இன்னும் சில மணி நேரத்தில் அறிமுகமாக போகுது உலகின் முதல் சிஎன்ஜி பைக்.. பெட்ரோல் வண்டிய தூக்கி போட்டுடுவாங்களோ!

உலகின் முதல் சிஎன்ஜி பைக் (CNG Bike) இன்னும் ஒரு சில மணி நேரங்களில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. பஜாஜ் (Bajaj) நிறுவனமே உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை உருவாக்கிய டூ-வீலர் உற்பத்தியாளர் ஆவார். ஒட்டுமொத்த வாகன உலகின் கவனமும் தற்போது இந்த நிறுவனத்தின் பக்கம் திரும்பி இருக்கின்றது. இந்த பைக்கை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவில் அறிமுகம் செய்து வைக்க இருக்கின்றார். இதற்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த நிலையிலேயே வரவிருக்கும் சிஎன்ஜி பைக் மாடலை மின்சாரம் (Electric Bike) மற்றும் பெட்ரோல் பைக் (Petrol Bike)-குகளுடன் ஒப்பிட்டு, அதன் செலவுகள், நன்மைகள் மற்றும் செயல்திறன் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் இதுபற்றிய விரிவான பதிவிற்குள் போகலாம்.

Cng bike

செலவு ஒப்பீடு: சிஎன்ஜி பைக்கின் ஆரம்ப விலை பெட்ரோல் பைக் மாடல்களை விட சற்று அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால், எலக்ட்ரிக் பைக் மாடல்களை விட பலமடங்கு குறைவான விலையையே அதுக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

இருப்பினும், இயக்கத்திற்காக செலவிடும் தொகையில் பெட்ரோலைவிட குறைவாகவே சிஎன்ஜி-க்கு தேவைப்படும். இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ சிஎன்ஜி ரூ. 85.50 என்கிற விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேவேளையில், பெட்ரோலோ ஒரு லிட்டரே ரூ. 100க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. எனவே தினமும் கணிசமான அளவில் தொகையை நம்மால் மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். மேலும், மைலேஜையும் இது வாரி வழங்கும் என கூறப்படுகின்றது.

Bajaj cng bike

இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் வரவிருக்கும் பஜாஜ் சிஎன்ஜி பைக் ஒரு கிலோவிற்கே 90 கிமீ முதல் 100 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், எலெக்ட்ரிக் பைக்குகளைக் காட்டிலும் இதன் இயக்க செலவு சற்று காஸ்ட்லியாகவே இருக்கும். ஆனால், அதிக முன்செலவை (அதிக விலையை) எலெக்ட்ரிக் வாகனங்கள் கொண்டிருக்கின்றன என்பதே பலருக்கு வேதனை அளிக்கும் தகவலாக உள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு: பெட்ரோல் மாடல்களுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி பைக்குகள் குறைவான மாசு உமிழ்வை வெளியேற்றும். ஆகையால், பசுமை இயக்கம் கொண்ட வாகனமாக சிஎன்ஜி வாகனங்கள் கருதப்படுகின்றன. ஆனால், எலக்ட்ரிக் பைக்குகள் அளவிற்கு அவை சுற்றுச் சூழலுக்கு உகந்தவை என கூறிவிட முடியாது. பெட்ரோல் பைக்குகள் அதிக உமிழ்வைக் கொண்டுள்ளன. அவை, காற்று மாசுபாட்டில் மிக அதிக பங்களிப்பைச் செய்கின்றன.

செயல்திறன் அளவீடுகள்: பெட்ரோல் டூ-வீலர்களைக் காட்டிலும் குறைவான செயல்திறனைக் கொண்டதே சிஎன்ஜி (CNG) பைக்குகள் ஆகும். இதற்கு சான்றாக தற்போது விற்பனையில் உள்ள சிஎன்ஜி கார்கள் உள்ளன. அதேவேளையில், எலக்ட்ரிக் பைக்குகள் முறுக்குவிசை விஷத்தில் சீறி பாயும் திறன் கொண்டவையாக விளங்குகின்றன.

ஆனால், அதிக வேகத்தில் சென்றால் மற்ற வண்டிகளைப் போலவே இதன் ரேஞ்ஜ் திறன் பாதிக்கும். அதேவேளையில், பெட்ரோல் பைக்குகள் அதிக செயல்திறன் மற்றும் நீண்ட தூரம் பயணிக்க ஏற்றவையாக இருக்கின்றன. ஆனால், அதிக உமிழ்வு மற்றும் செலவை பெட்ரோல் டூ-வீலர்கள் வழங்கும்.

எரிபொருள் கிடைக்கும் தன்மை: பெட்ரோல் நிலையங்களுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி நிலையங்களின் இருப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. திரும்பி பார்க்கும் பக்கமெல்லாம் பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. அதேவேளையில், நாட்டில் சிஎன்ஜி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஆயில் உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

சிஎன்ஜி மையங்களைப் போலவே எலெக்ட்ரிக் சார்ஜிங் (Electric Vehicle Charging Point) உள்கட்டமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது. இப்போதைய நிலவரப்படி மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே அவை செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், இரண்டும் வழக்கமான எரிபொருள் நிலையங்களை விட பலமடங்கு பின்தங்கியே உள்ளது.

பராமரிப்பு செலவுகள்: சிஎன்ஜி பைக்குகளுக்கான பராமரிப்பு செலவு குறைவாகவே இருக்கும் என யூகிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் வாகனங்களை விட சற்று குறைவான நகரும் பாகங்களைக் கொண்டிருப்பதே இதற்கான காரணம் ஆகும். ஆனால், எலெக்ட்ரிக் பைக்குகள் பெட்ரோல், சிஎன்ஜி இந்த இரண்டைக் காட்டிலும் மிகவும் குறைவான பராமரிப்புச் செலவையேக் கொண்டிருக்கும். குறிப்பாக, பெட்ரோல் வாகனங்களுக்கு சிறப்பு சேவைகள் தேவைப்படுகின்றது. அதுமட்டுமில்லைங்க, காலப்போக்கில் அதிக பராமரிப்புச் செலவையும் அவை வழங்கும்.

சிஎன்ஜி பைக் ரைடு அனுபவம் எப்படி இருக்கும்? அதிக ஒலியையும், அதிக அதிர்வையும் வழங்கக் கூடியதாக பெட்ரோல் பைக்குகள் இருக்கின்றன. ஆனால், சிஎன்ஜி வாகனங்கள் அப்படி இருக்காது. மிகவும் அமைதியான மற்றும் குறைந்த அதிர்வையே அது வழங்கும். அதேவேளையில், எலெக்ட்ரிக் பைக்குகள் மிக மிக அமைதியான இயக்கத்தையும், மென்மையான சவாரி அனுபவத்தை வழங்கக் கூடியவையாக இருக்கின்றன. பைக் ஸ்டார்ட் ஆனதே தெரியாது. அந்த அளவிற்கு அவை ஸ்மூத்தானவை ஆகும்.

சந்தையில் வெற்றி காணுமா உலகின் முதல் சிஎன்ஜி பைக்: பஜாஜின் சிஎன்ஜி பைக் அறிவிப்புக்கு இந்திய சந்தையில் சாதகமான எதிர்வினைகள் உள்ளன. இப்போதைக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இந்த பைக்கிற்கு நிலவுகின்றது. ஆகையால், மிக சிறப்பான வரவேற்பையே அது பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், பைக்கின் விலை, செயல்திறன் மற்றும் மைலேஜ் உள்ளிட்டவற்றை பொருத்தே தொடர்ந்து இந்த பைக் சந்தையில் வெற்றி காணுமா இல்லையா என்பது தெரிய வரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜின் வரவிருக்கும் சிஎன்ஜி பைக் மின்சார மற்றும் பெட்ரோல் மாடல்களுக்கு ஒரு சுவாரஸ்யமான மாற்றாக இருக்கும். குறைந்த பயன்பாட்டு செலவுகள் மற்றும் குறைவான மாசு உமிழ்வு திறன் ஆகியவற்றை இது கொண்டிருப்பதால் மகத்தான வரவேற்பைப் பஜாஜ் சிஎன்ஜி பைக் பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, July 5, 2024, 11:25 [IST]
English summary
Compares the upcoming cng model with electric and petrol bikes
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+