டிரைவ்ஸ்பார்க்கின் புது முயற்சி!! நீங்களும் எங்களுடன் இணையலாம்... சாலை பாதுகாப்பு ரொம்ப முக்கியம்!
சாலை பாதுகாப்பு மற்றும் தொண்டு சேவைகளில் ஈடுப்படுவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக, பைக் ரைடிங் ஆர்வலர்களை கொண்டு நமது டிரைவ்ஸ்பார்க் (DriveSpark) குழு பைக்கிங் கம்யூனிட்டி (Biking Community)-ஐ உருவாக்கி உள்ளது. இந்த பைக்கிங் கம்யூனிட்டியின் வேலை என்ன? இந்த கம்யூனிட்டியில் எவ்வாறு உறுப்பினர் ஆகுவது? வாருங்கள் இந்த கேள்விகளுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.
உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடக்கக்கூடிய நாடுகளுள் ஒன்றாக நமது இந்தியா உள்ளது. இதனை குறைக்க அரசாங்கங்கள் ஒருபக்கம் முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், மறுபக்கம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுப்படுவோர் தொடர்ந்து புதியது புதியதாக வந்துக்கொண்டே இருக்கின்றனர். ஆதலால், சாலை விபத்துகள் குறைய வேண்டுமென்றால், சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் ஏற்படுவது அவசியமாகிறது.

இதனை மனதில் வைத்து, நமது டிரைவ்ஸ்பார்க் குழு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை பரப்பும் விதமாக பைக் ரைடிங் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதற்காக, ஆர்வமுள்ள பைக் ரைடர்களை கொண்ட பைக்கிங் கம்யூனிட்டியை டிரைவ்ஸ்பார்க் உருவாக்கி உள்ளது. டிரைவ்ஸ்பார்க் பைக்கிங் கம்யூனிட்டியின் முதல் பயணம் கடந்த மார்ச் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடத்தப்பட்டது.
இந்த பெங்களூர் சேப்டரில் மொத்தம் 13 பைக் ரைடர்கள் கலந்துக் கொண்டனர். டிரைவ்ஸ்பார்க்கின் இந்த துவக்க பயணம் ஓர் காலை சிற்றுண்டி பயணமாக இருந்தது. அதாவது, பைக் ரைடிங்கில் கலந்துக் கொண்ட ரைடர்கள் அனைவரும் வழியில் இருந்த ஒரு உணவகத்தில் உணவருந்திவிட்டு, பின் தங்களது பைக் ரைடிங்கை தொடர்ந்தனர்.
இந்த பைக் ரைடிங்கில் கலந்துக் கொண்ட ரைடர்கள் ராயல் என்ஃபீல்டு, இந்தியன், பி.எம்.டபிள்யூ, ஹார்லி-டேவிட்சன், பஜாஜ், கவாஸாகி மற்றும் கேடிஎம் என தங்களது விலைமிக்க மோட்டார்சைக்கிள்கள் உடன் பங்கேற்றனர். அவர்களது பைக்குகள் 350சிசி-இல் இருந்து அதிகப்பட்சமாக 1650சிசி வரையிலான என்ஜினை கொண்டவைகளாக இருந்தன.
பெங்களூரில் மொத்தம் 125கிமீ தொலைவிற்கு இந்த பைக் ரைடிங் நடைபெற்றது. பாதுகாப்பிற்காக, இந்த ரைடிங்கின் போது கூடவே ஒரு பேக்-அப் வாகனமும் கொண்டு செல்லப்பட்டது. பெங்களூரில் நடத்தப்பட்டதை போன்று, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, கொச்சி, மும்பை மற்றும் மலேசியாவிலும் டிரைவ்ஸ்பார்க் பைக்கிங் கம்யூனிட்டி சேப்டர்கள் நடத்தப்பட உள்ளன.
பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து எங்களுக்கு விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், வரும் நாட்களில் நேபாளம், பூடான், மேகலாயா, ஜெர்மனி, இத்தாலி, சிங்கப்பூர் மற்றும் இலங்கையிலும் பைக்கிங் கம்யூனிட்டியை உருவாக்கி பைக் ரைடிங்குகளை நடத்தவுள்ளோம். இந்த கம்யூனிட்டியில் சேர விருப்பம் உள்ளவர்கள், உங்களது இருப்பிடத்தை பொறுத்து வரவேற்கப்படுகிறார்கள்.
அதற்கு முதலில், https://surveyheart.com/form/65fc522149cec872d08e5930 என்ற இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும். கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின், டிரைவ்ஸ்பார்க் கம்யூனிட்டியில் சேருவதற்கான வாட்ஸ்அப் லிங்க் உங்களுக்கு அனுப்பப்படும். அதன் மூலமாக, எங்களுடன் இணைந்து பைக் ரைடிங் பயணங்கள் குறித்த அப்டேட்களை பெறவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எது ஒன்றையும் கூட்டமாக சேர்ந்து சொல்லும்போது, அது பலரை விரைவாக சென்றடையும். ஆதலால், சாலை பாதுகாப்பு மற்றும் அனாதை இல்லங்கள் & தொண்டு சேவைகளில் பங்கேற்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த பைக் ரைடிங் வாயிலாக நாம் ஒன்றாக இணைவோம்.


Click it and Unblock the Notifications








