ஓலா இ-ஸ்கூட்டரை வாங்க ஆள் கிடைக்க போறது இல்ல!! ஏத்தர் உருவாக்கும் புது ஸ்கூட்டர்...!
ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள ரிஸ்டா (Rizta) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான புதிய டீசர் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அந்த படங்களின் மூலம் ஸ்கூட்டரை பற்றி நமக்கு தெரியவந்துள்ள விபரங்களை விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களுள் ஒன்று ஏத்தர் எனர்ஜி ஆகும். பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஏத்தர் எனர்ஜி அடுத்ததாக ரிஸ்டா என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த நிலையில், இந்த புதிய ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

புதிய ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விளம்பரத்துக்கு பிரபல ஸ்டாண்ட்-அப் காமெடியனான அனுபவ் சிங் பாஸி உடன் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இணைந்துள்ளது. ரிஸ்டா தொடர்பான படங்கள் அனுபவ் சிங் பாஸியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படங்களில் ஸ்கூட்டர் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்டு உள்ளது.
இந்த படங்களின் வாயிலாக பார்க்கும்போது, ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை குறைவானது போல் தெரிகிறது. ஆதலால், ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டருக்கு விற்பனையில் ஓலா எஸ்1 போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ரிஸ்டா ஸ்கூட்டர் காம்பெக்ட்டாக உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போதுள்ள ஏத்தர் எனர்ஜியின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் செயல்படுதிறன்மிக்கவை ஆக உள்ளன.
இதனால், அவற்றின் விலைகளும் கொஞ்சம் அதிகமாக உள்ளன. ஆனால், ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொஞ்சம் காம்பெக்ட்டாக உருவாக்கப்படுவதால், செயல்படுதிறனும் ஏத்தர் 450 ஸ்கூட்டர்கள் அளவிற்கு இருக்காது. இதனால், ரிஸ்டாவின் விலை குறைவாகவே இருக்கும். ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்று சிம்பிளான டிசைனில் உருவாக்கப்பட்டாலும், புதிய ரிஸ்டாவில் போதுமான இடவசதி வழங்கப்பட்டுள்ளதை தற்போது வெளியாகியுள்ள படங்களில் காண முடிகிறது.
அதாவது, ரைடர் கால் வைத்துக் கொள்வதற்கும், பொருட்களை வைத்து கொள்வதற்கும் கூடுதல் இடவசதி கிடைக்கும். அதேபோல், ரிஸ்டா ஸ்கூட்டரின் இருக்கையும் நன்கு பெரியதாக உள்ளது. இதனால், இருக்கைக்கு அடியிலும் பெரிய இடவசதியை எதிர்பார்க்கலாம். இதன் மூலமாக, ரிஸ்டாவை நடைமுறைக்கு ஏற்ற ஸ்கூட்டராக ஏத்தர் எனர்ஜி உருவாக்குவதை அறிய முடிகிறது.

இவற்றுடன், தற்போது வெளியாகியுள்ள படங்களில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் ரிஸ்டா ஸ்கூட்டரில் காண முடிகிறது. இவை மட்டுமின்றி, எல்இடி விளக்குகள், ரைடிங் மோட்கள் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டியையும் புதிய ரிஸ்டா ஸ்கூட்டரில் எதிர்பார்க்கிறோம். தினந்தோறும் சார்ஜிங் பற்றாகுறை இல்லாமல் பயணிப்பதற்காக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் ரிஸ்டாவில் ஏத்தர் நிறுவனம் வழங்கலாம்.
தற்சமயம் விற்பனையில் உள்ள ஏத்தர் 450 ஸ்கூட்டர்களில் இல்லாத புதுமையான பேட்டரி & எலக்ட்ரிக் மோட்டார் செட்-அப் புதிய ரிஸ்டாவில் கொடுக்கப்படலாம். ஓலா எஸ்1 மட்டுமின்றி டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் பிரீமியம் என தற்சமயம் பிரபலமாக உள்ள மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் விற்பனையில் போட்டியாக விளங்கவுள்ள புதிய ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.25 லட்சம் என்ற அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா, ஒகினவா போல் இல்லாமல், செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி விளங்குகிறது. அதாவது, ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலைமிக்கவை என்கிற கருத்து மக்களிடையே உள்ளது. மக்களின் அத்தகைய பார்வையை மாற்ற வேண்டுமெனில், இவ்வாறான விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து வெளிவர வேண்டும்.


Click it and Unblock the Notifications








