சியாட் இந்தியன் சூப்பர் கிராஸ் ரேசிங் லீக் போட்டியின் முடிவுகள்.. போட்டி களத்தை ஒரு கை பார்த்த வீரர்கள்..

புனேவில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு மைதானத்தில் சமீபத்தில் சியாட் இந்தியன் சூப்பர் கிராஸ் ரேசிங் லீக்கின் தொடக்க பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியைக் காண இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருந்து விளையாட்டு பிரியர்கள் வந்திருந்தனர். சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த பந்தயத்தை ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். மேலும், இந்த அளவு பார்வையாளர்கள் கலந்துக் கொண்டதால் இந்த போட்டிகள் மிகுந்த உற்சாகம் நிறைந்ததாகக் காட்சியளித்தது.

உச்சத்தில் சர்வதேச சாம்பியன்களின் ஆதிக்கம்: இந்த போட்டியில் சர்வதேச விளையாட்டு வீரர்களின் ஆதிக்கமே உச்சத்தில் இருந்தது. பிபி ரேசிங் குழு சார்பில் கலந்துக் கொண்ட ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோர்டி டிக்ஸியர், 450 சிசி இன்டர்நேஷ்னல் ரேஸ் பிரிவில் முதல் இடத்தை பிடித்தார்.

Ceat indian supercross racing league

பிக் ராக் மோட்டாஸ்போர்ட் குழு சார்பில் கலந்துக் கொண்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரெய்ட் டெய்லர் 250 பிரிவில் முதல் இடத்தை பிடித்தார். இதேபோல், 250சிசி இந்தியா-ஆசியா மிக்ஸ் பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த தனரத் பென்ஜன் முன்னணி இடத்தைப் பிடித்தார். இவரும் பிக்ராக் மோட்டார்ஸ்போர்ட் குழுவைச் சேர்ந்தவர் ஆவார்.

எத்தனை மற்றும் என்னென்ன பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன? 4விதமான பிரிவின்கீழ் சியாட் இந்தியன் சூப்பர் கிராஸ் ரேசிங் லீக் நடைபெற்றது. 450சிசி இன்டர்நேஷனல், 250சிசி இன்டர்நேஷனல், 250சிசி இந்தியா-ஆசியா மிக்ஸ் மற்றும் 85சிசி ஜூனியர் கிளாஸ் ஆகியவையே அந்த பிரிவுகளாகும். இந்த போட்டியில் உலக நாடுகள் பலவற்றில் இருந்து முன்னணி போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர். போட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் சாதகமான சூழலை ஐஎஸ்ஆர்எல் குழு ஏற்படுத்திக் கொடுத்தது கவனிக்கத்தகுந்தது.

Ceat isrl pune race

போட்டியின் தொடர்ச்சி எங்கு? எப்போது? நடைபெற இருக்கின்றது? புனேவைத் தொடர்ந்து அடுத்தகட்ட போட்டிகள் நாட்டின் வெவ்வேறு நகரங்களில் நடைபெற இருக்கின்றன. அந்தவகையில், அடுத்ததாக அஹமதாபாத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கின்றது. பிப்ரவரி 11 ஆம் தேதி அன்றே அது நடைபெற உள்ளது.

இகேஏ அரேனாவிலேயே அது நடைபெற இருக்கின்றது. மேலும், இந்த போட்டிகளின் இறுதி சுற்று அதே பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திலேயே இறுதி சுற்று போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

Isrl pune race

சியாட் ஐஎஸ்ஆர்எல் ரேஸ் 1இன் முடிவுகள்:

250cc இந்தியா-ஆசியா மிக்ஸ் பிரிவின் முடிவுகள்:

வரிசை எண்: போட்டியாளரின் பெயரும் எண்ணும் புள்ளிகள் குழுவின் பெயர்
1 தனரத் பென்ஜன் | 71 40 பிக்ராக் மோட்டார்ஸ்போர்ட்
2 அதிசன் ருவதெரோ | 112 32 பிபி ரேசிங்
3 பென் பிரசிட் ஹல்கிரன் | 31 26 மோஹிதேஸ் ரேசிங் டீம்
4 ரக்வத் பர்குஜே | 9 26 எஸ்ஜி ஸ்பீடு ரேசர்ஸ்
5 ஜேக்வஸ் கன்வர்தனா | 99 22 குஜராத் டிரெயில் பிளேசர்ஸ்
6 பிரஜ்வர் விஷ்வநாத் | 21 17 பிபி ரேசிங்
7 இக்ஷான் சன்பா | 42 17 பிக்ராக் மோட்டார்ஸ்போர்ட்
8 சர்தக் சவன் | 75 15 மோஹிதேஸ் ரேசிங் டீம்
9 ஜிநேந்தரா கிரண் சங்கவே | 97 14 எஸ்ஜி ஸ்பீடு ரேசர்ஸ்
10 ஜே ஜாதவ் | 45 12 ரெய்ஸே மோட்டோஸ்போர்ட்
11 ஸ்லோக் விக்ரம் கோர்படே | 33 10 ரெய்ஸே மோட்டோஸ்போர்ட்
12 அனந்த ரிகி ஆதித்யா | 216 0 குஜராத் டிரெயில் பிளேசர்ஸ்

250cc இன்டர்நேஷனல்:

Position: Rider Name & Number: Points: Team:
1 ரெய்சே டெய்லர் | 86 40 பிக்ராக் மோட்டார்ஸ்போர்ட்
2 ஹுகோ மன்சேட்டோ | 965 34 எஸ்ஜி ஸ்பீடு ரேசர்ஸ்
3 ஜூலியன் லெப்யூ| 259 30 மோஹிதேஸ் ரேசிங் டீம்
4 என்சோ போலியாஸ் | 335 26 குஜராத் டிரெயில் பிளேசர்ஸ்
5 மைக்கேல் லமர்க் | 22 22 பிபி ரேசிங்
6 கிளமெண்ட் பிரியட் | 851 19 குஜராத் டிரெயில் பிளேசர்ஸ்
7 மேக்ஸிமிலியன் வெர்னர் | 494 19 மோஹிதேஸ் ரேசிங் டீம்
8 பிரெண்டன் சிப்பிள் சிப்பிள் | 77 16 ரெய்ஸே மோட்டோஸ்போர்ட்
9 கேலெப் கௌலட் | 49 14 பிக்ராக் மோட்டார்ஸ்போர்ட்
10 உலி ஸ்டாக்கர் | 921 11 எஸ்ஜி ஸ்பீடு ரேசர்ஸ்
11 அலெக்ஸ் லேசராஸ் ஓர்தா | 66 10 ரெய்சே மோட்டோஸ்போர்ட்
12 நிக் லேரி | 226 9 பிபி ரேசிங்

450cc இன்டர்நேஷனல்:

Position: Rider Name & Number: Points: Team:
1 ஜோர்டான் டிக்ஸியர் | 911 40 பிக்ராக் மோட்டார்ஸ்போர்ட்
2 மேட் மோஸ் | 102 32 பிபி ரேசிங்
3 செட்ரிக் சூபேரஸ் | 85 32 மோஹிதேஸ் ரேசிங் டீம்
4 தாமஸ் ரமட்டே | 206 26 எஸ்ஜி ஸ்பீடு ரேசர்ஸ்
5 ஹால் ஹேபர்லேண்ட் | 491 20 குஜராத் டிரெயில்பிளேசர்ஸ்
6 டைலர் போவர்ஸ் | 69 18 பிபி ரேசிங்
7 லோரன்ஸோ கேம்போரெஸே | 384 17 பிக்ராக் மோட்டார்ஸ்போர்ட்
8 நிகோ கோச் | 20 17 மோஹிதேஸ் ரேசிங் டீம்
9 மைக்கேல் கர்டன்பெர்க் | 477 12 எஸ்ஜி ஸ்பீடு ரேசர்ஸ்
10 ஜேக் பிரெஸ்டன் | 957 12 ரெய்ஸே மோட்டோஸ்போர்ட்
11 சார்லஸ் லெஃப்ரான்கோய்ஸ் | 225 11 ரெய்ஸே மோட்டோஸ்போர்ட்
12 அந்தோணி ரேநார்ட் | 23 9 குஜராத் டிரெயில்பிளேசர்ஸ்

அனைத்து ஸ்டார்களும் (Best of 250cc and 450cc):

Position: Rider Name & Number: Laps: Team: Nationality:
1 ஜோர்டி டிக்ஸியர் | 911 9 பிபி ரேசிங் ஃபிரான்ஸ்
2 மேட் மோஸ் | 102 9 பிக்ராக் மோட்டார்ஸ்போர்ட் ஆஸ்திரேலியா
3 சார்லஸ் லெஃப்ரான்கோய்ஸ் | 225 9 மோஹிதேஸ் ரேசிங் டீம் ஃபிரான்ஸ்
4 ரெய்ட் டைலர் | 86 9 பிக்ராக் மோட்டார்ஸ்போர்ட் ஆல்திரேலியா
5 லோரென்ஸோ கேம்போரெஸே | 384 9 எஸ்ஜி ஸ்பீடு ரேசர்ஸ் இத்தாலி
6 டைலர் போவர்ஸ் | 69 9 குஜராத் டிரெயில்பிளேசர்ஸ் அமெரிக்கா
7 ஜுலியன் லெப்யூ | 259 9

மோஹிதேஸ் ரேசிங் டீம்

ஃபிரான்ஸ்
8 தனரத் பென்ஜன் | 71 9 பிக்ராக் மோட்டார்ஸ்போர்ட் தாய்லாந்து
9 பிரெண்டன் சிப்பிள் | 77 9 ரெய்ஸே மோட்டோஸ்போர்ட் அமெரிக்கா
10 ஹூகோ மன்ஸடோ | 965 8 எஸ்ஜி ஸ்பீடு ரேசர்ஸ் ஃபிரான்ஸ்
11 ஜேக்வர் கன்வர்தனா | 99 8 குஜராத் டிரெயில்பிளேசர்ஸ் இலங்கை
12 ரக்வத் பர்குஜே | 9 8 எஸ்ஜி ஸ்பீடு ரேசர்ஸ் இந்தியா
13 தாமஸ் ரமட்டே | 206 8 ரெய்ஸே மோட்டோஸ்போர்ட் ஃபிரான்ஸ்
14 என்தோ போலியஸ் | 335 8 குஜராத் டிரெயில்பிளேசர்ஸ் ஃபிரான்ஸ்
15 ஸ்லோக் விக்ரம் கோர்படே | 33 6 ரெய்ஸே மோட்டோஸ்போர்ட் இந்தியா
16 அதிோன் ருவதரே Ruadero | 112 6 பிபி ரேசிங் தாய்லலாந்து
17 மைக்கேல் லமக்| 22 2 பிபி ரேசிங் ஃபிரான்ஸ்

போட்டியில் கலந்துக் கொண்ட குழுக்கள்:

Position: Team: Points:
1 பிக்ராக் மோட்டார்ஸ்போர்ட் 213
2 பிபி ரேசிங் 153
3 மோஹிதேஸ் ரேசிங் டீம் 145
4 எஸ்ஜி ஸ்பீடு ரேசர்ஸ் 132
5 குஜராத் டிரெயில்பிளேசர்ஸ் 114
6 ரெய்ஸே மோட்டோஸ்போர்ட் 101

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சியாட் இந்தியன் சூப்பர்-கிராஸ் ரேஸிங் லீக் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதன் வருகையால் இந்தியாவில் இதுபோன்று இன்னும் பல புதுமுக போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது. அதிக பாதுகாப்பான சூழல் போட்டியாளர்களுக்கு கிடைக்கும் என்பதால் சர்வதேச போட்டியாளர்களின் பங்களிப்பு மிக வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிக்ராக் மோட்டார் ஸ்போர்ட் குழுவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, இந்த குழு போட்டியை மிகவும் சுவராஷ்யமானதாகவும், உற்சாகமானதாகவும் மாற்றியது. அடுத்து வரும் இரண்டு பந்தயங்களிலும் இவர்கள் சக போட்டியாளர்களுக்கு மிகப் பெரிய சவாலை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம். அதேவேளையில், அடுத்து வரும் போட்டிகளில் என்ன வேண்டுமானாலும், ஆகையால் கிரீடம் யாருக்கு செல்லும் என்பதே பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, January 29, 2024, 18:52 [IST]
English summary
Ceat indian supercross racing league season 1 results
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X