20 லட்ச ரூபா விலையில் இத்தன பைக்குகள் விற்பனைக்கு கிடைக்குதா!.. நாம இந்தியாலதான் இருக்கோமா!!

இந்தியாவில் இரண்டு சக்கர வாகனங்களுக்கு எப்போதுமே தனித்துவமான வரவேற்பு உண்டு. இதனால்தான் கார்களைக் காட்டிலும் டூ-வீலர்கள் மிக அதிக அளவில் நம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதேபோல், யாரும் நம்ப முடியாத அளவிற்கு மிக அதிக விலைக் கொண்ட மோட்டார்சைக்கிள்களும் நம் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அந்தவகையில், இந்தியாவில் இருபது லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் பைக்குகள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இந்த பதிவில் சுமார் ஐந்து பைக்குகள் பற்றிய தகவலையே வழங்கி இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 (Ducati Streetfighter V2): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த பைக் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இதன் விலை ரூ. 18.50 லட்சம் ஆகும். இது ஓர் 955 சிசி திறன் கொண்ட பைக் மாடல் ஆகும். இந்த பைக்கில் 153 எச்பி மற்றும் 101 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட எல்-ட்வின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Top bikes under rs 20 lakh in india

மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தைக் கொண்ட ஓர் பைக் மாடலே டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 ஆகும். இதற்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பைக்கில் தனித்துவமான ரைடிங் அனுபவத்தை வழங்கக் கூடிய அம்சங்கள் பல வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் (BMW S 1000 R): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்றுமொரு விலை உயர்ந்த பைக் மாடலாக பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் இருக்கின்றது. இது ஓர் லிட்டர் கிளாஸ் நேக்கட் வகை பைக் மாடல் ஆகும். இது டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 மாடலை விட சற்று பவரை வெளியேற்றக் கூடியதாக இருக்கின்றது.

இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பைக் 165 எச்பி திறனை வெளியேற்றும். இதுவும் மிக சிறந்த பிரீமியம் அம்சங்கள் நிறைந்த பைக் மாடல் ஆகும். இதன் விலை ரூ. 19 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இந்த பைக்கில் ஏகப்பட்ட பிரீமியம் அம்சங்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், கார்பன் ஃபைபர் வீல்கள் மற்றும் சூடாகும் வசதிக் கொண்ட கிரிப் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக் ரூ. 19 லட்சம் தொடங்கி ரூ. 23.30 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. பைக்கில் இடம் பெற்றிருக்கும் பிரீமியம் அம்சங்களே அதை அதிக அம்சம் கொண்டதாக மாற்றி இருக்கின்றது.

ட்ரையம்ப் ஸ்பீடு டிரிபிள் 1200 ஆர்எஸ் (Triumph Speed Triple 1200 RS): இது ஓர் சூப்பர் நேக்கட் வகை பைக் மாடல் ஆகும். இந்த பைக்கின் விலை ரூ. 17.95 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இந்த பைக்கை சாவியே இல்லாமல் ஸ்டார்ச் செய்ய முடியும்.

இந்த பைக்கும் கார்பன் ஃபைபராலேயே அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதனாலேயே இப்பைக்கின் எடை மிகவும் குறைந்துக் காணப்படுகின்றது. இத்துடன், மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு சூடாகும் கிரிப் போன்ற பல அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதனால்தான் இந்த பைக் மிக சிறந்த மோட்டார்சைக்கிளாகக் காட்சியளிக்கின்றது.

சுஸுகி ஹயபுசா (Suzuki Hayabusa): இந்தியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இரண்டு சக்கர வாகன காதலர்கள் பலரின் கனவு வாகனமாக ஹயபுசா இருக்கின்றது. இந்த பைக்கின் ஸ்டாண்டர்டு மாடல் ரூ. 16.90லட்சம் என்கிற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது அதேவேளையில், இதன் சிறப்பு பதிப்போ ரூ.17.70 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த பைக் ஓர் 190எச்பி மற்றும் 150என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ் 10ஆர் (Kawasaki Ninja ZX-10R): இந்த பைக்கை கவாஸாகி நிறுவனம் சிகேடி (CKD) வாயிலாகவே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியர்கள் பலரின் பிரியமான பைக் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இந்த பைக்கில் 999 சிசி எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 203 எச்பியை உருவாக்கும். இதைத் தொடர்ந்து, ஏராளமான எலக்ட்ரானிக் ரைடிங் அம்சங்களும் இந்த டூ-வீலரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த சக்தி வாய்ந்த பைக்கின் விலை ரூ. 16.79 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவையே இருபது லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக் மாடல்கள் ஆகும். ஓர் காருக்கு இணையான விலையை செலவழிக்க விரும்பும் ஆர்வலர்களுக்கு ஏற்ற பைக் மாடல்கள் இவை ஆகும். இந்த பைக்குகளுக்கு தொழிலதிபர்கள் மற்றும் பைக் ஆர்வலர்கள் மத்தியிலேயே நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 13, 2024, 5:00 [IST]
English summary
Discover the top motorcycles under rs 20 lakh in india
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+