சென்னை நிறுவனத்தின் அட்டகாசமான இ-ஸ்கூட்டர் மாடல்கள்.. வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்பே தோத்து போயிரும் போல!

வளர்ந்து வரும் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டியோன் எலெக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் (Dion Electric Vehicles), தன்னுடைய இரண்டு தனித்துவமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அகஸ்தா எஸ்பி (Augusta SP) மற்றும் ஆஸ்தா எஃப்எச் (Asta FH) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையே டியோன் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இரண்டும் ஒரே நேரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும், தோற்றத்தில் இரண்டும் மாறுபட்டவையாகக் காட்சியளிக்கின்றன. இந்த புதுமுக ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ததோடு, இந்த நிறுவனம் தன்னுடைய புதிய ஷோரூம் ஒன்றையும் சென்னையில் திறந்து வைத்திருக்கின்றது.

போரூரை அடுத்துள்ள ராமபுரத்திலேயே தன்னுடைய ஷோரூமை இந்த வளர்ந்து வரும் நிறுவனம் திறந்து வைத்திருக்கின்றது. மேலும், டியோன் ஓர் சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின்கீழ் இப்போதைய நிலவரப்படி மூன்று ஷோரூம்களும், ஐந்து சர்வீஸ் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதேபோல், பிராண்டின்கீழ் ஏழு விதமான எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடல்கள் விற்பனையில் உள்ளன என்பது கவனிக்கத்தகுந்தது.

Dion ev augusta sp

இந்த புதுமுக ஸ்கூட்டர்கள் அறிமுக விழாவில் தமோ அன்பரசன் மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இவர்களுடன் நிறுவனம் மற்றும் தமிழகம் சார்பில் இன்னும் பலர் கலந்துக் கொண்டனர். நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் இரண்டு ஸ்கூட்டர்களில் அகஸ்தா எஸ் ஓர் அதிக திறனை வெளியேற்றக் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும்.

இதில் 7.5 kW திறன் கொண்ட பிஎம்எஸ்எம் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ ஆகும். பாதுகாப்பான மற்றும் சௌகரியமான ரைடு அனுபவத்தை பெறும் நோக்கில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அட்வான்ஸ்டு பிரேக்கிங் சிஸ்டமும், முன் பக்க வீலில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Dion ev asta

அதேவேளையில், இந்த ஸ்கூட்டரின் பின் வீலில் ஸ்பிரிங் லோடு ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதேநேரத்தில் ஆஸ்தா எஃப்எச் மாடலின் பின் பக்கத்தில் மோனோஷாக் ஸ்பிரிங் செட்-அப்பே பயன்படுத்தப்பட்டு இருக்கும். இதேபோல் நவீன கால தொழில்நுட்ப அம்சங்களையும் இந்த ஸ்கூட்டர்கள் மிக தாராளமாகக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களிலும் திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம், புரஜெக்டர் வகை எல்இடி லைட் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன. பேட்டரி பேக்கை பொருத்த வரை அகஸ்தா எஸ்பி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் 4.3 kw லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது ஓர் முழு சார்ஜில் 110 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். மேலும், இதன் ஆன்-ரோடு விலையே ரூ. 1 லட்சம் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இப்போது இந்த மாடலுக்கான முன் பதிவுகள் நடைபெற்று வருகின்றன. ரூ. 999 கட்டணத்திலேயே ப்ரீ புக்கிங் ஏற்கப்பட்டு வருகின்றது.

டெலிவரி 60 நாட்களுக்குள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்தா இருக்கின்றது. இதற்கும் அதே முன்பதிவு கட்டணம் மற்றும் அதே விலையே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால், டெலிவரி மட்டும் உடனுக்குடன் வழங்கப்படுகின்றது. அதேவேளையில், வாடிக்கையாளர் விரும்பும் நேரத்திலும் இதை டெலிவரி பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும், ஆஸ்தா மாடலில் 3000 வாட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். பேட்டரி பேக்கை பொருத்த வரை 3.2 KW பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 120 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இதில் பாதுகாப்பான ரைடு அனுபவத்திற்காக முன் மற்றும் பின் வீலில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டியோன் நிறுவனம் தன்னுடைய அட்டகாசமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்தியாவில் இவை வெற்றி பெறுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 26, 2024, 15:56 [IST]
English summary
Dion electric unveils new e scooters in chennai opens showroom
மேலும்... #electric vehicles #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+