பெங்களூருவில் நிகழ்ந்த உலக சாதனை! இந்த போட்டியை இத்தனை பேர் பாத்தாங்களா?
சியட் இந்தியன் சூப்பர் கிராஸ் ரேஸிங் லீக் போட்டியின் இறுதி கட்ட வெற்றியாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பிக் ராக் மோட்டார் ஸ்போர்ட் என்ற டீம் தற்போது இந்த போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த குழுவினர் தான் முதல் பரிசை தட்டி சென்றுள்ளனர். இந்த போட்டி குறித்த விரிவான விபரங்களையும் வெற்றியாளர்கள் குறித்த விபரங்களையும் காணலாம் வாருங்கள்.
சியட் இந்தியன் சூப்பர் கிளாஸ் ரேஸிங் லீக் என்பது உலகின் முதல் பிரான்ஸிசி அடிப்படையிலான சூப்பர் கிராஸ் லீக் போட்டிகள் ஆகும். இது இந்தியாவில் உள்ள விளையாட்டு குறித்த உத்வேகத்தை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட போட்டியாக இருக்கிறது. இதில் பல்வேறு ஃபார்மெட்டுகளில் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெறும். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தி சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் மூலம் வெற்றி பெற வேண்டும்.

இந்த போட்டிக்கான பாதுகாப்பான தளத்தை தான் சூப்பர் கிராஸ் ரேஸிங் லீக் அமைப்பினர் செய்து கொடுத்துள்ளனர். இந்த போட்டி இந்தியாவில் நடந்து முடிந்துள்ளது. இறுதி கட்டப் போட்டிகளும் முடிந்து அதற்கான வெற்றியாளர்கள் குறித்து அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த போட்டியில் பிக்ராக் மோட்டார் ஸ்போர்ட் என்ற குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர்.
இறுதி போட்டியில் அந்த குழுவினர் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்ததால் அவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். இதில் 450 சிசி கேட்டகிரியில் இந்த குழுவை சேர்ந்த மேட்மோர்ஸ் என்பவர் கவாஸகி பைக்கை ஒட்டி முதல் இடத்தை பிடித்தார். 250சிசி கேட்டகிரியிலும் இதே குழுவை சேர்ந்த ரெய்டு டைலர் என்பவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். 250 சிசி இந்தியா ஆசியா கலப்பு பிரிவில் இதே குழுவை சேர்ந்த பென்ஜன் என்பவர் முதலிடத்தை பிடித்தார்.

இப்படியாக பல போட்டிகளில் ஒரே குழுவினர் முதல் இடத்தை பிடித்த நிலையில் இந்த குழுவினர் தான் இந்த போட்டியில் இறுதி கட்ட வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இறுதி போட்டிகள் பெங்களூருவில் நடந்தது. இந்த போட்டியை காண 8 ஆயிரத்திற்கும் அதிகமான கலந்து கொண்டனர். ஒட்டுமொத்தமாக இந்த ரேஸிங் சீசன் முழுவதையும் 30,000த்திற்கும் அதிகமானோர் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து சியட் இந்தியன் சூப்பர் கிராஸ் ரேஸிங் லீக் குழுவின் இணை நிறுவனர் விர் பட்டேல் கூறும்போது: " பெங்களூருவில் நடந்த இறுதி கட்ட போட்டிகள் எங்கள் எதிர்பார்ப்பையும் மீறியதாக இருக்கிறது. இதன் இரண்டாவது சீசனிற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அதிக பார்வையாளர்களைக் கொண்ட பைக் ரேஸ் போட்டி என்ற உலக சாதனையை இதன் மூலம் படைத்துள்ளோம். இதுவரை வெளிநாடுகளில் இப்படியான எந்த சாதனையும் செய்யப்படவில்லை.

இது எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் விஷயமாக இருக்கிறது. எங்களுக்கு எஃப்எம்எஸ், எஃப்எம்ஐ, ரேஸிங் டீம்கள் மற்றும் அனைத்து பாட்னர்களும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார்கள். சியட் இந்தியன் சூப்பர் கிராஸ் ரேசிங் லீக் சார்பாக வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். போட்டியாளர்கள் அவர்களது திறனையும் முயற்சியையும் வெளிக்காட்டி இந்த போட்டியை மிகப்பெரிய வெற்றி போட்டியாக மாற்றி உள்ளார்கள்" எனக் கூறினார்.
இது இந்தியன் சூப்பர் கிராஸ் ரேசிங் லீக் போட்டியின் முதல் போட்டியாகும் இந்த முதல் போட்டிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் இவர்கள் இந்த போட்டியை திறம்பட அதிக பாதுகாப்பு மற்றும் போட்டிகள் நிறைந்த தளமாக மாற்றி உள்ளார்கள். அனைத்து வயது மற்றும் அனைத்து ஸ்கில் கொண்ட ரைடர்களும் இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற முடியும்.
இந்த சியட் இந்தியன் சூப்பர் கிராஸ் ரேசிங் லீக் போட்டி என்பது இந்த ஆண்டு மீண்டும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இரண்டாவது சீசன் குறித்த அப்டேட் இதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த எந்த விதமான தகவலும் இல்லை என்றாலும் விரைவில் இதற்கான தகவல் எல்லாம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீப நாட்களாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்த ரேஸிங் போட்டிகள் எல்லாம் பிரபலமாகி வருகின்றன. இதற்கான ரசிகர்கள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்ட ஒரு நாடு சீக்கிரம் வளர்ச்சியடையும் என்பதால் இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடையும் நாடாக மாறி வருகிறது என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









