எலெக்ட்ரிக் பைக்கிற்கு விளம்பரம் தேடி கொடுக்கும் துல்கர் சல்மான்.. நம்ம இந்திய தயாரிப்பு அந்த மாதிரி இருக்கு!

பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஓர் பதிவை சமீபத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கொஞ்சம் நாளைக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஓர் எலெக்ட்ரிக் பைக்கை தனக்கு வேண்டும் என அவர் அதில் பதிவிட்டுள்ளார். அப்படி என்ன எலெக்ட்ரிக் பைக் அது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கர்நாடகா மாநிலம் பெங்களுரூவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அல்ட்ராவைலட். இந்த நிறுவனம் கடந்த வாரம் புதன் (ஏப்ரல் 24) அன்று புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலான அல்ட்ராவைலட் எஃப்77 மேக் 2 (Ultraviolette F77 Mach 2) மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

Ultraviolette f77 mach 2

இந்த எலெக்ட்ரிக் பைக்கையே தனக்கு வேண்டும் என பிரபல நடிகரான துல்கர் சல்மான் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் வாயிலாக தான் ஓர் மிகப் பெரிய அல்ட்ராவைலட் இ-பைக்கின் ஃபேன் என்பதை அவர் வெளிக்காட்டி இருக்கின்றார். இந்த நிறுவனத்தின் ஓர் எலெக்ட்ரிக் பைக்கை துல்கர் சல்மான் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அல்ட்ராவைலட் எஃப்77 லிமிடெட் எடிசன் (Ultraviolette F77 Limited Edition) எலெக்ட்ரிக் பைக் மாடலையே துல்கர் சல்மான் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையிலேயே அல்ட்ராவைலட் நிறுவனத்தின் லேட்டஸ்ட் வருகையான எஃப்77 மேக் 2 மாடலையும் வாங்க அவர் விருப்பம் தெரிவித்து இருக்கின்றார். தற்போது இந்த எலெக்ட்ரிக் பைக் சலுகை விலையில் விற்கப்படுகின்றது.

Dulquer salmaan with ebike

ரூ. 2.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த விலையில் எஃப்77 மேக் 2 எலெக்ட்ரிக் பைக் மாடலை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒட்டுமொத்தமாக இரண்டு விதமான தேர்வுகளில் எஃப்77 மேக்2 விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஸ்டாண்டர்டு (Standard) மற்றும் ரெகான் (Recon) இவையே அந்த தேர்வுகள் ஆகும். இந்த இரண்டில் ஏதேனும் ஓர் தேர்வை துல்கர் சல்மான் விரைவில் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அவரின் இன்ஸ்டா பதிவும் அமைந்திருக்கின்றது.

இதில் மிகவும் காஸ்ட்லியான தேர்வாக ரெகான் இருக்கின்றது. ரூ. 3.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. பலதரப்பட்ட சிறப்புகளைத் தாங்கிய எலெக்ட்ரிக் பைக்காக எஃப்77 மேக் 2 காட்சியளிக்கின்றது. இதில் ஒரு நட் மற்றும் போல்ட்டுகளைக் கூட வெளிப்புறத்தில் பார்க்க முடியாது.

அனைத்தும் மறைந்த நிலையிலேயே இதில் பொருத்தப்பட்டு இருக்கும். இதுதவிர, இந்தியாவின் கடுமையான நிலபரப்புகளில் வைத்து இந்த இ-பைக்கை சோதனையோட்டத்திற்கு உட்படுத்தி, அதற்கு பின்னரே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், அந்தவகையில், 20 நாட்களில் 7 ஆயிரம் கிமீட்டர்கள் பயணம், 15 செல்சியஸ் முதல் 47 செல்சியஸ் வரையில் நிலவும் இடங்களில் பயணம் என மிகவும் கடுமையான சோதனையோட்டத்திற்கு இவை உட்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இந்த எலெக்ட்ரிக் பைக் அதிகம் ரேஞ்ஜ் தரக் கூடியதாகவும் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதன் ஸ்டாண்டர்டு தேர்வில் ஓர் முழு சார்ஜில் 211 கிலோ மீட்டர் வரையிலும், ரெகான் தேர்வில் ஓர் முழு சார்ஜில் 323 கிலோ மீட்டர் தூரம் வரையும் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதற்காக ஸ்டாண்டர்டு தேர்வில் 7.1 kWh பேட்டரி பேக்கும், ரெகான் தேர்வில் 10.3 kWh பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அலுமினியத்தால் தயார் செய்யப்பட்ட பேட்டரி பேக் இதுவாகும். மேலும், ஐபி67 தர சான்றதே இந்த பேட்டரி பேக் ஆகும். எஃப்77 மேக் 2 அதிகபட்சமாக மணிக்கு 155 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதும் கூட.

இதன் ஸ்டாண்டர்டு தேர்வு 7.8 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தையும், இதே வேகத்தை 7.7 செகண்டுகளில் ரெகான் தேர்வும் எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, ஏகப்பட்ட நவீன கால தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கியதாகவும் இந்த எலெக்ட்ரிக் பைக் காட்சியளிக்கின்றது.

ஆட்டோமோட்டிவ் லைனக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (UV Automotive Linux OS) வசதிக் கொண்ட 5 அங்குல டிஎஃப்டி திரை, டிராக்சன் கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் சிஸ்டம், ஏபிஎஸ், டிஎஸ்சி டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரைடு-பை-ஒயர், ப்ளூடூத் இணைப்பு என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, ஏஐ தொழில்நுட்பம், டெல்டா வாட்ச், ஆன்டி கொலிசன் வார்னிங் சிஸ்டம், கிராஷ் அலர்ட் உள்ளிட்ட வசதிகள் ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவை விற்பனையில் புதிய உச்சங்களை அவை எட்டிக் கொண்டிருக்கின்றன. வரும் நாட்களில் பெட்ரோல் வாகனங்களையே மிஞ்சும் அளவிற்கு அது விற்பனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 29, 2024, 11:37 [IST]
English summary
Dulquer salmaan bought a costly electric bike ultraviolette f77 mach 2
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X