100கிமீ மைலேஜ் தரும் பஜாஜ் பைக் இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா!! ஆளுக்கு 2னு வாங்கி குவிக்க போறாங்க!

இந்தியர்களின் பெரும் எதிர்பார்ப்பாக பஜாஜ் (Bajaj) நிறுவனத்தின் சிஎன்ஜி (CNG)யில் இயங்கும் பைக் மாறி இருக்கின்றது. இந்த பைக் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது என்கிற விபரமே தற்போது வெளியாகி இருக்கின்றது. இதுபற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ், வெகு விரைவில் இந்திய சந்தையில் சிஎன்ஜியில் இயங்கும் காரை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் சிஎன்ஜியில் இயங்கும் ஆட்டோ, கார் மற்றும் கன ரக வாகனங்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன.

CNG bike launch month annouced

ஆனால், இரண்டு சக்கர வாகனங்கள் இன்னும் இந்த பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த குறையையே விரைவில் இந்தியாவைச் சேர்ந்த பஜாஜ் நிறுவனம் போக்க இருக்கின்றது. இந்த நிறுவனம் ஏற்கனவே அதன் சிஎன்ஜியில் இயங்கும் பைக் மாடலின் சோதனையோட்டத்தை நாட்டில் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே அந்த பைக்கின் அறிமுகமாக இருக்கும் மாதம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கின்றது. வருகின்ற ஜுன் மாதத்திலேயே பஜாஜ்-இன் சிஎன்ஜி பைக் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த தகவலை பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ராஜீவ் பஜாஜ்-ம் உறுதி செய்திருக்கின்றார்.

இன்று (வெள்ளிக்கிழமை) கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்ட அவர் அப்போதே பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் அறிமுக மாதத்தை உறுதிப்படுத்தினார். இத்துடன், வேறு பிராண்டில் இந்த பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். அதாவது, புதிய பிராண்டின் கீழ் சிஎன்ஜி பைக்குகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதையே அவர் இவ்வாறு கூறினார்.

துள்ளியமான நாள் விபரத்தை பஜாஜ் அறிவிக்கவில்லை. ஆகையால், ஜூன் மாத இறுதிக்குள் சிஎன்ஜி பைக்கின் அறிமுகம் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலை பற்றிய விபரமும் ஜூன் மாத அறிமுகத்தின்போதே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெட்ரோல் பைக்குகளைக் காட்டிலும் சற்று அதிக விலையிலேயே சிஎன்ஜி பைக்குகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் பெட்ரோல் கார்களைக் காட்டிலும் சிஎன்ஜி கார்கள் சற்று அதிக விலையைக் கொண்டிருப்பதே இதற்கு உதாரணம். மேலும், சிஎன்ஜி கார்களைப் போலவே பைக்குகளும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே சிஎன்ஜி-க்காக சிலிண்டரும், பெட்ரோலுக்காக ஃப்யூவல் டேங்க்கும் இதில் வழங்கப்பட இருக்கின்றது.

பஜாஜ் சிஎன்ஜி பைக் ஒரு கிலோவிற்கு அதிகபட்சமாக 100 கிமீ மைலேஜை வழங்கும் என கூறப்படுகின்றது. இத்துடன், இந்த பைக் தினசரி பயன்பாட்டிற்கான வாகனமாகவே பஜாஜ் விற்பனைக்குக் கொண்டு வரும் கூறப்படுகின்றது. ஆகையால், பட்ஜெட் விலையையே இதுக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

100 சிசி முதல் 160 சிசி பிரிவிலேயே இந்த பைக் களமிறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன் பஜாஜ் சிஎன்ஜி பைக் பிரீமியம் அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், எல்இடி லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், மிக சிறந்த சஸ்பென்ஷன் (டெலிஸ்கோபிக் மற்றும் மோனோஷாக்) செட்-அப் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை பஜாஜ் சிஎன்ஜி பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜியில் இயங்கும் கார் மற்றும் ஆட்டோக்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப் போனால் பலர் தங்களுடைய வழக்கமான பெட்ரோல் வாகனங்களைக்கூட சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்களாக மாற்றத் தொடங்கி இருக்கின்றனர். பெட்ரோலைக் காட்டிலும் சிஎன்ஜியின் விலை குறைவு என்பதாலும், அது அதிக மைலேஜை வழங்கும் என்பதாலே பலர் சிஎன்ஜி வாகனங்களாக தங்களுடைய வாகனங்களை மாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, March 22, 2024, 19:25 [IST]
English summary
Cng bike launch month annouced by rajiv bajaj
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+