இந்த விஷயத்துல டாடா, ஹூண்டாய் கார்களே தோத்திடும் போல... டுகாட்டி பனிகேல் வி2 பிளாக் அறிமுகம்!
கார்களுக்கே சவால்விடும் வகையில் ஓர் பைக்கை டுகாட்டி (Ducati) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பனிகேல் வி2 பிளாக் சூப்பர் ஸ்போர்ட் பைக் (Panigale V2 Black Super Sport Bike) மாடல்தான் அதுவாகும். இந்த பைக்கை டுகாட்டி நிறுவனம் ஸ்பெஷலாக கண்ணாடி போல் மினு மினுக்கும் கருப்பு நிற பெயிண்டைக் கொண்டs அலங்கரித்து இருக்கின்றது. இத்துடன், லேசாக மாறுபட்ட தோற்றத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இதை சிவப்பு நிறத்தைக் கொண்டும் டுகாட்டி அலங்கரித்து இருக்கின்றது.
இந்த இரண்டு முரண்பாடான வண்ணங்களினால் அந்த பைக் இன்னும் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. சரி அதெல்லாம் இருக்கட்டும் இந்த கார் எந்த விஷயத்தில் டாடா மற்றும் ஹூண்டாய் கார்களுக்கே சவால்விடும் வகையில் இருக்கின்றது என்பதை சொல்லுங்கன்றீங்களா.. அது வேறு ஒன்னும் இல்லைங்க இந்த பைக் விலையிலேயே கார்களுக்கே சவால்விடும் வகையில் உள்ளது.

டுகாட்டி, அறிமுகமாக இந்த சூப்பர் ஸ்போர்ட் பைக் மாடலுக்கு ரூ.20.98லட்சம் விலையை நிர்ணயம் செய்திருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் டாடா நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றான நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் மாடலான கிரெட்டா, இந்த இரண்டைக் காட்டிலும் மிக மிக அதிக விலையைக் கொண்டதாகவே டுகாட்டியின் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இந்த பைக்கிற்கு தற்போது புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் மற்றும் ஷோரூம் வாயிலாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த புதிய வேரியண்ட், டுகாட்டி ரெட் பதிப்பை விட ரூ. 30 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேவேளையில், மற்ற மாடல்களைக் காட்டிலும் இது பலமடங்கு அழகமானதாகக் காட்சியளிக்கின்றது. முழுக்க முழுக்க கருப்பு நிறத்தாலும், அதேவேளையில், ஆங்காங்கே சிவப்பு நிறத்தையும் இந்த பைக்கில் டுகாட்டி பயன்படுத்தி இருக்கின்றது. சிவப்பு நிறத்தை வீல், ஃப்யூவல் டேங்க், வீல் உள்ளிட்ட பகுதிகளில் பார்க்க முடிகின்றது.
இந்த பைக்கில் 955 சிசி திறன் கொண்ட லிக்யூட் கூல்டு, எல் ட்வின் எஞ்சினே பொருத்தப்பட்டுள்ளது. இது ஓர் உயர் செயல்திறன் கொண்ட மோட்டார் ஆகும். இது அதிகபட்சமாக 10,750 ஆர்பிஎம்மில் 155 பிஎச்பி பவரையும், 9,000 ஆர்பிஎம்மில் 104 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
இந்த எஞ்சின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைந்து பணியாற்றுகின்றது. மிகவும் த்ரில்லான பயணத்தை இந்த எஞ்சின் உறுதி செய்கிறது. எஞ்சின் விஷயத்தில் மட்டுமில்லை இன்னும் பல விஷயங்களில் இந்த பைக் தலை சிறந்ததாக விளங்குகின்றது. அந்தவகையில், பைக் சவாரி சுவாரஷ்யமானதாக மாற்றும் நோக்கில் பவர் மோடு, கார்னரிங் ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் எஞ்சின் பிரேக் கன்ட்ரோல் உள்ளிட்ட மேம்பட்ட எலக்ட்ரானிக்ஸ் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த அம்சங்கள் ரைடர்களுக்கு மேம்பட்ட கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பை வழங்கும். பனிகேல் வி2 ஆனது அலுமினிய மோனோகோக் சட்டகம், 43 மிமீ முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய ஷோவா யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய சச்ஸ் மோனோஷாக் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, அனைத்து விதமான சாலை மற்றும் டிராக்குகளை சமாளிக்கும் விதமாக 17 அங்குல சக்கரங்களில் பைரெல்லி டயப்லோ ரோஸ்ஸோ கோர்சா II வகை டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டயர் சிறந்த பிடிப்பு மற்றும் கையாளுதலை வழங்கக் கூடியவை ஆகும். இத்துடன் மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக 320 மிமீ டிஸ்க்கு, பிரம்போ மோனோபிளாக் எம்4.32 காலிபர்களுடன் வழங்கப்பட்டுள்ளன.
முன்பக்கத்திலேயே இத்தகைய பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல் பின் வீலில் 245 மிமீ டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மிக சிறந்த நிறுத்த அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டவை ஆகும். இந்த பைக்கின் வருகையால் கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-10ஆர் (Kawasaki Ninja ZX-10R) போன்ற பைக் மாடலுக்கு தலைவலியாக அமைந்திருக்கின்றது.
ஆமாங்க, இந்த பைக்கிற்கு போட்டியாகவே டுகாட்டி தன்னுடைய பனிகேல் வி2 பிளாக் தேர்வை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுதவிர, பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் (BMW S 1000 RR) மாடலுக்கும் இதன் வருகை போட்டியாக அமைந்திருக்கின்றது. இந்த பைக்கிற்கு இந்தியாவின் சூப்பர் பைக் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டுகாட்டி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் இந்த பைக்கின் விலையில் செகண்ட் ஹேண்டில் ஓர் சொகுசு காரையே வாங்கிவிட முடியும். அதேவேளையில், பிராண்ட் நியூ கிரெட்டா, நெக்ஸான் மற்றும் எக்ஸ்யூவி700 போன்ற கார் மாடலையும் வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








