ராயல் என்ஃபீல்டுக்கு ஆட்டத்தை எல்லாம் அடக்க களம் இறங்கிய பிஎஸ்ஏ! முதல் பைக்கே செம மாஸா இருக்குதே!

இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனத்தின் துணை நிறுவனமான பிஎஸ்ஏ என்ற நிறுவனம் தனது கோல்டு ஸ்டார் 650 என்ற பைக்கை இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த பைக் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பைக்கில் புதிதாக என்னென்ன அம்சங்கள் இருக்கிறது. இது எப்படி ராயல் என்ஃபீல்டு பைக்குக்கு போட்டியாக இருக்கும் என்ற முழுமையான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் நடத்தி வரும் பிஎஸ்ஏ என்ற நிறுவனம் இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 என்ற பைக்கை இந்தியாவில் களம் இறக்க முடிவு செய்துள்ளது. இந்த பைக் ஒரு பழைய பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் லுக்கில் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

bsa gold star 650

இந்த பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு பொதுவெளியில் சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது இந்த பைக்கை அந்நிறுவனமே வெளியிட திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கி உள்ளது. தற்போது இந்த பைக்கை வெளியிட முடிவு செய்துவிட்டது. வரும் ஆக.15ம் தேதி இந்த பைக் அறிமுகமாகவுள்ளது.

இந்த பைக்கின் வடிவமைப்பை பொறுத்தவரை 1950-60களில் வெளியான கோல்டு ஸ்டார் பைக்கின் வடிவமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. இதில் ஏராளமான குரோம் பாகங்கள் உள்ளன. முக்கியமாக வட்டமான ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பெட்ரோல் டேங்க் நீர் துளியின் வடிவமைப்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் பிளாட் சீட்டு மற்றும் வயர்டு ஸ்போக் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

bsa gold star 650

இந்த பைக்கின் முன்பக்கம் 41 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கம் 5 ஸ்டெப் ஃப்ரீ லோடு அட்ஜெஸ்டபிள் உடன் கூடிய ஷாக்கப்சர்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கின் பிரேக்குகளை பொறுத்தவரை முன் பக்கம் 320 மிமீ, பின்பக்கம் 255 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளன. பிரிம்போ நிறுவனம் தயாரித்த இந்த பேக்கில் முன்பக்க வீலில் இரண்டு பிஸ்டன்களும், பின்பக்க வீலில் ஒரு பிஸ்டனும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கை பொறுத்தவரை 12 லிட்டர் டேங்க் கொள்ளளவு கொண்டதாகவும், 213 கிலோ எடை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சமே அதன் இன்ஜின் தான் அதிக பவர் கொண்ட பைக்கை விரும்புபவர்களுக்கு இது சிறப்பாக இருக்கும்.

bsa gold star 650

இந்த பைக்கின் இன்ஜினை பொறுத்தவரை 652 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் டிஓஎச்சி 4 வால்வு இன்ஜின் இரண்டு ஸ்பார்க் பிளக்குடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 45 பிஎச்பி பவரை 5000 ஆர்பிஎம்-ல் 55 என்எம் டார்க் திறனை 4000 ஆர்பிஎம்-மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு இதில் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச்களும் இணைக்கப்பட்டுள்ளன.

கிளாசிக் லெஜன்ட் பைக்குகளை வெளியிடும் இந்தியாவின் மூன்றாவது நிறுவனமாக இந்த பிஎஸ்ஏ நிறுவனம் இணைந்துள்ளது. இந்த பைக்கில் உள்ள 650சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இந்திய மார்க்கெட்டுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் களமிறங்குகிறது. ஏற்கனவே இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கிற்க்கு போட்டியாக இந்த பைக் களமிறங்குகிறது. ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கை பொறுத்தவரை பேரலெல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் ஆகும்.

இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனக்கென ஒரு வாடிக்கையாளர் கூட்டத்தையே வைத்திருக்கிறது. இந்த செக்மெண்டில் உள்ள வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு விதமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அதன்படி மஹிந்திரா நிறுவனமும் பிஎஸ்ஏ என்ற தனது துணை நிறுவனத்தின் மூலம் இந்த செக்மெண்டில் உள்ள மக்களை கவர முயற்சி செய்து உள்ளது.

இந்த பைக் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகமான பின்பு இதன் டெலிவரிகள் மற்றும் புக்கிங் குறித்த விபரங்கள் எல்லாம் வெளியாகும் அப்பொழுதுதான் இந்த பைக்கின் விலையும் தெரிய வரும் நிச்சயம் மார்க்கெட்டில் உள்ள இதன் போட்டி நிறுவனங்களின் பைக்குக்கு நிகரான விலையில் தான் இந்த பைக்கும் அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளன. இதனால் மார்க்கெட்டில் இந்த செக்மெண்டில் கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் பவர்ஃபுல்லான இன்ஜின் கொண்ட பைக்குகள் மீது மோகம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஒரு காலத்தில் 650 சிசி இன்ஜின்களை மிகக் கம்மியான நபர்களை வாங்கி வந்தார்கள். ஆனால் இன்று இளைஞர்கள் இந்த ரக இன்ஜின்களை வாங்க அதிக ஆர்வக் காட்டுகிறார்கள். எதிர்காலத்தில் இந்த செக்மென்ட் தான் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 24, 2024, 19:37 [IST]
English summary
Bsa gold star 650 india launch on august 15
மேலும்... #new launches #india #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X