ஆக்டிவா கொஞ்சம் ஓரமா போ... டிவிஎஸ் ஜுபிடர் 110 மிரள வைக்குது! 33 லிட்டர் ஸ்டோரேஜ் வசதியை கொடுத்திருக்காங்களா!
டிவிஎஸ் (TVS) நிறுவனத்தின் புகழ்பெற்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஜுபிடர் 110 (Jupiter 110), புதிய அவதாரத்தில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. ஆமாங்க, நிறுவனம் இந்த ஸ்கூட்டரை புதுப்பித்து தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மார்க்கெட்டை, அதாவது, இரண்டு சக்கர வாகன விரும்பிகளை வளைத்துப்போடும் நோக்கிலேயே ஜுபிடரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை டிவிஎஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. வெறும் கண்ணைப் பறிக்கும் தோற்றத்தை மட்டுமே இந்த ஸ்கூட்டரில் புதுப்பலின் பேரில் டிவிஎஸ் கொடுக்கவில்லை, சில பிரத்யேக வசதிகளையும் புதிய ஜுபிடர் 110 ஸ்கூட்டரில் டிவிஎஸ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், எரிபொருள் நிரப்பும் வாய் பகுதியை டிவிஎஸ் நிறுவனம் முன் பக்கம் கொடுத்திருக்கின்றது. இடதுபக்கம், ஹேண்டில் பாருக்கு கீழேயே அது இடம் பெற்றிருக்கின்றது. சரியாக முட்டிக்கு நேராக அல்லது அதற்கு மேலே அந்த வாய் பகுதி இருக்கும். இதேபோல், ஃப்யூவல் டேங்க் கால் வைக்கும் இடத்தின் அடிப்பகுதியில் வழங்கி இருக்கின்றனர்.

முன்னதாக ஃப்யூவல் டேங்க் இருக்கைக்கு அடியில் பின் பக்கத்தில் இருக்கும். இந்த அமைப்பை மாற்றியிருப்பதால் தற்போது ஸ்டோரேஜ் பலமடங்கு அதிகரித்துள்ளது. எனவே இரண்டு ஹெல்மெட்டைக் கூட இந்த ஸ்கூட்டரில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், முழு முக ஹெல்மெட்டை இரண்டு வைப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும்.
ஆனால், இரண்டு அரை முக ஹெல்மெட்டுகளை மிக தாராளமாக வைத்துக் கொள்ள முடியும். துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் 33 லிட்டர் அளவு பொருட்களைகூட இருக்கைக்கு அடியில் உள்ள ஸ்டோரேஜில் வைத்துக் கொள்ள முடியும். இதுபோன்ற பலதரப்பட்ட சிறப்பு வசதிகளுடனேயே புதிய ஜுபிடர் 110 ஸ்கூட்டர் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.
இது ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அந்த வேரியண்டுகளைப் பற்றிய விபரத்தையும், எந்தெந்த வேரியண்டில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் இடம் பெற்று உள்ளன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
வேரியண்ட் விபரம்: ஜுபிடர் 110 டிரம் (Drum), ஜுபிடர் 110 டிரம் அலாய் (Drum Alloy), ஜுபிடர் 110 டிரம் ஸ்மார்ட்-எக்ஸோன்னக்ட் (Drum SmartXonnect) மற்றும் ஜுபிடர் 110 டிஸ்க் ஸ்மார்ட்-எக்ஸோன்னக்ட் (Disc SmartXonnect) ஆகியவையே அந்த வேரியண்டுகள் ஆகும். இதில் டிரம் மற்றும் டிஸ்க் என்பது பிரேக்கிங் சிஸ்டத்தையும், அலாய் என்பது வீலையும், ஸ்மார்ட்-எக்ஸோன்னக்ட் என்பது நவீன கால தொழில்நுட்ப அம்சத்தையும் குறிக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
ஜுபிடர் 110 டிரம் வேரியண்ட் பற்றிய விபரம்: இதுவே ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். இதன் விலையே ரூ. 73,700 ஆகும். இந்த விலையிலேயே ஏகப்பட்ட சிறப்பம்சங்களை இந்த ஆரம்ப நிலை வேரியண்டில் டிவிஎஸ் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், எல்இடி டிஆர்எல் லைட், ஹாலோஜன் இன்டிகேட்டர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஆனால், கலர் எல்சிடி திரை இதில் வழங்கப்படவில்லை. விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக அனலாக் கிளஸ்டரே இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், ஐஎஸ்ஜி, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் ஃபாலோ மீ லேம்ப் வசதி ஆகியவையும் இந்த தேர்வில் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன.
எனவே சிறப்பம்சங்கள் விஷயத்தில் விலையை போலவே குறைவாகவே இந்த தேர்வுக் காட்சியளிக்கின்றது. இந்த தேர்வில் மூன்று விதமான வண்ண தேர்வுகள் மட்டுமே கிடைக்கும். மீட்டியோர் ரெட் க்ளாஸ், டைட்டானியம் கிரே மேட், லூனார் ஒயிட் க்ளாஸ் ஆகியவையே அந்த மூன்று ஆப்ஷன்கள் ஆகும்.
ஜுபிடர் 110 டிரம் அலாய் வேரியண்ட் விபரம்: டிரம் பிரேக் மற்றும் அலாய் வீல் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் தேர்வே இதுவாகும். இதன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ரூ. 5 ஆயிரம் வரை ஆரம்ப நிலை தேர்வைக் காட்டிலும் காஸ்ட்லியாக இருக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்விலேயே சில முக்கியமான நிற தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஸ்டார்லைட் ப்ளூ க்ளாஸ், லூனார் ஒயிட் க்ளாஸ், டைட்டானியம் கிரே மேட் மற்றும் மீட்டியோர் ரெட் க்ளாஸ் ஆகிய நான்கு வண்ண ஆப்ஷன்களே இதில் வழங்கப்படுகின்றன. சிறப்பம்சங்களைப் பொருத்த வரை ஆரம்ப நிலை வேரியண்டைக் காட்டிலும் சற்று அதிகமாக இது பெற்றிருக்கும். அதில் மிக முக்கியமானதாகவே அலாய் வீல் இருக்கின்றது.
ஜுபிடர் 110 டிரம் எக்ஸோன்னக்ட் வேரியண்ட் விபரம்: டிரம் பிரேக்கைக் கொண்டிருந்தாலும், டிவிஎஸ்-இன் அதிநவீன தொழில்நுட்ப வசதியான ஸ்மார்ட்எக்ஸோன்னக்ட் இதில் இடம் பெற்றிருக்கும். இந்த அம்சத்தின் வாயிலாக திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவல், எஸ்எம்எஸ், நேவிகேஷன் மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் போன்ற வசதிகளை ஸ்கூட்டரின் திரையில் பெற்றுக் கொள்ள முடியும்.
எல்சிடி திரையே, ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் இதில் வழங்கப்பட்டிருக்கும். இத்துடன், எரிபொருள் சிக்கனம் செய்யும் வசதி, ஐஎஸ்ஜி, யுஎஸ்பி சார்ஜல், ஃபாலோ மீ ஹெட்லேம்ப் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கும். நிற தேர்வைப் பொருத்த வரை இந்த வேரியண்டில் மன்று மட்டுமே வழங்கப்படும். டான் ப்ளூ மேட், கேலக்டிக் காப்பர் மேட் மற்றும் ஸ்டார்லைட் ப்ளூ க்ளாஸ் ஆகியவையே அவை ஆகும்.
ஜுபிடர் 110 டிஸ்க் எக்ஸோன்னக்ட் வேரியண்ட் விபரம்: இருப்பதிலேயே அதிக சிறப்பம்சங்களைத் தாங்கிய தேர்வாக இது காட்சியளிக்கின்றது. மிக முக்கியமாக டிஸ்க் பிரேக் வசதி இதில் இடம் பெற்றிருக்கும். ஆகியல், இதில் மிக சிறந்த பிரேக்கிங் உறுதியாக கிடைக்கும். மற்ற எந்த வேரியண்டுகளிலும் டிஸ்க் பிரேக் இடம் பெற்றிருக்காது.
220 மிமீ டிஸ்க்கே இதில் இடம் பற்றிருக்கும். இத்துடனேயே ஸ்மார்ட்-எக்ஸோன்னக்ட் அம்சமும் இந்த தேர்வில் வழங்கப்பட்டு இருக்கும். மேலும், முழுக்க முழுக்க எல்இடி லைட்டுகளாலேயே இது அலங்கரிக்கப்பட்டு இருக்கும். நிற தேர்வை பொருத்த வரை டிரம் எக்ஸோன்னக்ட்-ம் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டியாகவே ஜுபிடர் 110 ஸ்கூட்டர் விற்பனையில் இருக்கின்றது. அதற்கு வழங்கி வரும் போட்டியையே தற்போது டிவிஎஸ் இரட்டிப்பாக்கும் நோக்கில் ஜுபிடர் 110 மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. குறிப்பாக, மிக அதிக அம்சங்களைத் தாங்கிய வாகனமாக இதனை நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








