இந்த ஸ்கூட்டரை ஓட்டும்போது சிறுத்தை மீதே அமர்ந்து போகின்ற ஃபீல் கிடைக்கும்!! இது தென்மாநிலத்தில் உருவாக்கியதா!

தென் மாநிலங்களில் ஒன்றான தெலங்கானா-வை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பிரிஸ்க் இவி (Brisk EV). இந்த நிறுவனமே இந்தியாவில் ஓரிஜின் (Origin) மற்றும் ஓரிஜின் ப்ரோ (Origin Pro), எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஓர் முழு சார்ஜில் 200 கிமீ வரை ரேஞ்ச் தரும் மின்சார ஸ்கூட்டர் மாடல்களே இவை ஆகும். லுக்கிலும் பிரிஸ்க் சீரிஸ் தனித்துவமானதாகவே காட்சியளிக்கின்றது. சொல்லப்போனால் இந்தியாவில் வைத்து தயாரிக்கப்பட்டது வாகனம்தானா இது என்றும் கேட்கும் அளவிற்கு முற்றிலும் தனித்துவமான ஸ்டைலைக் கொண்டதாக அது காட்சியளிக்கின்றது.

சிறுத்தையை பிரதிபலிக்கும் வகையிலேயே இதன் தோற்றம் இருக்கின்றது. மிக முக்கியமாக அதன் லைட் சிறுத்தையின் கண்களுடன் ஒத்துப் போகும் வகையில் இருக்கின்றன. தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாகவே இதனை பிரிஸ்க் இவி தயார் செய்திருக்கின்றது. ரூ. 1.39 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Brisk ev launches origin on charging

இதன் அதிகபட்ச ரேஞ்ச்-க்காக 4.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சமாக 7 மணி நேரங்களே போதுமானது. தொடர்ந்து, இந்த இ-ஸ்கூட்டரில் 8.7 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதன் பூட்-ஸ்பேஸ் 30 லிட்டர் ஆகும். வீட்டுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்-கறிகளைகூட இந்த ஸ்டோரேஜில் வாங்கி வைத்துக் கொள்ள முடியும். சிறப்பம்சங்களையும் இந்த இ-ஸ்கூட்டரில் பிரிஸ்க் இவி வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 7 அங்குல ஓடிஏ வசதிக் கொண்ட தொடுதிரை வழங்கப்பட்டு இருக்கின்றது.

Brisk ev launches origin and origin pro

நேவிகேஷன், செல்போன் இணைப்பு ஆகிய வசதிகளைத் தாங்கிய ஓர் திரையே இதுவாகும். இந்த திரையின் வாயிலாக மேப்பைப் பயன்படுத்தும்போது துள்ளியமான வழித்தடம் பற்றிய தகவல் கிடைக்கும் என கூறப்படுகின்றது. நிற தேர்வு விஷயத்திலும் இதில் பன்முக ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஆறு விதமான ஆப்ஷன்களே இதில் வழங்கப்படுகின்றன.

ஓசோன் கிரீன் (Ocean Green), ஸ்கார்லெட் சிவப்பு (Scarlet Red), ஓபல் ஒயிட் (Opal White), பேந்தர் பிளாக், (Panther Black), ஃப்ரோஸ்ட் சில்வர் (Frost Silver) மற்றும் மிஸ்டிக் ப்ளூ (Mystic Blue) ஆகியவையே அவை அந்த நிற தேர்வுகள் ஆகும். புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகத்தைத் தொடர்ந்து அதற்கு தற்போது ப்ரீ-புக்கிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

Brisk ev origin under seat storage

ரூ. 333 எனும் குறைவான முன் தொகையிலேயே முன் பதிவுகளை பிரிஸ்க் இவி ஏற்று வருகின்றது. இதன் டெலிவரி பணிகள் விரைவிலேயே தொடங்கப்பட இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 94 கிலோ மீட்டர் ஆகும். ஆகையால் உருவத்தில் மட்டுமல்ல செயல்திறனிலும் இது சிறுத்தையை போலவே இருக்கும் என தெரிகின்றது.

ஆகையால், சிறுத்தை மீது அமர்ந்து பயணிக்கின்ற அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், கால் மை ஸ்கூட்டர் (ஸ்கூட்டர் இருக்கும் இடத்தை அறிய உதவியாக இருக்கும்), ரிவர்ஸ் மோட், காம்பி பிரேக்கிங் சிஸ்டம், மோனோஷாக் சஸ்பென்ஷன், ஆவணங்களை சேகரிக்கும் வசதி, அலாய் கால் வைக்கும் இடம் உள்ளிட்ட சிறப்புகளையும் இந்த பிரிஸ்க் ஓரிஜின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆதிக்கம் மிகப் பெரிய அளவில் காணப்படுகின்றது. இதற்கு போட்டியளிக்கும் நோக்கிலேயே பிரிஸ்க் இவி அதன் ஓரிஜின் சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரேவற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 26, 2024, 17:21 [IST]
English summary
Brisk ev launched origin and origin pro electric scooters in india with competitive pricing
மேலும்... #electric scooter #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X