சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கேன்டீனில் இணைப்பு.. BSF, CRPF வீரர்களால் கம்மி விலையில் வாங்கிக்க முடியும்..

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடல்களில் ஒன்றாக பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சேத்தக் ப்ளூ 2903 (Chetak Blue 2903), சேத்தக் ப்ளூ 3202 (Chetak Blue 3202), சேத்தக் பிரீமியம் 2024 (Chetak Premium 2024) மற்றும் சேத்தக் 3201 எஸ்இ (Chetak 3201 SE) ஆகியவையே அவை ஆகும். இதில் சமீபத்திய வெளியீடாக சேத்தக் ப்ளூ 2903 தேர்வு இருக்கின்றது.

இதுவே இந்த சேத்தக் பிராண்டின் விலை குறைவான தேர்வாகவும் காட்சியளிக்கின்றது. ரூ. 95,998 என்கிற விலைக்கே இந்த மின்சார ஸ்கூட்டர் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டும் ஆகும். இந்த விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே கேந்திரியா போலீஸ் கல்யாண் பந்தர் (Kendriya Police Kalyan Bhandar)-இல் இணைத்திருப்பதாக சேத்தக் அறிவித்திருக்கின்றது.

Chetak 2903 officially listed kpkb

எனவே பிஎஸ்எஃப் (BSF), சிஆர்பிஎஃப் (CRPF), சிஐஎஸ்எஃப் (CISF), ஐடிபிபி (ITBP), எஸ்எஸ்பி (SSB) மற்றும் அசாம் ரைஃபில்ஸ் (Assam Rifles) உள்ளிட்ட பிரிவுகளில் வீரர்களால் சற்றே மலிவான விலையில் பஜாஜ் சேத்தக் 2903 குறைவான விலையில் விற்பனைக்கு வாங்கிக் கொள்ள முடியும்.

என்ன விலையில் அவர்களுக்கு விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் ரூ. 95,998-க்கு விற்கப்படும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதைவிட குறைவான விலையிலேயே அவர்களுக்கு விற்பனைச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கேந்திரியா போலீஸ் கல்யாண் பந்தர்-இன் பயனர்களாக இருக்கும் எந்தவொரு வீரராலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும்.

நாடு முழுவதும் உள்ள சேத்தக் எக்ஸ்பீரியன்ஸ் மையங்களிலேயே இதை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு சில முக்கிய ஆவணங்களைக் காண்பிக்கும் பட்சத்தில் அந்த வீரருக்கு சேத்தக் 2903 விற்பனைக்கு வழங்கப்படும். கடந்த 2006 ஆம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பாதுகாப்பு வீரர்களின் நலன் கருதி தொடங்கப்பட்டதே கேந்திரிய போலீஸ் கல்யாண் பந்தர் ஆகும்.

இதன் வாயிலாக இயங்கும் ஸ்டோர்களில் வீரர்களுக்கு மலிவான விலையில் அத்தியாவசிய பொருட்கள் பல விற்பனைச் செய்யப்படுகின்றன. இந்த நிலையிலேயே இதில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இது சந்தையில் சேத்தக் ப்ளூ 2903 எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

நகர்புற பயன்பாட்டிற்கு உகந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக அது காட்சியளிக்கின்றது. ஓர் முழு சார்ஜில் இது 123 கிமீ ரேஞ்ச் தரும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. மெட்டல் பாடி, தெளிவான பார்வை மற்றும் கலர்ஃபுல் வசதிக் கொண்ட திரை, இலகு ரக அலாய் வீல் மற்றும் மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றை இதில் வழங்கி இருக்கின்றனர்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 63 கிமீ ஆகும். ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் இதனை வாங்கிக் கொள்ள முடியும். இந்த வாகனத்தை டெக் பேக் வசதியுடன் வாங்கிக் கொள்ள முடியும். இந்த வசதிக் கொண்ட சேத்தக் ப்ளூ 2903 கூடுதலாக ரூ. 3 ஆயிரம் அதிக விலையைக் கொண்டிருக்கும். இந்த விலையில், ஹீல் ஹோல்டு, ரிவர்ஸ் மோட், ஈகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய மோட்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் குறைவான விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை நுகரும் நோக்கில் கேந்திரியா போலீஸ் கல்யாண் பந்தர்-இல் இணைத்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 24, 2024, 18:32 [IST]
English summary
Chetak 2903 electric scooter officially listed with kpkb
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+