ் இன்ஃபினிட்டி ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மேலும், முக்கியமான உணவு டெலிவிரி மற்றும் லாஸ்ட்-மைல் டெலிவிரி நிறுவனங்களுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையையும் நடத்தி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேட்டரி ஸ்வாப்பிங் முறை ஆனது வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரை மாற்றுவதை போன்றதே ஆகும். ஆனால், சிலிண்டரை நாம் தினந்தோறும் மாற்றப் போவதில்லை. ஆதலால், ஸ்வாப்பிங் முறையில் சிலிண்டரை மாற்றிக் கொள்வது பெரியதாக பிரச்சனையாக தெரிவதில்லை. ஆனால், தினந்தோறும் பயன்படுத்தும் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அவ்வப்போது பேட்டரியை மாற்றிக் கொள்வது எந்த அளவிற்கு சரிப்பட்டுவரும் என்பது தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, May 27, 2024, 20:23 [IST]
English summary
Bounce infinity e1 x electric scooter with battery swapping option
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+