மொத்த சொத்தையும் எழுதி வைத்தால் இந்த டுகாட்டி பைக்கை வாங்கிவிடலாம்!! தலைச்சுற்ற வைக்கும் விலை!

டுகாட்டி (Ducati) நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய டெசர்ட் எக்ஸ் ராலி (DesertX Rally) மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட டுகாட்டி டெசர்ட் எக்ஸ் ராலி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

லக்சரி பைக் பிராண்டான டுகாட்டி அதன் மாடர்ன் அட்வென்ச்சர் ரக பைக்கான டெசர்ட் எக்ஸ் ராலியை இந்தியாவில் மேம்படுத்தி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய டுகாட்டி டெசர்ட் எக்ஸ் ராலி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.23 லட்சத்து 70,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டுகாட்டி பைக்கிற்கான முன்பதிவுகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன.

ducati desertx rally launched

டெலிவிரிகள் வருகிற மே மாதத்தின் கடைசி வாரத்தில் இருந்து துவங்கப்பட உள்ளன. டுகாட்டி ஷோரூம்களில் இந்த அட்வென்ச்சர் பைக் வருகிற மே 4ஆம் தேதி முதல் கஸ்டமர்களின் பார்வைக்கு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், டெசர்ட் எக்ஸ் ராலி பைக்கின் முன்பக்கத்தில் மட்கார்ட் நன்கு உயரமாக பொருத்தப்படுகிறது.

'ராலி' என்பதன் அர்த்தம் என்னவென்று உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். பாலைவன மணல் பகுதியில் நடத்தப்படும் ஒருவகை மோட்டார்சைக்கிள் பந்தயத்தை ராலி என அழைக்கின்றனர். இந்த பந்தயத்தை குறிக்கும் விதமாகவே இந்த புதிய டுகாட்டி பைக்கின் பெயரின் இறுதியில் 'ராலி' என்கிற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.

ducati desertx rally launched

வழக்கமான டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக்கின் ராலி வெர்சன் தான் புதிய டெசர்ட் எக்ஸ் ராலி பைக் ஆகும். வழக்கமான டெசர்ட் எக்ஸ் பைக் உடன் ஒப்பிடுகையில், புதிய டெசர்ட் எக்ஸ் ராலி பைக்கில் 'அயர்ன் ஜியாண்ட்' என்கிற பெயரில் புதுமையான கிராஃபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சஸ்பென்ஷனுக்கு கயாபா நிறுவனத்தின் 48மிமீ மூடப்பட்ட கார்ட்ரிட்ஜ் ஃபோர்க் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.

250மிமீ டிராவல் உடன் வழங்கப்படும் இந்த சஸ்பென்ஷன் ஃபோர்க்கை வழக்கமான டெசர்ட் எக்ஸ் பைக்கில் பெற முடியாது. மேலும், பின்பக்க சஸ்பென்ஷனுக்கும் பிரத்யேகமான அலுமினியம் ஸ்விங்கார்மை புதிய டெசர்ட் எக்ஸ் ராலி பைக் கொண்டுள்ளது. 46மிமீ பிஸ்டன் மற்றும் 240மிமீ டிராவல் உடன் முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கயாபா ஷாக் அப்சார்பர் இந்த பைக்கில் பின்பக்க சஸ்பென்ஷன் செட்-அப்பாக இடம்பெற்றுள்ளது.

ducati desertx rally launched

புதிய டெசர்ட் எக்ஸ் ராலி பைக்கில் முன் சக்கரம் 21 இன்ச்சில் அளவில் சற்று பெரியதாக உள்ளது. இந்த பைக்கில் முன் மற்றும் பின் சக்கரங்கள் இரண்டும் ஸ்போக்டு சக்கரங்களாக வழங்கப்பட்டுள்ளன. இந்த சக்கரங்களில் பைரெல்லி ஸ்கார்பியன் ராலி எஸ்டிஆர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை வேண்டாம் என்பவர்கள், ஸ்கார்பியன் ட்ரெயில்-2 அல்லது ஸ்கார்பியன் ராலி டயர்கள் உடன் இந்த பைக்கை வாங்கலாம்.

மற்றப்படி, பைக்கின் என்ஜினில் மாற்றமில்லை. டுகாட்டி டெசர்ட் எக்ஸ் ராலி பைக்கில் 937சிசி ட்வின்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 9,250 ஆர்பிஎம்-இல் 108.4 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 92 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, டுகாட்டி பைக்குகள் ஆற்றல்மிக்கவை என்பது நமக்கு தெரியும். அதிலிலும், டெசர்ட் எக்ஸ் பைக்குகள் அசாத்தியமான சூழலிலும் சிறப்பாக இயங்குவதற்காக ஆற்றல்மிக்கவைகளாக உருவாக்கப்படுகின்றன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டெசர்ட் எக்ஸ் ராலி ஆனது அதன் அதிகப்படியான விலைக்கு ஏற்றதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 30, 2024, 22:28 [IST]
English summary
Ducati desertx rally launched in india price new features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X