ஒரு பங்களா வீட்டின் விலையில் புது டுகாட்டி பைக்!! உங்களால் யோசிக்கவே முடியாத வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகம்!
டுகாட்டி (Ducati) நிறுவனம் அதன் மை23 ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. நம் நாட்டில் மற்றுமொரு விலையுயர்ந்த டுகாட்டி பைக்காக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
உலகின் லக்சரி மோட்டார்சைக்கிள் நிறுவனங்களுள் ஒன்று டுகாட்டி ஆகும். இந்தியாவில் நிறைய பைக்குகளை விற்பனை செய்து வரும் டுகாட்டி நம் நாட்டு சந்தையில் புதியதாக மேம்படுத்தப்பட்ட மை23 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பிரபலமான டுகாட்டி பனிகளே வி4 பைக்கின் நேக்டு வெர்சனாக ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 விளங்குகிறது.

'ஃப்ளைட் ஃபார்முலா' என்கிற கான்செப்ட்டில் இருந்து டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக் வடிவமைக்கப்பட்டு, முதன்முதலாக கடந்த 2020ஆம் ஆண்டில் முதல் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், இந்த டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கிற்கு சிறப்பான வரவேற்பு உலகம் முழுவதும் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், புதிய டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் முன்பக்கத்தில் ஃபுல்-எல்இடி விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன், பைக்கின் முன்பக்கத்தில் V-வடிவில் டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 16.5 லிட்டர்கள் கொள்ளளவில் உள்ள இந்த பைக்கின் பெட்ரோல் டேங்கிற்கு புதிய சைடு கவர்கள் வழங்கப்பட்டுள்ளன. பளபளப்பான ஃபினிஷிங்கில் அடர் க்ரே நிறத்தில் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக் உள்ளது.

புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கில் முக்கிய அம்சமாக வெட் ரைடிங் மோட் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ரைடிங் மோடில் செல்லும்போது வழுக்கக்கூடிய பாதைகளிலும் பைக்கிற்கு சிறந்த பிடிமானம் கிடைக்கும். ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்படுகின்ற இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை ஆனது விலையுயர்ந்த டுகாட்டி பனிகளே வி4 பைக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது.
இந்த டேஸ்போர்டு திரையில் 'டிராக் எவோ' என்கிற டிஸ்பிளே மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே மோடில், மோட்டோஜிபியில் பயன்படுத்தப்படும் டுகாட்டி பைக்கின் ஸ்க்ரீன் லே-அவுட்டை பெறலாம். அத்துடன், முக்கிய விபரங்களை உடனுக்குடன் வழங்குவதையும் இந்த புதிய பைக்கின் டேஸ்போர்டு திரை உறுதியளிக்கிறது. இவற்றுடன், பைக்கில் கியர் மாற்றப்படுவதை குறிக்கும் விதமாக பச்சை நிறத்தில் எல்இடி சிக்னலும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள புதிய என்ஜின் பிரேக் கண்ட்ரோல் எவோ 2 சாஃப்ட்வேர் ஆனது சிறந்த ஸ்டெபிளிட்டியையும், பிரேக் செயல்பாடுகளையும் வழங்குகிறது. டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கில் 1,103சிசி டெஸ்மோசெடிசி ஸ்ட்ராடேல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 13,000 ஆர்பிஎம்-இல் 208 எச்பி மற்றும் 123 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது.
இந்த பைக்கை அக்ராபோவிக் ஃபுல்-ரேசிங் எக்ஸாஸ்ட் குழாய் உடனும் வாங்கலாம். வழக்கமான எக்ஸாஸ்ட் குழாய்க்கு பதிலாக இந்த எடை குறைவான எக்ஸாஸ்ட் குழாயை பொருத்துவதன் மூலம் அதிகப்பட்சமாக 220 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். புதிய 2023 ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.24,62,400ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விலைமிக்க வேரியண்ட்டான வி4 எஸ் -இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.27.80 லட்சம் மற்றும் ரூ.28 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது கடந்த 2023ஆம் ஆண்டில் சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக் ஆகும். பல வெளிநாடுகளில் விற்பனையை துவங்கிவிட்ட இந்த பைக் தற்போதுதான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டுகாட்டி சிவப்பு நிறத்திலும் இந்த பைக்கை வாங்கலாம். ஆனால், புதிய 'கிரே நீரோ' என்கிற பெயிண்ட்டை ஹைலைட் படுத்தி புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









