சியட் கிட்ட யாரும் இதை எதிர்பார்க்கல! 2 புது டயர் ஓட்டி பார்க்க எப்படி இருக்குது தெரியுமா?
சியட் நிறுவனம் பைக்களுக்கான ஸ்போர்ட்ஸ் ராட், கிராஸ் ராட் என்ற பிரத்தியேக டயர்களை உருவாக்கி மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் டயர்கள் ஸ்போர்ட்ராட் டயரை பொருத்தி டிராக்குகளில் ஓட்டினால் சிறந்த பெர்பார்மன்ஸ் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஸ்போர்ட்ஸ் பைக் என்பதால் அதிக வேகத்திலும் அதே நேரம் திருப்பங்களில் சிறப்பாக செயல்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டயர்களை சோதனை செய்து பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்திருந்தது. அதன் பெயரில் எங்கள் குழுவினர் கோவையில் உள்ள கரி மோட்டார் வே என்ற பகுதிக்கு சென்றோம். அங்கு கேடிஎம் ஆர்சி 390 பைக்கில் ஸ்போர்ட் ராட் டயரையும், பிஎம்டபிள்யூ 310 ஜிஎஸ் பைக்கில் கிராஸ் ராடய் டயரை பொருத்தி நாங்கள் சோதனை செய்து பார்த்தோம். அதை வீடியோவாக உங்களுக்கு பகிர்ந்து உள்ளோம்.
சியட் நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த ஸ்போர்ட்ராட் டயர் டபிள்யூ ரேட் செய்யப்பட்ட டயர்களாக உள்ளன. அதாவது இதை டயர் பொருத்தப்பட்ட வாகனம் 300 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வேகமாக திருப்பங்கள் திரும்பும் போது ஸ்டேபிளாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இது செயல்படுகிறது.

கிராஸ் ராட் டயரை பொருத்தவரை 60 சதவீதம ஆன் ரோடிலும், 40 சதவீதம் ஆஃப் ரோடிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆஃப்ரோடில் பிரேக்கிங் சிறப்பாக உள்ளது. ஸ்போர்ட் ராட் டயர் தயாரிக்கப்பட்ட அதே முறையில் தான் இந்த டயரும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த டயர் ஆன்ரோட்டிலும் சரி ஆஃப்ரோட்டிலும் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்கிறது.


Click it and Unblock the Notifications








