50 வருடங்களுக்கு பின் விற்பனைக்கு வந்த பைக்... இந்த ஸ்டைலுக்காகவே எல்லாரும் வாங்க போறாங்க!!
பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் (BSA Motorcycles) நிறுவனம் அதன் புதிய கோல்டு ஸ்டார் 650 (Gold Star 650) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் அறிமுகம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் முதல் பைக்கை பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இன்சைனியா சிவப்பு, ஹைலேண்ட் க்ரீன், மிட்நைட் கருப்பு, டவுன் சில்வர் மற்றும் ஷேடோவ் பிளாக் என மொத்தம் 5 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த புதிய பிஎஸ்ஏ பைக் கிடைக்கும்.
இதில், இன்சைனியா சிவப்பு, ஹைலேண்ட் க்ரீன் பெயிண்ட் ஆப்ஷன்களில் பைக்கின் விலை ரூ.2,99,990 ஆகவும், மிட்நைட் பிளாக், டவுன் சில்வர் பெயிண்ட் ஆப்ஷன்களில் ரூ.3,11,990 விலையாகவும், ஷேடோவ் பிளாக் பெயிண்ட்டில் ரூ.3,15,990 விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்சைனியா சிவப்பு நிறத்தில் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கை நாங்கள் நெருக்கமாக பார்த்தோம். அதுகுறித்த வீடியோவை கீழே காணலாம்.
கோல்டு ஸ்டார் 650 பைக்கில் 652சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம் வேகத்தில் 45 பிஎச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம் வேகத்தில் 55 என்.எம் டார்க் திறன் வரை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த பைக்கின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 160கிமீ ஆகும்.

இந்த பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ட்வின் ஷாக் அப்சார்ப்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங் பணிக்கு இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் அலாய் சக்கரங்களுக்கு பதிலாக வயர் ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்களில் ட்யூப்-டைப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ட்யூப்-லெஸ் டயர்கள் இல்லை.


Click it and Unblock the Notifications








