டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி4 ஆர்எஸ் அறிமுகம்.. இது சாலையில போகும்போது முரட்டு காளையே நேருல வர மாதிரி இருக்கும்..

உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டுகாட்டி (Ducati), மல்டிஸ்ட்ரடா வி4 ஆர்எஸ் (Multistrada V4 RS) பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. சென்ற ஆண்டில் இந்த பைக்கை உலக அளவில் டுகாட்டி வெளியீடு செய்திருந்தது. இந்த நிலையிலேயே இப்போது அதனை நம் நாட்டில் அதிகாரப்பூரவமாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 38.40 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

மேலும், இந்த விலை நிறுவனத்தின் மல்டிஸ்ட்ரடா வி4 மாடலைக் காட்டிலும் ஆறு லட்ச ரூபாய் அதிகம் ஆகும். ஆகையால், மல்டிஸ்ட்ரடா குடும்பத்தின் மிக மிக விலை உயர்ந்த பைக் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இந்த பைக்கை ஓர் ஆடம்பர காரின் விலையில் டுகாட்டி விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது பட்ஜெட் டூ-வீலர் விரும்பிகளை பெருத்த ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

Ducati multistrada v4 rs launched in india

அதேவேளையில், பிரீமியம் டூ-வீலர் காதலர்களை இந்த பைக்கின் வருகை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றது. இதன் சாலை தோற்றம் மிகவும் அட்டகாசமானதாக இருக்கும் என தெரிகின்றது. குறிப்பாக, இது சாலையில் வரும்போது முரட்டுத் தனமான காளை சாலையில் வலம் வருவதைப் போல இருக்கும் என தெரிகின்றது.

இதற்கேற்ப மிகவும் கட்டுமஸ்தான தோற்றத்தில் அந்த பைக் காட்சியளிக்கின்றது. இது ஓர் அட்வென்சர் பைக் மாடல் ஆகும். நீண்ட தூர பயணங்கள் மற்றும் கரடு-முரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு உகந்த பைக் மாடலே இதுவாகும். இதற்கான அம்சங்களையே இந்த பைக் தன்னுள் தாங்கியிருக்கின்றது. அவை அனைத்தும் பிரீமியம் தர அம்சங்கள் ஆகும்.

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் விபரம்: இந்த பைக்கில் சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு பல்வேறு சிறப்பு கருவிகளை டுகாட்டி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், கரடு-முரடான பாதையில் பயணித்தாலும் சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டு இந்த பைக்கின் முன் வீலில் ஒஹ்லின்ஸ் ஃபோர்க் டைட்டானியம் நைட்ரேட் கோட்டிங் உடனும், பின் பக்கத்தில் ஒஹ்லின்ஸ் டிடிஎக்ஸ்36 மோனோஷாக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த இரண்டும் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்டவை ஆகும். இவற்றுடனேயே மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டமும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு உள்ளது. அந்தவகையில், 330 மிமீ செமி ஃப்ளோட்டிங் வகை டிஸ்க் பிரெம்போ ஸ்டைலிமா மோனோபிளாக் காலிபருடனும், பின் பக்கத்தில் பிரெம்போ 2 பிஸ்டன்கள் கொண்ட 265 மிமீ டிஸ்க் பிரேக்கும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டைட்டானியம் சப் ஃப்ரேம்: இந்த பைக்கின் உருவாக்கத்தில் டைட்டானியம் சப் ஃப்ரேமையே டுகாட்டி பயன்படுத்தி இருக்கின்றது. இதேபோல், 17 அங்குல மார்செஸினி ஃபோர்ஜட் அலுமினியம் வீல்களே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்களால் பைக்கின் எடை கணிசமாக குறைந்திருக்கின்றது. வழக்கமான மல்டிஸ்ட்ரடா மாடலைக் காட்டிலும் இது 2.5 கிலோ வரை குறைவான எடையைக் கொண்டிருக்கின்றது.

ரைடிங் மோட்கள் விபரம்: இந்த பைக்கில் நான்கு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ரேஸ் (Race), ஸ்போர்ட் (Sport), டூரிங் (Touring) மற்றும் அர்பன் (Urban) ஆகியவையே அவை ஆகும். இத்துடன் ரைடரின் பாதுகாப்பான பயணத்திற்காக எஞ்சின் பிரேக் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல், டிராக்சன் கன்ட்ரோல், ஸ்விட்சிங் செய்துக் கொள்ளும் வசதிக் கொண்ட ஏபிஸ் ஆகியவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்சின் விபரம்: டுகாட்டி நிறுவனம் மல்டிஸ்ட்ரடா வி4 ஆர்எஸ் பைக் மாடலில் 1103 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு, வி4 டெஸ்மோசேடைசி ஸ்ட்ராடேல் எஞ்சினையேப் பயன்படுத்தி இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 180 பிஎஸ் பவரை 12,250 ஆர்பிஎம்மிலும், 118 என்எம் டார்க்கை 9,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். பனிகேல் வி4 மாடலிலும் இதே எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டெலிவரி எப்போது தொடங்கும்? மற்றும் இதன் போட்டி பைக் மாடல்கள் எவை? இந்த பைக்கின் டெலிவரி பணிகள் வருகின்ற செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கப்பட இருக்கின்றது. இதற்கு போட்டியாக ஏற்கனவே சந்தையில் சில பைக் மாடல்கள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானதாக பிஎம்டபிள்யூ எம் 1000 எக்ஸ்ஆர் (BMW M 1000 XR) காட்சியளிக்கின்றது. இதுவும் ஓர் செயல்திறன் கொண்ட அட்வென்சர் டூரிங் பைக் மாடல் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அட்வென்சர் பைக்குகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்திய பணக்காரர்களைக் கவரும் பொருட்டு டுகாட்டி நிறுவனம் இந்த விலை உயர்ந்த புதிய பைக்கை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு பைக் காதலர்களான நடிகர் அஜித் மற்றும் ஜான் ஆபிரகாம் போன்ற பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 29, 2024, 20:44 [IST]
English summary
Ducati multistrada v4 rs launches price engine and features details
மேலும்... #ducati #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+