டுகாட்டி பைக் வாங்கும் ஆசையை குழி தோண்டி புதைச்சிட வேண்டியதுதான்! எட்டாத உயரத்துக்கு போகும் விலைகள்!!
டுகாட்டி (Ducati), உலகளவில் பிரபலமான இந்த பைக் நிறுவனத்திற்கு அறிமுகமே தேவையில்லை என நினைக்கிறேன். ஆற்றல்மிக்க மற்றும் விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள்கள் மூலமாக டுகாட்டி பிராண்ட் இந்தியா உள்பட பல வெளிநாடுகளில் பிரபலமானதாக உள்ளது. இருப்பினும், அடுத்த 2025ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள்களின் விலைகளை அதிகரிக்க உள்ளதாக டுகாட்டி அறிவித்துள்ளது. இந்த வகையில் என்னென்ன டுகாட்டி பைக்குகளின் விலைகள் உயர்த்தப்பட உள்ளன? எவ்வளவு உயர்த்தப்பட உள்ளன? என்பதை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
சமூக பொருளாதார வளர்ச்சி வளர, வளர நம் வாழ்க்கை தரமும் மாற்றமடைந்துக் கொண்டே வருகிறது. இதனால், அதற்கேற்ற கூலியையும் நாம் கொடுக்க வேண்டியதாக உள்ளது. அதுதான், விலை உயர்வாகும். ஒவ்வொரு நாளும் குண்டூசியில் இருந்து விமானம் வரையிலான பொருட்களின் மதிப்பு உயர்ந்துக் கொண்டே செல்கிறது. மோட்டார்சைக்கிள்கள் மட்டும் இதில் என்ன விதிவிலக்கா...?

பல்வேறு காரணங்களினால், பைக்குகளின் விலைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்த்தப்படுகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு வருடமும் முதல் நாளிலேயே சில வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில், வருகிற 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் சில நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலைகளை உயர்த்த உள்ளன. இதில் டுகாட்டி நிறுவனமும் ஒன்றாகும்.
ஆனால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து டுகாட்டி பைக்குகளின் விலைகளும் 2025 ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்பட போவதில்லை. பைக்குகளை உற்பத்தி செய்ய தேவைப்படும் மூல பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதையும், பணவீக்கத்தையும் காரணமாக சுட்டிக்காட்டி இந்த விலை அதிகரிப்பை டுகாட்டி இந்தியா நிறுவனம் கொண்டுவருகிறது.

இதுகுறித்து டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிபுல் சந்த்ரா கூறுகையில், "ஒட்டுமொத்த பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்படும் செலவுகளின் அதிகரிப்பு காரணமாக, பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் பிராண்டின் ஆடம்பர நிலையை பராமரிக்கும் அதேவேளையில், டுகாட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பைக்குகளில் இந்த விலை திருத்தம் அறிமுகப்படுத்தப்படும்" என்றார்.
பிபுல் சந்த்ராவின் கூற்றுப்படி பார்க்கும்போது, குறிப்பிட்ட சில டுகாட்டி பைக்குகளில் மட்டுமே இந்த விலை அதிகரிப்பானது கொண்டுவரப்பட உள்ளது. இந்தியாவில் தற்சமயம் மொத்தம் 10 விதமான மோட்டார்சைக்கிள்களை டுகாட்டி விற்பனை செய்கிறது. இதில் விலை குறைவானது என்று பார்த்தால், அது டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் 2ஜி ஆகும். இருப்பினும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே தற்சமயம் ரூ.10.39 லட்சமாக உள்ளது.

இந்தியாவில் விலையுயர்ந்த டுகாட்டி பைக் என்றால் அது பனிகளே வி4 ஆர் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.69.99 லட்சம் ஆகும். நம் நாட்டு சந்தையில் வருகிற 2025ஆம் ஆண்டில் 2 டுகாட்டி பைக்குகள் அறிமுகம் செய்யப்பட இருப்பது தற்போதுவரையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பனிகளே வி2 மற்றும் மல்டிஸ்ட்ராடா வி2 என்பன அந்த 2 டுகாட்டி பைக்குகள் ஆகும்.
இதில், வருகிற 2025 மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பனிகளே வி2 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19 லட்சமாக நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. மல்டிஸ்ட்ராடா வி2 பைக்கின் அறிமுகத்தை 2025 செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில்தான் எதிர்பார்க்க முடியும். அதன் விலை ரூ.15 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம் இந்திய மக்களை பொறுத்தவரையில், இப்போதும் டுகாட்டி பைக்குகள் விலையுயர்ந்தவையே ஆகும். இருப்பினும், அதிகரித்துவரும் உற்பத்தி செலவையும், போக்குவரத்து செலவையும் மனதில் வைத்து இந்த விலை உயர்வை வேறு வழியில்லாமல் டுகாட்டி கொண்டுவர உள்ளது. இது, இந்தியாவில் டுகாட்டி பைக்குகளின் விற்பனையை பாதிக்கும் என்றாலும், அதனை டுகாட்டி இந்தியா நிறுவனம் எவ்வாறு சமாளிக்க உள்ளது என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.


Click it and Unblock the Notifications









