இந்தியா ஒரு சாதாரண நாடே இல்லைங்க.. டுகாட்டியே நம்பி இறங்கியிருக்குனா பாத்துக்கோங்களேன்! இவ்ளோ நம்பிக்கையா!!
உலக புகழ்பெற்ற சூப்பர் பைக் உற்பத்தி நிறுவனமான டுகாட்டி (Ducati), இந்தியாவை நம்பி ஓர் தரமான பைக் மாடலை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. ஹைபர்மோடார்ட் 950 எஸ்பி (Hypermotard 950 SP) எனும் மாடலையே அது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 19.05 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஏதோ எழுத்து பிழை ஆகியிருக்குமோ என நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த பைக்கின் உண்மை விலையே இதுதான். அதிலும், இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த விலையில் செகண்ட் ஹேண்டில் ஓர் பென்ஸ், ஆடி சொகுசு காரையே வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில், மாருதி ஆல்டோ போன்ற விலை குறைவான கார் மாடல் மூன்று யூனிட் வரை வாங்கிவிட முடியும். இத்தகைய அதிக விலைமிக்க மோட்டார்சைக்கிளையே டுகாட்டி நிறுவனம் இந்தியாவையும், இந்திய பணக்காரர்களையும் நம்பி களமிறக்கி இருக்கின்றது.

குறிப்பாக, நாட்டின் ஸ்போர்ட்ஸ் பைக் விரும்பிகளை நம்பியே இந்த பைக்கை டுகாட்டி அறிமுகம் செய்திருக்கின்றது. ஏற்கனவே டுகாட்டி நிறுவனம் ஹைபர்மோடார்ட் மாடலின் வேறு சில பதிப்புகளையும் நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், ஹைபர்மோடார்ட் 950 ஆர்விஇ (Hypermotard 950 RVE) மற்றும் ஹைபர்மோடார்ட் 698 மோனோ (Hypermotard 698 Mono) ஆகிய மாடல்களையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த இரண்டு மாடல்களுடனேயே மூன்றாவது தயாரிப்பாக ஹைபர்மோடார்ட் 950 எஸ்பி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மற்ற இரண்டு மாடல்களைக் காட்டிலும் இப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் தேர்வான மிக உயரிய கூறுகளைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. மேலும், புத்தம் புதிய வண்ண தேர்வுகளையும் அது தாங்கியிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
தொடர்ந்து, பைக்கின் எடையைக் குறைக்கும் பொருட்டு கார்பன் ஃபைபரால் ஆன பேனல்களையே இந்த பைக்கில் டுகாட்டி பயன்படுத்தி இருக்கின்றது. மேலும், முன்னதாக கூறியதைப் போல உயர் வகை கூறாக இந்த பைக்கில் 48 மிமீ அடர்த்திக் கொண்ட ஓஹ்லின்ஸ் யுஎஸ்டி ஃபோர்க், 170 மிமீட்டரில் இருந்து 185 மிமீ வரையில் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, பின் பக்கத்திலும் ஓஹ்லின்ஸ்-இன் மோனோஷாக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இது ஓர் ஒற்றை பக்க ஸ்விங்கார்ம் பைக் மாடல் ஆகும். இதில் வழங்கப்பட்டு இருக்கும் இரண்டு சஸ்பென்ஷனும் அட்ஜெஸ்டபிள் வசதிக் கொண்டவை ஆகும். பைக்கின் பாடி பேனலைப் போலவே அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் வீலும் எடைக் குறைவானதாகவே உள்ளது.
17 அங்குல மர்செஸினி அலாய் வீலே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. டயரை பொருத்த வரை பைரலி டயப்ளோ சூப்பர்கோர்சா எஸ்பி ரப்பர் வகை டயரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல பிரீமியம் அம்சங்களை இந்த பைக் தன்னுள் தாங்கி இருக்கின்றது.
இருப்பினும் அதன் எடை 191 கிலோவாக மட்டுமே இருக்கின்றது. எரிபொருள் இல்லாமலேயே இந்த எடையில் அது இருக்கும். இதன் இருக்கை உயரம் 890 மிமீ ஆகும். டுகாட்டி ஹைபர்மோடார்ட் 950 ஆர்விஇ மாடலைக் காட்டிலும் இது 20 மிமீ அதிகம் ஆகும். இந்த உயரமான எடையும், குறைவான எடையும் தனித்துவமான ரைடு அனுபவத்தை அதன் பயனர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த பைக்கில் எஞ்சினைப் பொருத்த வரை 937 சிசி எல்-ட்வின் டெஸ்டஸ்ட்ரெட்டா வகை எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கன்றது. இது அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்மில் 114 எச்பி பவரையும், 7,250 ஆர்பிஎம்மில் 96 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். பை-டைரக்சனல் குயிக் ஷிஃப்டர் வசதிக் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் வழங்கப்பட்டு உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது.
இதே எஞ்சினே டுகாட்டியின் மற்ற தயாரிப்புகளான டெசர்ட் எக்ஸ் (DesertX) மற்றும் சூப்பர் ஸ்போர்ட் எஸ் (SuperSport S) ஆகிய மாடல்களிலேயே இந்த எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால், அதிக திறனை வெளியேற்றும் வகையில் இப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் ஹைபர்மோடார்ட் 950 எஸ்பி மாடலிலேயே அது ட்யூன்-அப் செய்யப்பட்டு இருக்கின்றது.
இந்த பைக்கிற்கான நேரடி போட்டி இப்போதைக்கு இந்தியாவில் விற்பனையில் இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது. இதனால்தான் ரூ. 19.05 லட்சம் என்கிற உயரிய விலையில் மிகவும் துணிச்சலுடன் டுகாட்டி இந்த பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பிரேக்கிங் சிஸ்டத்தைப் பொருத்த வரை முன் பக்கத்தில் இரண்டு 320 மிமீ அளவுள்ள டிஸ்க்குகளும், பின் பக்கத்தில் 245 மிமீ அளவுள்ள டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த பைக்கில் மிக சிறந்த ரைடு அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக பன்முக ரைடிங் மோட்கள், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் வீலி கன்ட்ரோல் உள்ளிட்ட சிறப்பு வசதிகளை டுகாட்டி வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, இன்னும் ஏராளமான பிரீமியம் அம்சங்களை இந்த டுகாட்டி ஹைபர்மோடார்ட் 950 எஸ்பி பைக்கில் காண முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிக மிக உயரிய வகை அம்சங்களை இந்த பைக் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே ரூ. 19.05 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இது எத்தகைய வரவேற்பை இந்தியாவில் பெறும் என்பதை அறிய நாம் இன்னும் கொஞ்சம் நாள் காத்திருந்தாக வேண்டும்.


Click it and Unblock the Notifications








