ராயல் என்பீல்டு சாம்ராஜ்யத்திற்கு செக்! இந்தியாவே காத்து கிடந்த பைக்கின் டெலிவரி தொடங்கியது! விலை இவ்ளோதானா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 (BSA Gold Star 650) பைக், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான முன்பதிவு (Bookings) பணிகள் ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்குகளை டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கிற்காக காத்து கொண்டிருந்தவர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) பைக்கிற்கு நேரடி போட்டியாக, பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 களமிறக்கப்பட்டுள்ளது. பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் ஆரம்ப விலை 2.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

BSA Gold Star 650

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 3.35 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கில், 652 சிசி சிங்கிள் சிலிண்டர் டிஓஹெச்சி 4 வால்வு லிக்யூட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,000 ஆர்பிஎம்மில் 45 பிஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 55 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

BSA Gold Star 650 Side Design

பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கில், ஸ்லிப்பர் மற்றும் அஸிஸ்ட் க்ளட்ச் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேச மாநிலம் பிதாம்பூரில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் முன் பகுதியில் 41 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் ட்யூயல் ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்த பைக்கின் முன் பகுதியில் 18 இன்ச் வீலும், பின் பகுதியில் 17 இன்ச் வீலும் வழங்கப்பட்டுள்ளன.

பிரேக்கிங்கை பொறுத்தவரையில், முன் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 255 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கண்ணீர் துளி வடிவில் வழங்கப்பட்டுள்ள இந்த பைக்கின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 12 லிட்டர்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கிற்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 கருதப்படுகிறது. விலை நிர்ணயம் சரியான அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 21, 2024, 12:51 [IST]
English summary
Bsa gold star 650 deliveries begin in india all details here
மேலும்... #BSA #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+