தமிழக தயாரிப்பு மீது கை வைக்க வரும் புதுமுக டூ-வீலர் பிராண்டு! வரவங்க எல்லாம் இந்த பிராண்ட குறி வச்சா எப்படி?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ் (Brixton Motorcycles) எனும் புதுமுக நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், எப்போது என்கிற விபரங்களை அது வெளியிடவில்லை. இப்போதும் அதுபற்றிய துள்ளியமான விபரங்கள் வெளியாகவில்லை. அதேவேளையில், வரும் பண்டிகை நாட்களை முன்னிட்டு சீக்கிரமே அது விற்பனைக்கு வர இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, பண்டிகையின் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கும் முன்னரே பிரிக்ஸ்டன் மோட்டார்ஸ்சைக்கிள்ஸ் அதன் உலக தரம் வாய்ந்த இரண்டு சக்கர வாகனங்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்த நிறுவனத்தின் இந்திய வருகை உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ் ஓர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த நிறுவனம் ஆகும். ஆனால், இதன் பெயர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்ததாகும். அதேவேளையில், இதன் இரண்டு சக்கர வாகனங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

Brixton bikes launch

இவ்வாறு, பலதரப்பட்ட நாடுகளை பிரதிபலிக்கும் ஓர் தயாரிப்பாகவே பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியாவில் அதன் கால் தடத்தைப் பதிக்க இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக நான்கு விதமான பைக் மாடல்களை அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. கிராஸ்ஃபயர் 500 எக்ஸ் (Crossfire 500 X), கிராஸ்ஃபயர் 500 எக்ஸ்சி (Crossfire 500 XC), குரோம்வெல் 1200 (Cromwell 1200) மற்றும் குரோம்வெல் 1200 எக்ஸ் (Cromwell 1200 X) பைக் மாடல்களையே அது அறிமுகப்படுத்தவுள்ளது.

கிராஸ்ஃபயர்: கிராஸ்ஃபயர் 500 எக்ஸ் மற்றும் கிராஸ்ஃபயர் 500 எக்ஸ்சி இந்த இரண்டிலும் 486 சிசி டூயல் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த எஞ்சின் 8,500 ஆர்பிஎம்-இல் 47.5 எச்பி பவரையும், 6,750 ஆர்பிஎம்-இல் 43 என்எம் ஆற்றலையும் வெளிப்படுத்தும் என்பது கவனிக்கத்தகுந்தது. கிராஸ்ஃபயர் 500 எக்ஸ் ஒரு ரெட்ரோ ரோட்ஸ்டர் மாடல் ஆகும். கிராஸ்ஃபயர் 500 எக்ஸ்சி ஸ்க்ராம்ப்ளர் ரகம் ஆகும்.

குரோம்வெல்: குரோம்வெல் 1200 மற்றும் குரோம்வெல் 1200 எக்ஸ் இந்த இரண்டிலும் 1,222 சிசி இரட்டை சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினேப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த எஞ்சின் 6,650 ஆர்பிஎம்மில் 83 எச்பி பவரையும், 3,100 ஆர்பிஎம்மில் 108 என்எம் ஆற்றலையும் வெளிப்படுத்தும்.

குரோம்வெல் 1200 ஒரு ரெட்ரோ ரோட்ஸ்டர் ரக பைக் மாடல் ஆகும். அதேசமயம் குரோம்வெல் 1200 எக்ஸ் மிகவும் முரட்டுத்தனமான பதிப்பாகும். இதன் முரட்டுத் தனத்திற்கு வலுசேர்க்கும் விதமாக டயர், டயர், சைலென்சர், மட்குவார்டு மற்றும் ஹெட்லைட் ஆகியவை மிகவும் முரட்டுத் தனமான லுக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ் ஆனது ஆஸ்திரிய குடும்ப வணிகமான கேஎஸ்ஆர் குழுமம் ஜிஎம்பிஎச் (GmbH)-க்கு சொந்தமானது. இந்தியாவில், இந்த நிறுவனம் கேஏடபிள்யூ (KAW) குழுமத்தின் துணை நிறுவனமான கேஏடபிள்யூ வெலாஸ் மோட்டார்ஸ் (KAW Veloce Motors) உடன் இணைந்தே வர்த்தக பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது.

ஆமாங்க, இந்த கூட்டணியின் வாயிலாக பிரிக்ஸ்டன் நிறுவனம் அதன் அனைத்து டூ-வீலர்களையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. சென்னை, புனே, மும்பை, நாசிக், ஹைதராபாத், பெங்களூரு, கொச்சின், கோயம்புத்தூர், அகமதாபாத் மற்றும் சூரத் போன்ற நகரங்களில் பிரிக்ஸ்டன் அதன் சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்க உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதலில் முக்கிய நகரங்களையும், பின்னாளில் அடுத்தடுத்த நகரங்களிலும் அது அதன் ஷோரூம்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் வருகை இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியாக அமைய உள்ளது. குறிப்பாக, ராயல் என்பீல்டுக்கு இதன் வருகை லேசான தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறுவனத்தின் குரோம்வெல்1200, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்பெற்ற இரட்டையர்கள் பைக் மாடல்களில் ஒன்றான இன்டர்செப்டார் 650க்கு போட்டி அளிக்கும் வகையில் உள்ளது. சொல்லப் போனால் அதன் தோற்றத்தை அப்படியே ஒத்த மாடலாக குரோம்வெல்1200 காட்சியளிக்கின்றது. ஒற்றை துண்டு இருக்கை அமைப்பு, ஃப்யூவல் டேங்க், வட்ட வடிவ ஹெட்லேம்ப் ஆகிய அனைத்திலும் இரண்டும் ஒரே மாதிரியாகவே உள்ளன. அதேவேளையில், எக்சாஸ்ட் சிஸ்டம் மற்றும் எஞ்சின் விஷயத்தில் இரண்டும் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டிருப்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 12, 2024, 11:01 [IST]
English summary
Brixton motorcycles launch in india during festive season
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+